தென்னை மரத்துல தென்றல் அடிக்குது
நந்தவனக் கிளியே அடியே
புன்னை வனக்குயிலே
நான் தினந்தோறும் ரசிச்சாலும்
திகட்டாது பசிக்காது
சின்னமணிக் குயிலே அடியே
உன்னை நினைக்கையிலே
(தென்னை மரத்துல)
கன்னம் சிவக்குது எண்ணம் தவிக்குது
உன்னை நினைக்கையிலே இதமா
என்னை அணைக்கையிலே
கண்ணு சிமிட்டுது என்ன விரட்டுது
மெல்லச் சிரிக்கையிலே நீதான்
என்ன ரசிக்கையிலே
உள்ளம் சிலிர்க்குது மின்னி சொலிக்குது
கட்டிப் புடிக்கையிலே நெசமா
கையைப் புடிக்கையிலே
இது அணைச்சாலும் குறையாது
அழிச்சாலும் மறையாது
சொல்லத் தெரிஞ்சிருந்தும் அதை நான்
சொல்ல முடியலையே
(தென்னை மரத்துல)
பட்டுக் கழுத்துல முத்து தெரியுது
பொண்ணு சிரிக்கையிலே அழகு
கண்ணைப் பறிக்கையிலே
தொட்டுத் தழுவுன்னு சொல்லி அழைக்குது
இந்த மனசினிலே ரெண்டும்
சின்ன வயசினிலே
விட்டு விலகுன்னு வெட்கம் தடுக்குது
போக முடியலையே எனக்கு
ஏதும் புரியலையே
நான் பாய் போட்டு படுத்தாலும்
பாலாகக் குடிச்சாலும்
தூக்கம் புடிக்கலயே எனக்கு
ஏதும் ருசிக்கலையே
(தென்னை மரத்துல)
சின்னஞ்சிறுசுக கொஞ்சிக் குலவுது
அந்திப் பொழுதினிலே ஊஞ்சல்
ஆல விழுதினிலே
கன்னி வயசுல பொண்ணு சிரிக்குது
என்ன சுகம் அதிலே நெனச்சு
ஏங்கித் தவிப்பதிலே
இன்ப நெனப்புல வெந்து தவிக்குது
பட்டப் பகலினிலே கொளுத்தும்
உச்சி வெயிலினிலே
இது தானாக ஆறாது
தழுவாம தீராது
ஒண்ணும் புரியலையே புரிஞ்சும்
சொல்லத் தெரியலையே
(தென்னை மரத்துல)
படம்:லட்சுமி
இசை: இளையராஜா
பாடல்: ஆலங்குடி சோமு
பாடியவர்கள்: இளையராஜா, பி.சுசீலா
***
விரும்பிக் கேட்டவர்: ஜிரா
Wednesday, September 10, 2008
694. தென்னை மரத்துல தென்றல் அடிக்குது
பதிந்தவர் கப்பி | Kappi @ 11:55 AM
வகை 1970's, P சுசீலா, ஆலங்குடி சோமு, இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
Dear kappi,
Thanks for the beautiful song.
With Love,
Usha Sankar.
அடா அடா அடா என்ன அருமையான பாட்டுய்யா...இளையராஜா இளையராஜா...எங்கய்யா போன?!?!
இசையரசி பி.சுசீலா பாடுன இந்தப் பாட்டைக் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றிங்க. :)
Post a Comment