கண்ணனுக்கு என்ன வேண்டும்
கண்ணனுக்கு என்ன வேண்டும்
தினமும் உதிக்கும் பொன்மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல்மலரோ
உன்னை எண்ணி ஏங்கித்தவிக்கும்
உள்ளம் என்னும் மலரோ
சொல்லு கண்ணா சொல்லு கண்ணா
(கண்ணனுக்கு என்ன வேண்டும்)
நதி வழி ஓர் ஓடம் போவது போலே
விதி வழி என் உள்ளம் உன் புகழ் பாடும்
தூரிகைகள் தீட்டாத ஓவியம் நீயே
பாரில் உனைப் பாடாத காலங்கள் வீணே
உன்னைப் போற்ற மண்ணின் மீது
உள்ளம் உண்டு கோடி கோடி
உந்தன் உள்ளம் என்னவென்று சொல்லு கண்ணா
(கண்ணனுக்கு என்ன வேண்டும்)
அல்லும் பகல் தோறும் உன் ஸ்ரீகிருஷ்ண கானம்
உள்ளமதில் உருகாமல் போனால் என்னாகும்
வெண்ணிலவில் நதியோரம் வேங்குழல் ஓசை
என்னையது தாலாட்ட ஏங்குது ஆசை
கீதகோவிந்த கிருஷண கிருஷணா
பாதவிந்தங்கள் போற்றி கிருஷ்ணா
யாதுமாய் நின்ற கிருஷ்ணா
(கண்ணனுக்கு என்ன வேண்டும்)
படம்: தனம்
இசை: இளையராஜா
பாடல்: விசாலி கண்ணதாசன்
பாடியவர்கள்: பவதாரிணி, ஸ்ரீராம் பார்த்தசாரதி
Sunday, September 7, 2008
687. கண்ணனுக்கு என்ன வேண்டும் - தனம்
பதிந்தவர் கப்பி | Kappi @ 8:10 AM
வகை 2000's, 2008, இளையராஜா, பவதாரினி, விசாலி கண்ணதாசன், ஸ்ரீராம் பார்த்தசாரதி
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு....
//அள்ளும்பகல்//
அல்லும்பகல் என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன்,,
நல்ல பாட்டு.
பவதாரணியும் நல்லாவே பாடியிருக்காங்க.
தமிழ்ப்பறவை
மாத்திட்டேன் தல..நன்றி!
சர்வேசன்
ஆமா தல. நன்றி!
Post a Comment