பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
ஆஆஆ ஓஓஓ ஆஹா ஓஓ
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
படம்: நேற்று இன்று நாளை
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
Thursday, September 25, 2008
725. பாடும் போது நான் தென்றல் காற்று
பதிந்தவர் MyFriend @ 4:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
ஹை,எனக்கு பிடிச்ச பாட்டு.
ஹை எனக்கும்ம்ம்ம்ம்ம் பிடிச்ச பாட்டு (உங்களூக்கு பிடிச்சது ஆச்சரியமில்லைன்னு முனுமுனுக்கறட்து கேட்குதுங்கோஓஓ)
அப்புறம் இந்தபாடலில் துவக்கத்தில் ஒரு ஹம்மிங் வருமே அது படத்தில் மட்டும் தான் வரும் இந்த பாடலில் வருதுங்களா? நான் வேலை செய்யும் இடத்தில் கேட்கமுடியாது. அந்த ஹம்மிங்குடன் பாடல் எங்கேயும் கிடைக்கல யாருக்கவது கிடைத்தால் எனக்கு அனுப்பமுடியுமா? பதிவிற்க்கு மிக்க நன்றி.
Post a Comment