அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா.. ஆஆஆஆ
ஏங்க வைப்பதும் ஒரே நிலா
அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா
காதல் தந்தது வண்ண நிலா
களங்கமில்லாக் கன்னி நிலா
மேகம் மூடிய வெள்ளி நிலா..
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா..ஆஆஆஆ
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா
பேசச் சொன்னது அன்பு நிலா
பிரியச் சொன்னது துன்ப நிலா
தூங்க சொன்னது காதல் நிலா
துடிக்க விட்டது கால நிலா.. ஆஆஆஆ
துடிக்க விட்டது கால நிலா
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா
படம்: பெரிய இடத்துப் பெண்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
Monday, September 8, 2008
690. அன்று வந்ததும் அதே நிலா
பதிந்தவர் MyFriend @ 12:14 PM
வகை 1960's, P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
சில பாட்டுகள் என்றும் இளமையாகவே இருந்துவிடுவதுண்டு. இந்தப் பாடலும் சிறந்த எடுத்துக் காட்டு. கவிதையும் இசையும் மட்டுமல்லாது பாடியவர்கள் குரலும் திறமையும். அந்த வகையில் அன்று வந்ததும் அதே பாட்டு. இன்று வந்ததும் அதே பாட்டு. என்று உள்ளது அதே பாட்டு.
இதன் முழு வீடியோவும் எங்கே கிடைக்கும்னு சொல்லுங்களேன் :-) ஒரு நடன ஏற்பாடுக்குத் தேவைப்படுகிறது. நன்றி...
"பாவாடை தாவணியில் பார்த்த உருவமா " இது எனது பிடித்த பாடல்
Post a Comment