Sunday, September 21, 2008

720. நான் பேச நினைப்பதெல்லாம்


<p><a href="undefined?e">undefined</a></p>

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
(நான் பேச)

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
(நான் பேச)

படம்: பாலும் பழமும்
இசை: MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: ஸ்ரீ

4 Comments:

ஆயில்யன் said...

//சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
//

சூப்பரூ :))

Anonymous said...

//நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்//

Awesome lines. love them.

Thanks for the post

MyFriend said...

@ஆயில்யன்:

ஆமா. வரிகள் அருமை :-)

@ஸ்ரீ:

உங்கள் இன்னொரு விருப்பப் பாடல் நாளை விஸ்வநாதன் வாரத்தில் ஒலி/ஒளிப்பரப்பப்படும். :-)

சூழ்நிலை கைதி said...

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை...செம

Last 25 songs posted in Thenkinnam