நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
காவேரியா கானல் நீரா பெண்மை எது உண்மை
முள்வேலியா முல்லைப் பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட
கூடாதென கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரேயொரு வார்த்தை சொன்னாலென்ன தேனே
ஒரேயொரு பார்வை தந்தாலென்ன மானே
ஆகாயம் காணாத மேகம் ஏது கண்ணே
(நிலாவே வா செல்லாதே வா...)
படம்: மௌனராகம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
Monday, September 15, 2008
699. நிலாவே வா செல்லாதே வா
பதிந்தவர் MyFriend @ 2:55 PM
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, மணிரத்னம்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
Arumai Arumai Manathai Mayil iragal vaadum uNarvu, Pathirvukku mikka nandri >> covai ravee
@கோவை ரவி::
ஆமாஅ ரவி.. மௌன ராகத்துல வர்ற பாடலெல்லாம் சூப்பர். அதுவும் இந்த பாடலில் பாலாவின் குரல் அப்படியே நீங்க சொன்ன மாதிரி மயில் இறகால் வருடும் உணர்வுதான். :-)
Post a Comment