அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை !
அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன் !
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாடவைத்ததும் உண்மை அல்லவா
அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்
எனக்கொரு பாடம் கேட்டுக் கொண்டேன்
உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்
எனக்கொரு பாடம் கேட்டுக் கொண்டேன்
பருவம் என்பதே பாடம் அல்லவா
பார்வை என்பதே பள்ளி அல்லவா
ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும்
இரவும் வந்தது நிலவும் வந்தது
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்
படம்: குழந்தையும் தெய்வமும்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
Tuesday, September 9, 2008
692. அன்புள்ள மான் விழியே
பதிந்தவர் MyFriend @ 1:24 PM
வகை 1960's, MS விஸ்வநாதன், P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
மிக அழகான பாடல். ஒரு கடிதத்தைப் படிப்பது போலவே காதலர் இருவர் பேசிக்கொள்கிறார்கள். அதில் இசையரசியின் இனிய குரல் சிறப்பாக குழைந்து இனிமையாக இருக்கிறது. பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
அன்புள்ள மான் விழியே.... பாடல் வாலியின் வரிகள்...கவியரசு வியந்த பாடல் இது..
சிவா.
தெற்கு கரோலினா,
அமெரிக்கா.
கடிதம் படிப்பது போன்றேயான மிதமான ராகத்துடன் மெல்மெலிசையாய் இசைமூலர் எம்.எஸ்.வி ஐயா அவர்களின் படைப்பு.இப்பாடலை விரும்பிப் பாடுவேன்.
Post a Comment