Monday, September 29, 2008

729. வாரணம் ஆயிரம் - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை


<p><a href="undefined?e">undefined</a></p>

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா
வரிகள்: தாமரை

6 Comments:

Anonymous said...

வரிகள் நன்றாக உள்ளது.. பாடல் இன்னமும் கேட்கவில்லை!!!

Unknown said...

// இனியவள் புனிதா said...
வரிகள் நன்றாக உள்ளது.. பாடல் இன்னமும் கேட்கவில்லை!!!//

Repeatuuuuuuuu..!! :))

Subash said...

பாடல் ரிலீசிலிருந்து அடிமையாகிவ்ட்டேன்!!!!!!

MyFriend said...

@புனிதா:

பாடலையும் கேளுங்க. கண்டிப்பாக பிடிக்கும்.. ;-)

@ஸ்ரீமதி:

அப்போ நானும் அவங்களுக்கு நான் போட்ட பதிலை உங்களுக்கு ரிப்பீட்டு போட்டுக்குறேன். ;-)

@சுபாஷ்:
ம்ம்.. ஆமாம். முந்தினம் பார்த்தேனே, ஓ ஷாந்தி பாடல்களும் அருமை. வரிகள் கூடிய சீக்கிரத்தில் தேன்கிண்ணத்தில் எதிர்ப்பாருங்கள். :-)

சரவணகுமரன் said...

பாட்டு நல்லாருக்கு...

Anonymous said...

பாடல் மிக அருமை. ஹரிஹரனின் குரலினிமை மெய்சிலிர்க்க வைக்கிறது.
தாமரையின் வரிகளும் நன்றாக உள்ளது.
விஷுவலாகவும் பிரமாதமாக இருக்கும் என்று நம்புகிறேன். சில நொடிகள் ட்ரையலரில் பார்த்து அசந்துவிட்டேன்.
ஹாரிஸ் ஜெயராஜுக்கும் வாழ்த்துக்கள் - அருமையான மெட்டு.

Last 25 songs posted in Thenkinnam