மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா ...
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
கண்ணை விட்டு போனாலும்
கருத்தை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும்
உன்னை விட்டு போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து
இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்து பாராமல்
கலங்குவதும் நீயல்லவா
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
உன் மயக்கம் தீர்க்க வந்த
பெண் மயிலை புரியாதா
தன் மயக்கம் தீராமல்
தவிக்கின்றாள் தெரியாதா
என் உடலில் ஆசையென்றால்
என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால்
வந்தவளை வாழவிடு
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா ...
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
படம்: கற்பகம்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
வரிகள்: வாலி
Wednesday, September 10, 2008
693. மன்னவனே அழலாமா
பதிந்தவர் MyFriend @ 8:07 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment