Friday, February 29, 2008

298. கண்ட நாள் முதலாய்....

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
(கண்ட நாள் முதலாய்)

நீலமயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறக்கவில்லை

கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகை தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான் (கண்ட நாள் முதலாய்)http://www.esnips.com/doc/5e77b249-de2e-44ae-95ca-7c9ebeeb2bf0/kanda-nal-muthalai
பாடியவர் : பூஜா , சுபிக்ஷா
இசை :யுவன்

297. மழை மழை புது மழைமழை மழை புது மழை மனசுக்குள் தூறுது
காதலில் நனைந்தேன்
அலை அலை புது அலை நெஞ்சுக்குள் அடிக்குது
காதலில் விழுந்தேன்
உயிரின் கருவினை முதல் முறை அறிந்தேன்
வாழ்க்கையின் ரகசியம் முதல் முறை அறிந்தேன்
(மழை..)

பனி பனி வெண்பனி உள்ளத்தில் பெய்யுது
காதலில் குளிர்ந்தேன்
சிலு சிலு தென்றல் மேனியில் உரசுது
காதலில் குளிர்ந்தேன்
உயிரின் அவஸ்தையை முதல் முறை அறிந்தேன்
வாழ்க்கையின் அவசியம் முதல் முறை அறிந்தேன்
(பனி..)
(மழை..)

மின்மினி மின்மினி கண்களில் பறக்குது
காதலில் கலந்தேன்
குளிர் குளிர் குளிரில் இருதயம் சுருங்குது
காதலில் கலந்தேன்
உயிரின் பெருமையை முதல் முறை அறிந்தேன்
வாழ்க்கையின் முழுமையை முதல் முறை அறிந்தேன்
(மின்மினி..)

படம்: சித்திரம் பேசுதடி
இசை: சுந்தர் C. பாபு
பாடியவர்: அஃப்ஸால்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

296. கொஞ்சும் மைனாக்களே

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

அட
இன்றே வரவேண்டும்
என் தீபாவளிப் பண்டிகை

இன்றே வரவேண்டும்
என் தீபாவளிப் பண்டிகை

நாளை வெறும் கனவு
அதை நான் ஏன் நம்பனும்?
நான் நட்டதும் ரோஜா
இன்றே பூக்கனும்!!

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

பகலில் ஒரு வெண்ணிலா ...ஹே..

பகலில் ஒரு வெண்ணிலா
வந்தால் பாவமா?
இரவில் ஒரு வானவில்
வந்தால் குற்றமா ?

விடை சொல்.. சொல் சொல்..
மனசுக்குள் ஜல் ஜல் ஜல்

விடை சொல்.. சொல் சொல்..
மனசுக்குள் ஜல் ஜல் ஜல்

கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு
இவை இல்லாமல் வாழ்க்கையா
நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனவுகள் பலிக்காதா ?
கனவே கைசேர வா

கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்


என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்
எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்

பரதம் தம் தம் தம்
மனசுக்குள் தாம் தோம் தீம்

பரதம் தாம் தாம் தாம்
மனசுக்குள் தாம் தோம் தீம்


பூங்காற்றைக் கொஞ்சம் கிழித்து
எங்கள் முக வேர்வை போக்கிடும்
நாளை என்பது கடவுளுக்கு
இன்று என்பது மனிதருக்கு
வாழ்வே வாழ்பவர்க்கு.


பாடியவர். சாதனா சர்கம்
வரிகள் . வைரமுத்து
இசை . ஏ.ஆர். ரகுமான்
விரும்பிக் கேட்டவர் - இம்சை அரசி
படம் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Thursday, February 28, 2008

295. உளுந்து விதைக்கையிலேபெண்: உளுந்து விதைக்கையிலே
சுத்தி ஊதக் காத்து அடிக்கையிலே
நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக் குழிப் பூத்துப் போனேன்

(உளுந்து விதைக்கையிலே)

பெண்: வெக்கப் படத்தில் கவளிக் கத்த
வளைவுப் பக்கம் கருடன் சுத்த
தெருவோரம் நிறைக்குடம் பார்க்கவும்
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
ஒரு பூக்காரி எதிர்க்க வர
பசும்பால் மாடு கடக்கிறதே
இனி என்னாகுமோ ஏதாகுமோ
இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ

(உளுந்து விதைக்கையிலே)

ஆண்: அனிச்ச மலரழகே
அச்சு அச்சு வெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடுக் கட்டி
காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டி எட்டிப் போகையிலே
விட்டு விட்டுப் போகும் உயிரே

ஒரு தடவை இழுத்து அணைச்சபடி
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே

பெண்: உன் முதுகை துளைச்ச வெளியேற
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே

ஆண்: மழையடிக்கும் உன் பேச்சு
வெயிலடிக்கும் சிறுபார்வை
உடல் மண்ணில் புதையற வரையில்
உடன் வரக் கூடுமோ

பெண்: உசுர் என்னோட இருக்கையிலலே
நீ மண்ணோடு போவதெங்கே
அட உன் ஜீவனில் நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூட கொழம்புமய்யா

ஆண்: குறுக்குச் சிறுத்தவளே
என்னைக் குங்குமத்தில் கரைச்சவளே
மஞ்சத் தேச்சுக் குளிக்கையில்
என்னைக் கொஞ்சும் பூசுத் தாயே
கொலுசுக்கு மணியா
என்னைக் கொஞ்சம் மாத்து தாயே

பெண்: ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசுர் கசிய
உன்னாலே சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோடப் போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

(குறுக்குச் சிறுத்தவளே)

படம்: முதல்வன்
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீனிவாஸ், ஸ்வர்ணலதா

294. மின்னலே நீ வந்ததேனடிமின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

(மின்னலே நீ)

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
(கண் விழித்து)
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்தே காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே நீ)

பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா?
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா?
(பால் மழைக்கு)
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா?
நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா?
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே நீ)

படம்: மே மாதம்
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்

293. நினைவோ ஒரு பறவை
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

(நினைவோ ஒரு பறவை)

ரோஜாக்களில் பன்னீர்த்துளி
வழிகின்றதேன் அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன்
அதை இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
தந்தேன் தர வந்தேன்

(நினைவோ ஒரு பறவை)

பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வைதான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான் மடிசாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்

(நினைவோ ஒரு பறவை)


படம்: சிகப்பு ரோஜாக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: கமல்ஹாசன், எஸ்.ஜானகி

Wednesday, February 27, 2008

292. பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன


Get this widget | Track details | eSnips Social DNA

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
(பார்த்தேன்..)
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உறைக்க
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன்..)

கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓட வில்லை

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

தேவதையும் பேருந்தில் வருமா
கனவா நனவா தோன்றவும் இல்லை
நல்ல வேளை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை
நெற்றி என்ற மேடையிலே
ஒற்றை முடியை ஆட வைத்தாய்
ஒற்றை முடியில் என்னை கட்டி
உச்சி வெயிலில் தூக்கிலிட்டாய்

மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன்..)

வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலை கொடு
வந்த என்னை வேண்டாம் என்றால்
என்னை அணைத்தே அணைத்தே கொன்று விடு

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

உலர்ந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓர பார்வையில் உருக விடு
என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்களாகி போனால் கூட
உன்னை தவிர இன்னொரு பெண்ணை
உச்சி மூர்ந்து பார்ப்பதும் இல்லை

மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன்..)

படம்: பார்த்தேன் ரசித்தேன்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், ரேஷ்மி
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

291. உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சக் கிளி
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா.

- (உச்சி வகுந்தெடுத்து)

( பெண் குரல் - ஏ ஆரிராரோ.. ஆரிராரோ...

ஆரிராரிராரோ ஆரிராரோ... ஆரிராரோ..

ஆரிராரோ... ஆரிராரோ.. ஆரிராரோ... )

பட்டியில மாடுகட்டி பால கறந்துவச்சா,
பால் திரிஞ்சி போனதுனு சொன்னாங்க.
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல.
அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துக்கல.

- (உச்சி வகுந்தெடுத்து)


வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ,
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க.
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை.
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல.

- (உச்சி வகுந்தெடுத்து)

( ஆண் குரல் - நானனனா நானனனாநனனா ஹேய்ய்.
நான ஹேய்ய்ய்
நானனனா நானனனானா ஹேய்ய். )


பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு,
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க.
செங்கரையான் தின்னிருக்க ஞியாயமில்ல.
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல.

-(உச்சி வகுந்தெடுத்து)

படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடியவர்: SPB
இசை : இளையராஜா
விரும்பிக் கேட்டவர் - ஐயப்பன்

290. மேகமே மேகமே பால் நிலா தேயுதே


Get this widget | Track details | eSnips Social DNA

மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே

(
மேகமே..)
தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே
(
மேகமே..)

தந்தியில்லா வீணை சுரம் தருமோ
தநிரிசா ரிமதநிச தநிபக
தந்தியில்லா வீணை சுரம் தருமே
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம் சோகங்களோ
....ஆ ஆ
பாவையின் ராகம் சோகங்களோ
நீரலை போடும் கோலங்களோ
(
மேகமே..)

தூரிகை எறிகின்றபோது இந்த
தாள்களில் ஏதும் எழுதாது
தினம் கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்
எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்
அதை எதற்கோ
... ...
(
மேகமே..)

படம்: பாலைவனச் சோலை
இசை
: கங்கை அமரன்
பாடியவர்
: வாணி ஜெயராம்

விரும்பி கேட்டவர்: புதுகைதென்றல்

Tuesday, February 26, 2008

289. விழியிலே என் விழியிலே


Get this widget | Track details | eSnips Social DNA

விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தளும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரையே எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே
நான் என்னைக் காணாமல்
தினம் உன்னைத் தேடினேன்
என் கண்ணீர்த் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்
(விழியிலே..)

இமைகளிலே கனவுகளை விதைத்தேனே
ரகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேனே
இன்று வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம் தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக
சில பூக்கள் பூக்குமே
(விழியிலே..)

உள்ளிருக்கும் இதயத்துக்கு எனைப் புரியும்
யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானது இன்று சருகானது
என் உள் நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனித்திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளையாட
நாம் காதல் பொம்மையா ஹோ..
(விழியிலே..)

படம்: வெள்ளித்திரை
இசை: GV பிரகாஷ்
பாடியவர்: சித்ரா

விரும்பி கேட்டவர்: அனுராதா

288. வா வா என் வீணையே


Get this widget | Track details | eSnips Social DNA

வா வா என் வீணையே
லலா
விரலோடு கோபமா
லலா

மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா ஆஆஆஆ
கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா ஆஆஆஆ
(வா வா வீணையே...)

தண்டோடு தாமரையாட
வண்டோடு மோகனம் பாட
நான் பார்த்ததும் நெஞ்சிலே
உன் ஞாபகம் கூட
(தண்டோடு...)

துணை தேடுதோ தனிமை துயர் கூடுதோ
தடை மீறுதோ உணர்ச்சி அலை பாயுதோ
நாள் தோறும் ராத்திரி வேளையில்
ரகசிய பாஷை தாஆஆஆஆனோ

வா வா உன் வீனை நான்
தனனா
விரல் மீட்டும் வேளை தான்
தனனா
(மீட்டாமல்...)

சந்தோசம் மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்த்ததோ இன்னமும்
இந்த நாடகம் போட
(சந்தோசம்...)

இரவாகலாம் இளமை அரங்கேறலாம்
உறவாடலாம் இனிய ஸ்வரம் பாடலாம்
கேட்காத வாத்திய ஓசைகள்
கேட்க்கையில் ஆசைகள் தீ..ரு..ம்
(வா வா என் வீணையே...)
(வா வா உன் வீனை நான்..)

படம்: சட்டம்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

விரும்பி கேட்டவர்: விவேகானந்தன்

Monday, February 25, 2008

287. அகர முதல அழியா பொருளே

அகர முதல அழியா பொருளே
ஆயர் குளமே நேர் கரமே
இதமும் பரமும் இணையும் இடமே
தீதல் மறவ இதய தவமே
உலக குடையே உயிரின் தலையே
ஊதும் குழலின் வேத்ஹ பொருளே
எறியும் கணலில் தெரியும் குணலே
ஏழை மனதில் வாழும் அருளே
(அகர முதல..)

கீதாச்சாரிய கிருஷ்ணா சரணம்
வேதாச்சாரிய வேந்தே சரணம்
தேவகி மைந்தா சிரியேன் சரணம்
யசோதக்குமாரா அடியேன் சரணம்
உன்னை விட்டொரு உறவுகள் இல்லை
என்னை விட்டொரு இனியவன் இல்லை
நம்மை விட்டொரு நண்பர்கள் இல்லை
நன்மையில் உன் போல் நாயகன் இல்லை

பொய்யா மொழியே பொங்கும் நிலவே
பூமிக்குடையின் காவல் பொருளே
(பொய்யா மொழியே..)
ஆற்றன் பணியும் பாதம் காக்க
பாஞ்ச ஜலியும் பக்தனை காக்க
மூடர்கள் தமையும் கோகன காக்க
முள்ளில் மலராய் முளைதோன் காக்க
வாடும் உயிரை மன்னவர் காக்க
தேடும் விழியை திருமாள் காக்க
(அகர முதல..)

AharaMuthalaAzhiya-Sujatha, Karthik
AharaMuthalaAzhiya...
Hosted by eSnips

இங்கேயும் கேட்கலாம

ஆல்பம்: ஆண்டவன் ஆத்மா ஆண்மீகம்
இசை: லதா ரஜினிகாந்த்
பாடியவர்கள்: சுஜாதா, கார்த்திக்

விரும்பி கேட்டவர்: மணி வேலன்

286. காற்றில் வரும் கீதமே


Get this widget | Track details | eSnips Social DNA

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிருக்கு ஆ..
வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் ஒரு அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் ஏது சொல் தோழி

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

படம்: ஒரு நாள் ஒரு கனவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், பவதாரினி, சாதனா சர்கம்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

Sunday, February 24, 2008

285. ரவிவர்மன் எழுதாத கலையோஇங்கு வீடியோ பார்க்கலாம்

லலலால லலலால லலலா
லலலால லலலால லலலா
லலலால லலலால லலலாஆஆஆ

ரவிவர்மன் எழுதாத கலையோ
அஹஹா
ரதி தேவி வடிவான சிலையோ
அஹஹா

கவி ராஜன் எழுதாத கவியோ ஓஹோ
கரை போட்டு நடக்காத நதியோ
ஓஓஓஓ
ம்ம்ம்ம்

[ரவிவர்மன்...]

விழியோர சிறு பார்வை போதும்
நாம் விளையாடும் மைதானம் ஆகும்
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாற மணப்பந்தலாகும்
கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே
கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே
[ரவிவர்மன்...]

பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்
மகராணி போலுன்னை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்
என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்
அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்
[ரவிவர்மன்...]

இசை: சந்திரபோஸ்
பாடியவர்: K.J. யேசுதாஸ், சித்ரா
படம்: வசந்தி

பாடலை விரும்பிக்கேட்டர்: இராம்/Raam

284. என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா


Get this widget | Track details | eSnips Social DNA

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா.. அடடா..
(என்ன சத்தம்..)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லை
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ
(என்ன சத்தம்..)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுமே
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
மங்கையிவள் வாய்த்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓசையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள் இரு பூங்கொடிகள் இளம் காதல் மான்கள்
(என்ன சத்தம்..)

படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

283. கண்டேன் கண்டேன் - பிரிவோம் சந்திப்போம்

Get this widget | Track details | eSnips Social DNA


ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள்
எதிரே எதிரே..

பெ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: மோதும் மோதும்
கொலுசொலி ஏங்கும் ஏங்கும்
மனசொலியை பேசுதே...

பெ: போதும் போதும்
இதுவரை யாரும் கூறா
புகழுரையே கூசுதே...

ஆ: பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி
பெ: பேசாது போனாலும் நீ என் சங்கதி

ஆ: கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை
விக்கல் முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில் வரை
அவளை அவளை அவளை அவளை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
ஆ: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெ: காணும் காணும்
இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதைபடி...

ஆ: ஏதோ ஏதோ
ஒருவித ஆசை தோன்ற
தனிமையிது கொடுமையடி

பெ: நீங்காமல் நாம் சேர நீளமாகும் இன்பமே
ஆ: தூங்காமல் கைசேர காதல் தங்குமே

பெ: ரெட்டைகிளி அச்சத்திலே
நெஞ்சுக்குழி வெப்பத்திலே
சுட்டித்தனம் வெட்கத்திலே
அடடா அடடா அடடா அடடா

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
பெ: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்

பெ: எட்டித் தொட நிற்கும் அவன்
எதிரே எதிரே..

ஆ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட

பெ: போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

படம் : பிரிவோம் சந்திப்போம்
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : கார்த்திக், ஸ்வேதா

விரும்பி கேட்டவர்:
விவேகானந்தன்

282. சுட்டும் சுடர்விழி பார்வையிலே
சுட்டும் சுடர்விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி

நிலவைப் பொட்டு வைத்து
பவழப்பட்டும் கட்டி
அருகில் நிற்கும் உன்னை
வரவேற்பேன் நான் வரவேற்பேன் நான்

சித்திரப் பூவே பக்கம் வர சிந்திக்கலாமா
மன்னனை இங்கே தள்ளி வைத்து தண்டிக்கலாமா

(சுட்டும் சுடர்விழி)

உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன்
மின்மினிகளில் நம் நிலவினைத் தேடுவேன் தேடுவேன்(2)
உன் சந்தங்களில் நனையுதே மெளனங்கள் தாகமாய்
மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய்
என்றும் உனை நான் பாடுவேன் கீதாஞ்சலியாய்
உயிரே உயிரே ப்ரியமே சகி

சுட்டும் சுடர்விழி நாள்முழுதும் தூங்கலையே கண்ணா
தங்க நிலவுக்கு ஆரிரரோ பாட வந்தேன் கண்ணே

இருவிழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய்
உள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்
விண்ணுலகம் எரியுதே பெளர்ணமி தாங்குமா
இங்கு எந்தன் சூரியன் பாலையில் தூங்குமோ
கனவில் உனை நான் சேர்ந்திட இமையே தடையா
விரிந்தால் சிறகே இங்கு சிலுவையா

(சுட்டும் சுடர்விழி பார்வையிலே)


படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
பாடியவர்: M.G.ஸ்ரீகுமார், சித்ரா

விரும்பிக் கேட்டவர்: கோபிநாத்

Friday, February 22, 2008

281.காதலெனும் வடிவம் கண்டேன்...

முன்பெல்லாம் இலங்கை வானொலியில் இருந்து அப்படியே பாடல்களை என் விருப்பத்திற்கு கேசட்டில் பதிவேன் .அப்படி பதிந்து ரசித்தப் பாடல்களில் இதுவும் ஒன்று.
--------------------------------------------------

காதலெனும் வடிவம் கண்டேன்..
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன்..
ஆசைக்கன்னி....
( காதலெனும்)

ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ
ஆஅ ஆஹா ஆஹாஅ ஆ ஆ

துள்ளாமல் துள்ளும் உள்ளம்
மின்னாமல் மின்னும் கன்னம்(2)
தொட்டவுடன் மேனி எல்லாம்
துவண்டுவிடும் கொடியைப்போல
( காதலெனும்)
ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ
ஆஅ ஹா ஹாஅ ஆ ஆ

நாளெல்லாம் திருநாளாகும்
நடையெல்லாம் நாட்டியமாகும் (2)
தென்றலெனும் தேரின் மேலே
சென்றிடுவோம் ஆசையாலே
( காதலெனும்)

திரைப்படம் : பாக்யலக்ஷ்மி
பாடியவர் : பி.சுசீலா
இசையமைத்தவர்: எம்.எஸ்.வி

<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Bhagyalakshmi.html?e">Listen to Bhagyalakshmi Audio Songs at MusicMazaa.com</a></p>

280. Tooth paste இருக்கு brush இருக்கு


Get this widget | Track details | eSnips Social DNA

Good morning..
Today you are my baby
Tooth paste இருக்கு brush இருக்கு எழுந்திரு மாமா
shower bath இருக்கு towel இருக்கு குளிச்சிரு மாமா
தோசை roast இருக்கு டீ இருக்கு குடிச்சிடு மாமா
(Toothpaste)

என் போல் யார் காவலன்
நாந்தான் உன் சேவகன்
(என் போல்..)
உயிரெல்லாம் உன் வசம் வைத்தவன்
உயிரெல்லாம் உன் வசம் வைத்தவன்
நான் தேடும் செல்வம் நீதானே கண்ணே
எனக்காக இங்கே உருவான பொன்னே
I love you my dear
Is it?
I love you my dear
என் கண்மணியே பொன்மணியே என் உயிர் ராஜா
உன் புன்னகையும் பூமுகமும் பொன்னிற ரோஜா
உன்னை ரொம்பவும்தான் புடிச்சிருக்கு my dear uncle
என் கண்மணியே பொன்மணியே என் உயிர் ராஜா
உன் புன்னகையும் பூமுகமும் பொன்னிற ரோஜா

நீதான் என் சொந்தமே
ஏதோ ஓர் பந்தமே
நீதான் என் சொந்தமே
ஏதோ ஓர் பந்தமே
உனது தாய் எனக்கும் ஓர் உறவுதான்
உனது தாய் எனக்கும் ஓர் உறவுதான்
நாந்தானே இங்கு அவள் போற்றும் தம்பி
நாள்தோறும் வாழ்வேன் அது போல நம்பி
You are right my dear
Certainly Darling
You are right my dear
என் கண்மணியே பொன்மணியே என் உயிர் ராஜா
உன் புன்னகையும் பூமுகமும் பொன்னிற ரோஜா
உன்னை ரொம்பவும்தான் புடிச்சிருக்கு my dear uncle
என் கண்மணியே பொன்மணியே லாலலலாலா
லலலாலலால லாலலலா லாலலலாலா

படம்: ரங்கா
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்கள்: S ஜானகி, SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்டவர்கள்: ஆஷிஷ் அம்ருதா

Thursday, February 21, 2008

279. உன் பார்வையில் ஓராயிரம்

அசல்:

கல்லூரி படத்திலிருந்து:

Amman Kovil Kizhak...

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
(உன் பார்வையில்)

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் (2)
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ
(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் (2)
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
(உன் பார்வையில்)

படம்: அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

விரும்பி கேட்டவர்: பாலாஜி

278. சிவகாமி நினைப்பினிலேஆண்: சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன்
பெண்: அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன
ஆண்: முக்கனியே சர்க்கரையே ஒத்தையிலே நிக்கறியே
பெண்: வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

(சிவகாமி நினைப்பினிலே)

ஆண்: ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு பேசுமா இல்லை ஏசுமா
ஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக்கூடுமா விட்டு ஓடுமா
பெண்: கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம கேட்கவா என்னைப் பார்க்கவா
காலம் கடத்தாமல் கையோடு கையாக சேர்க்கவா மையல் தீர்க்கவா
ஆண்: போதும் இது போதும் இந்த பிறவியில் வேறொன்றும் வேண்டாமே
பெண்: மோதும் அலை மோதும் நெஞ்சக் கடலில் ஆசைகள் ஓயாம
ஆண்: வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

பெண்: அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன
ஆண்: சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன்
பெண்: எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே
ஆண்: வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

பெண்: காதல் கடுதாசி கண்ணால இந்நேரம் போட்டது வந்து சேர்ந்தது
கூடிக் கலந்திட கும்மாளம் இப்போது தோணுது பொண்ணு நாணுது
ஆண்: தேனும் தினை மாவும் தின்னாம நின்னாலே தாங்குமா பசி நீங்குமா
தேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில் சேருமா சுகம் மீறுமா
பெண்: பேசி வலை வீசி இந்த மனசுல போதைய ஏத்தாதே
ஆண்: ராசி நல்ல ராசி நம்ம பொருத்தத்தை நீயென்றும் மாத்தாதே
பேண்: இப்ப என்னவோ என்னவோ என்னவோ
என்னைப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே

(சிவகாமி நினைப்பினிலே)

படம்: கிளிப் பேச்சுக் கேட்கவா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், ஜானகி

விரும்பிக் கேட்டவர்: உண்மைத்தமிழன்

277.ஒரு பாடல் நான் கேட்டேன்...

பெண்:ம்.. ம்.. ம்.. ம்....
ஒரு பாடல் நான் கேட்டேன்....
உன் பாசம் அதில் பார்த்தேன் ,
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்

லா ல லா ல லா லா லா

நான் பார்க்கும் இடம் எல்லாம்
கண்ணில் நீ இன்றி வேறில்லை
என் வாழ்க்கையின் ஆதாரம்
எந்த நாளிலும் நீயாகும்
நீ அன்பெனும் ஜீவநதி
என் ஆலய தீபம் நீ

ஆண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்

நீ பாயும் நதி ஆனாய்
உன்னை தாங்கும் கரை ஆனேன்
என் வாழ்க்கையில் நீ பாதி
உன் வாழ்க்கையில் நான் பாதி

என் கண்களில் சமுத்திரங்கள்
அதில் காண்பது நம்பிக்கைகள்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்..

என் கண்கள் உறங்காது
உன் பூமுகம் காணாது
பெண்: நான் வாழ்வதும் உன்னாலே
ஆண்: நீ காத்திடும் அன்பாலே
பெண்:என் ஆயிரம் ஜென்மங்களும்

ஆண் : உன் அன்பினை நான் கேட்பேன்

பெண்: வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்

இருவரும் :ஒரு பாடல் நான் கேட்டேன்
உன் பாசம் அதில் பார்த்தேன்..
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்
ஒரு பாடல் நான் கேட்டேன்.................

276. இன்னிசை அளபெடையே


அச்சில் வார்த்த பதுமையும் நீயே
தச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
அச்சில் வார்த்த பதுமையும் நீயே
தச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இருக்கையை விடுத்து இறக்கையும் சிலிர்த்து
இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க
சதுரிட வா அமுதே அமுதே சதுரிட வா அமுதே

(அச்சில் வார்த்த பதுமையும் )


இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே

எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்
எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்
சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்
முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்

உன் அழகால் தூண்டிவிடு என் அழகை ஆண்டுவிடு
முத்தத்தால் கொன்றுவிடு மூச்சு மட்டும் வாழவிடு


(இன்னிசை அளபெடையே)


படம்: வரலாறு
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: நரேஷ் ஐயர், மஹதி

Wednesday, February 20, 2008

275. ஏதோ மோகம் ஏதோ தாகம்பெண்: ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே

ஆண்: ஏதோ மோகம் ஏதோ தாபம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே

பெண்: தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு

ஆண்: பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

(ஏதோ மோகம்)

ஆண்: பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து

பெண்: அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது

(ஏதோ மோகம்)

படம்: கோழி கூவுது
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கிருஷ்ண சந்தர், ஜானகி

274. அந்தி மழை பொழிகிறது


Rajaparvvai - Anth...

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே றுமையிலே
எத்தனை நாளடி இள மயிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே
(அந்தி மழை பொழிகிறது)

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும்போதே வேர்கின்றது
நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு
தாவணி விசிரிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
(அந்தி மழை பொழிகிறது)

படம்: ராஜபார்வை
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்டவர்: விவேகானந்தன்

273. அகரம் இப்போ - சிகரம்அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி

(அகரம்...)

கார்காலம் வந்தாலென்ன கடுங்கோடை வந்தாலென்ன
மழை வெள்ளம் போகும்.. கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை
இன்றென்பது உண்மையே..
நம்பிக்கை உங்கள் கையிலே..

(அகரம்...)

தண்ணீரில மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியார பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை
தலைகோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது..
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது...

(அகரம்...)

படம் : சிகரம்
இசை : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்

விரும்பி கேட்டவர் : புதுகைத்தென்றல்

272. கண் மூடி திறக்கும் போது


Sachin - Kanmoodi ...

கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல..
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே..
குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல..
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே..
தெருமுனையை தாண்டும் வரையும்..வெறும் நாள் தான் என்றிருந்தேன்..
தேவதையை பார்த்ததும் இன்று..திருநாள் என்கின்றேன்...
அழகான விபத்தில் இன்று ஹய்யோ நான் மாட்டிக்கொண்டேன்..
தப்பிக்க வழிகள் இருந்தும் ம் வேண்டாம் என்றேன்...

ஓஓஓஓஓஓ ஓஓஓஒஓஓஓ

உன் பெயரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே..
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா..
நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன்..
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா..
உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா..
இதயத்தில் மலையின் கனையை உணர்கின்றேன் காதல் இதுவா..
(கண் மூடி திறக்கும் )


வீதி உலா நீ வந்தால் தெரு விளக்கும் கண் அடிக்கும்...
வீடு செல்ல சூரியனும் அடம் பிடிக்குமே..
நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டுப் பார்க்கத்தான் மழை குதிக்குமே..
பூகம்பம் வந்தால் கூட ஓ ஓ பதறாத நெஞ்சம் எனது..
பூ ஒன்று மோதியதாலே ஓ ஓ பட்டென்று சரிந்தது இன்று..
( கண் மூடி திறக்கும்)

படம்: சச்சின்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: தேவிஸ்ரீ பிரசாத்

விரும்பி கேட்டவர்: பாலாஜி

Tuesday, February 19, 2008

271. அழகு நிலவே - பவித்ரா
அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே

(அழகு...)

சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது?
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது?
அன்பு தான் தியாகமே
அடைமை தான் தியானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே

(அழகு...)

பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூமுகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழ்வேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் என்தன் கண்ணீர் துளிகளே

(அழகு...)

விரும்பிக் கேட்டவர்: அன்புத் தோழி .:: மை ஃபிரண்ட் ::.

படம்: பவித்ரா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: சித்ரா

Monday, February 18, 2008

270.மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு..

அந்தகாலத்தில் பாட்டே பெரிய பாட்டாகத்தா இருக்கும்.. இருந்தும் அதிலும் ஒரு ஒரு வரியையும் இரண்டு முறை பாடி ஆகா ..ஆனால் இனிமையான பாடல் என்பதால் நீளம் ஒரு பொருட்டாக படவில்லை.
திரைப்படம்ம்: அம்பிகாபதி
பாடியவர்கள்: டி.எம்.எஸ்.,, பானுமதி
--------------------------

ஆண்: மாசிலா நிலவே நம்
காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே! - கண்ணே!
மாநிலம் கொண்டாடுதே!
பெண்: பேசவும் அரிதான ப்ரேமையின் திறம் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே! - கண்ணா
பேதங்கள் பறந்தோடுதே!
(மாசிலா நிலவே நம் )
ஆண்: சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி(2)
தீபமாய் ஒளிவீசுதே கண்ணே!
தீபமாய் ஒளிவீசுதே!
பெண்: மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம்நீட்டி (2)
மௌனமாய் நம்மை வாழ்த்துதே கண்ணா!
மௌனமாய் நம்மைவாழ்த்துதே!
(மாசிலா நிலவே)
ஆஆஆ அ ஆ
ஆஆஆ அ ஆ
ஆஆஆ அ ஆ
ஆண்: அன்பே
பெண்: இன்பம்
ஆண் : எங்கே ?
பெண்: இங்கே!
ஆண் :மாறாத பேரின்ப நீராடுவோம்.
பெண் ; நீரோடு நீர்போல நாம் கூடுவோம்.
அன்பே இன்பம் எங்கே இங்கே
மாறாத பேரின்ப நீராடுவோம்.....


ஆண் : நீந்தும் அலையின் மீது நிலவின் தன்னொளி விளையாடுதே(2)
பெண் : தேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே(2)
ஆண் : உந்தன் நீள்விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே(2)
பெண் : ஆணெழில் முகம் வான்மதியென அல்லியும் உனை நாடுதே(2)

பெண் : வானம் எங்கே? பூமிஎங்கே ?
வாழ்வு தாழ்வெங்கே?
ஆண் : காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே?
பெண் : வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே (2)
ஆண் : கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை (2)

பெண்:இனி நானும் வேறில்லை
ஆண்: இனி நானும் வேறில்லை
பெண்:இனி நானும் வேறில்லை
ஆண்: இனி நானும் வேறில்லை
இருவரும்: இனி நானும் வேறில்லை (2)

-----------------------
ஒரு பாட்டை மட்டுமாக தனியாக இணைக்க முடியவில்லை படம் முழுமைக்குமான ஒரு இணைப்பு இதில் இரண்டாவது பாடல் மாசிலா....

Listen to Ambigapathi Audio Songs at MusicMazaa.com

269. மண்ணில் வந்த நிலவே

Youtube-ல் பார்க்கமண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
[மண்ணில் வந்த...]

அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா

நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே

எட்டி நிற்கும் வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்
[எட்டி நிற்கும்...]

விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு
[நிலவே மலரே...]
[மண்ணில் வந்த...]

புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் படக் கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் படக் கூடாது
[புன்னை இலை...]

மயில்களின் இறகினில் அழகிய விழிகளை
நீ தான் தந்தாயோ
மணிக் குயில் படித்திடும் கவிதையின் இசையென நீ தான் வந்தாயோ
[நிலவே மலரே...]
[மண்ணில் வந்த...]

நிலவே... மலரே...

விரும்பிக் கேட்டவர்: அண்ணன் நாமக்கல் சிபி

படம்: நிலவே மலரே
இசை: M.S. விஸ்வநாதன்
பாடியவர்: P.சுசீலா

Friday, February 15, 2008

268. அன்புள்ள அப்பா..

இங்கே பாடலை கேட்கலாம்.

அன்புள்ள அப்பா!
என்னப்பா?
உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா?
அப்பப்பா! பொல்லாத பெண்ணப்பா!! (2)

ம்ம்.. உங்களோடது காதல் கல்யாணம் தானே?
ofcourse... it was a love marriage!
நீங்க அம்மாவ பார்த்தது எப்போது? ஞாபகம் உண்டா இப்போது?
ம்ம்ம்... முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது மகளே!
அவளை நான் பார்த்தது...

மலர்கள் வண்டுகளுக்கு பேட்டி கொடுக்கும் ஊட்டியில்!
ஒரு மலர்க்காட்சியில்தான் அந்த நந்தவனத்தைச் சந்தித்தேன்..

அம்மா எப்படி அழகா இருந்தாங்களா?
அந்த மலர்க்காட்சியில் அழகான பூவே அவள் மட்டும் தானே?
பூக்களெல்லாம் அவள் கனிந்த முகம் காண நாணிக் கோணி குனிந்து கொண்டன...


உங்கள் மணவாழ்க்கையில் மலரும் நினைவுகள் உண்டா?
நான் தாயிடம் கூட பார்த்ததில்லை அந்த பாசம்
அவள் நினைவுகளே என் சுவாசம்!

அன்புள்ள அப்பா!
என்னப்பா?
உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா?
அப்பப்பப்பா! நாட்டி கேர்லப்பா!!

அப்பா! அம்மா உங்கள நல்லா கவனிச்சுகிட்டாங்களா?
சேலையில் எனது முகம் துடைப்பாள்
நான் சிணுங்கினால் செல்ல அடி கொடுப்பாள்
விரல்களுக்கெல்லாம் சுளுக்கெடுப்பாள்
என் நகக்கண்ணில் கூட அழுக்கெடுப்பாள்
தாயாய் அவளைப் பார்த்ததுண்டு
என் தாதியாய் அவளைப் பார்த்ததுண்டு
ஒரு தேன்குடமாய் அவளைப் பார்த்ததுண்டு
பட்... அவள் உறங்கி மட்டும் நான் பார்த்ததில்லை!

இஸிட்? அம்மா உறங்கி நீங்க பார்த்ததேயில்லையா?
பார்த்தேன் மகளே.. பார்த்தேன்
பார்த்தேன் மகளே.. பார்த்தேன்
எப்போது அவள் கடைசி உறக்கம் கொள்ள கண்மூடினாளோ
அப்போது தான் அவள் உறங்கப் பார்த்தேன்.

அப்பா?
ஆம் மகளே! நீ கண் திறந்தாய்.. அவள் கண் மறைந்தாள்
என் வானத்தில் விடிவெள்ளி எழுந்தது.. வெண்ணிலவு மறைந்தது.


படம்: அன்புள்ள அப்பா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


விரும்பிக் கேட்டவர் : அன்புத் தங்கை துர்கா

267. ஒரு கிளி உருகுதுஆனந்தக் கும்மியடி கும்மியடி
வானமெல்லாம் கேக்கட்டும்
இந்திரரும் சூரியரும் எட்டியெட்டிப் பாக்கட்டும்
தங்க ஜமுக்காளம் தரையெல்லாம் விரிச்சிருக்க
மதுர மல்லிகைப்பூ மண்டபத்தில் இறைச்சிருக்க
முத்துமனித் தோரணங்கள் வீதியெல்லாம் உயிர்த்திருக்க
அன்னங்களும் குடைப் பிடிக்கும் அலங்கார மேடையிலே
கல்யாணக் குயிலிரண்டு கச்சேரிப் பாடட்ட்டும்
கல்யாணக் குயிலிரண்டு கச்சேரிப் பாடட்ட்டும்

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா
தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா

(ஒரு கிளி உருகுது)

நிலவெரியும் இரவுகளில் ஓ மைனா ஓ மைனா
மணல்வெளியில் சடுகுடுதான் ஓ மைனா ஓ மைனா
கிளிஞ்சல்களே உலையரிசி
இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஓ மைனா ஓ மைனா

(ஒரு கிளி உருகுது)

இலைகளிலும் கிளைகளிலும் ஓ மைனா ஓ மைனா
இரு குயில்கள் பெயரெழுதும் ஓ மைனா ஓ மைனா
வயல்வெளியில் பலக் கனவை
விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஓ மைனா ஓ மைனா

(ஒரு கிளி உருகுது)

படம்: ஆனந்த கும்மி
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி

266. Mozart I Love You - Nothing But Wind

ஆல்பம்: Nothing But Wind
இசை: இளையராஜா

Thursday, February 14, 2008

265. பூவே வாய் பேசும் போதுபெண்: பூவே வாய் பேசும் போது காற்றே ஓடாதே நில்லு
பூவின் மொழிக் கேட்டுக் கொண்டு காற்றே நல்வார்த்தை சொல்லு
குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன்
என்னைத் தாண்டிப் போனால் நான் வீழுவேன்
மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்

(பூவே வாய் பேசும் போது)

பெண்: பூக்களைத் தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே
புன்னகைப் புரிந்தால் களைந்திருப்பேன் அன்பே
(பூக்களைத் தொடுத்து)
காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்
உன் சுவாசப் பாதையில் நான் சுற்றித் தெரிதுவேன்
உன் சுவாசப் பாதையில் நான் சுற்றித் தெரிதுவேன்

ஆண்: என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய்
என்ன நான் செய்வேன்

(பூவே வாய் பேசும்போது)

பெண்: நீயொரு பார்வையால் நெருங்கி விடு என்னை
நீயொரு வார்த்தையால் நிரப்பி விடு என்னை
(நீயொரு பார்வையால்)
நேசத்தினால் என்னை கொன்று விடு
உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்து விடு
என் நினைவு தோன்றினால் துளி நீரைச் சிந்திடு
என் நினைவு தோன்றினால் துளி நீரைச் சிந்திடு

ஆண்: அடி நூறு காவியம் சொல்லித் தோற்றது
இன்று நீ சொல்வது

(பூவே வாய் பேசும்போது)

படம் : 12B
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஸ் ராகவேந்திரா, மஹாலஷ்மி ஐயர்

264.அன்பே வா அருகிலே!!!

தேன்கிண்ணம் குழுவில் இணைந்ததும் முதல் பாடல் சிபி யின் விருப்பம் என்று இந்த ஆவி பாடும் பாட்டு இங்கே... சிபிக்கு ஆவிகளின் மேல் அப்படி என்னதான் ஒரு பிரியமோ? :-) {எழுதியபின் தான் தெரிந்தது அவர் கேட்டது ஜேஸுதாஸ் பாடியதாம் பரவாயில்லை இதையும் தான் கேளுங்களேன்..}
------------------------------------------------அன்பே வா அருகிலே...
என் வாசல் வழியிலே...
உல்லாச மாளிகை ..மாளிகை..
இங்கே ஓர் தேவதை ...தேவதை..
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்...
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்..
அன்பே வா அருகிலே...
என்வாசல் வழியிலே..


பொற்சதங்கை சத்தமிட...
சிற்பம் ஒன்று பக்கம்வர...
ஆசை தோன்றாதோ ....
விற்புருவம் அம்புவிட...
வட்ட நிலா கிட்டவர ..
ஆவல் தூண்டாதோ ...
வானம் நீங்கி வந்த...
மின்னற்கோலம் நானே,
அங்கம்யாவும் மின்னும்..
தங்கப்பாளம் தானே.
தினம்தினம் உனக்கென உருகிடும் என் இதயமே!


மந்திரமோ தந்திரமோ ..
அந்தரத்தில் வந்து நிற்கும்..
தேவி நான் தானே,
மன்னவனே உன்னுடைய ...
பொன்னுடலை பின்னிக்கொள்ளும்...
ஆவி நான் தானே,
என்னைச்சேர்ந்த பின்னால்..
எங்கே போகக்கூடும் ...
இங்கே வந்த ஜீவன்...
எந்தன் சொந்தம் ஆகும் ,
தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே! (அன்பேவா)
படம் : கிளி பேச்சு கேக்கவா

இசை: இளையராஜா

பாடியவர் : ஜானகி

263. ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓஓஓ! கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஓஓஓ! ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓஓஓ! கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓஓஓ! கண் மூடிக்கொண்டால்ஓஓஓஓஓஓ …

போர்களத்தில் பிறந்துவிட்டோம்
வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
ஓஓஓ! அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓஓஓ! இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓஓஓ! மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஓஓஓ! அந்த கடவுளை கண்டால்ஓஓஓஓஓஓ …

அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஓஓஓ! பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
ஓஓஓ! பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்
ஓஓஓ! கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்
ஓஓஓ! மறு பிறவி வேண்டுமாஓஓஓஓஓஓ …


படம்: புதுப்பேட்டை
இசையமைத்து பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்

Wednesday, February 13, 2008

262. பூப்பூக்கும் ஓசை


PooPookum-MinsaraK...

பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை

பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
(பூப்பூக்கும் ஓசை..)
பட்சிகளின் குக்குக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப் பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதி பாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே
பூமி ஒரு வீணை இதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லாம் அட சரிகமபதநிசரீ..
(பூப்பூக்கும் ஓசை..)

கண் தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்
கண்கானா தூரத்தில் சுதி சேறும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை
சந்தோஷ சங்கீதம்
தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்

ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே
கோரி கோரி பையா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராகே தையா
(பூப்பூக்கும் ஓசை..)

சிட் சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி
சிறகுளர்த்தும் ஓசை சங்கீதம்
கரைக்கொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து
கைத்தட்டும் ஓசை சங்கீதம்
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
சிருங்கார சங்கீதம்
முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைகள் ஓசை சங்கீதம்

ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே
கோரி கோரி பையா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராகே தையா
(பூப்பூக்கும் ஓசை..)

படம்: மின்சாரக் கனவு
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து

261. ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து


Saththam Podathey ...

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து
ஏன் என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே
என் நெஞ்சம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றது....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றது....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...
(உணவுகள்..)
(ஓ இந்த காதல்..)

காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்சும் நூல்கண்டா..
காதல் காய்ச்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்தா...
எட்டி உதைக்க எண்ணும் உள்ளம் என்ன கால் பந்தா...
கண்ணாடி என் நெஞ்சம்தானடி தானடி.....
உன் கையில் கல் இன்று ஏனடி ஏனடி
உதடுவரை ஓர் வார்த்தை உள்ளதடி
உனைக்கண்டு தேயுது தொண்டை திணருதடி
(உணவுகள்..)

பிரம்மா என் காதல் என்ன ஆகும்மென்றேனே...
வாசல் கோலமது பார்த்து நடக்க சொன்னானே...
காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே..
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே..
சொல்லாத ஆசைகள் ஏதுடி ஏதுடி .....
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏதுடி ஏதுடி .....
நஞ்சென்றால் ஹே ஒரு முறை கொல்லுமடி..
ஓஹோ உன் நினைவுகளோ பல முறை கொல்லுதடி.....
(உணவுகள்..)
(ஓ இந்த காதல்..)

படம்: சத்தம் போடாதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, அட்னான் சாமி

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

Tuesday, February 12, 2008

260. மேற்கே மேற்கே மேற்கே தான்


Kanda Naal Mudhal ...

மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக் காலம்
கடும் பனி வாடைக் காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே
ஓ மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ
மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே

கோபம் கொள்ளும் நேரம்
வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம்
மேகம் இல்லா வானம்
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா
இனி எதிரிகள் என்றே எவரும் இல்லை
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கைப்போடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவை இல்லையே
மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே

வாசல் கதவை யாரோ
தட்டும் ஓசைக் கேட்டால்
நீதானென்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ

மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
லைலைலைலைலைலைலை சூரியன்கள் உதித்திடுமே
மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ

படம்: கண்ட நாள் முதல்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், சாதனா சர்கம்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

259. காதல் கவிதைகள் படித்திடும் நேரம்


Kadhal Kavithaigal...

Yes.. I Love This Idiot!
I Love this Lovable Idiot!

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இது காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்
இதயம் இதம் மாறும் இளமை பரிமாறும்
அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்
இடம் தரும்
(காதல்..)

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்
(காதல்..)

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய் தினம் தினம்
(காதல்..)

படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

258. ஆராரிராரோ நான் இங்கு பாடஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே

(ஆராரிராரோ )

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்

( ஆராரிராரோ )

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியில்
மேலே சுழலாத பூமி நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற

(ஆராரிராரோ)

படம்: ராம்
இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
பாடல்: சிநேகன்

Monday, February 11, 2008

257. பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..


Get Your Own Hindi Songs Player at Music Plugin
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

ஏனோ ராதா இந்த பொறாமை?
யார்தான் அழகால் மயங்காதவரோ?
ஏனோ ராதா இந்த பொறாமை?
யார்தான் அழகால் மயங்காதவரோ?

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

புல்லாங்குழலிசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா?
புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா?

ராகத்திலே அனுராக மேவினால்
ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா?
ராகத்திலே அனுராக மேவினால்
ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா?

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா?
கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா?

ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ?

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?
யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?


படம் : மிஸ்ஸியம்மா(1955)
பாடியவர் : ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
இசை : ராஜேஸ்வர ராவ்
வரிகள் : டி.என்.ராமையா தாஸ்

256. ஏதேதோ எண்ணங்கள் வந்து


Pattiyal - Yedhedh...

ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போனதே
வழிதேடி மனசுக்குள் வந்து வருகை பதிவு செய்யுதே
அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது
அசைந்தது அடி மனம் அசைந்தது பார்
மிதந்தது மிதந்தது இரவென மிதந்தது
வளர்ந்தது இரு இமை வளர்ந்தது பார்
புரிந்தது புரிந்தது இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர் வரை தெளிந்தது பார்
(ஏதேதோ..)

பழகிய ருசியே பழகிய ருசியே உயிரில் உன் வாசம்
நெருங்கிய கனவே நொருங்கிய கணமே உதட்டில் உன் சுவாசம்
வேரில்லா மலர்கள் என்னை வந்து வருடியதே
காலில்லா காற்றுதான் என்னை தேடி தடவியதே
சிறகில்லா மேகமும் என்னை என்னை மோதுதே
நகமில்லா இரவுகள் என்னை மட்டும் கீரியதே
முதல் முறை தெரிந்தது முதல் முறை புரிந்தது
முதல் முறை பிறந்தது தனி உணர்வு
இது ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம்
இது ஒரு அவசியம் புது உறவு
(ஏதேதோ..)

கவனித்து நடந்தேன் கவனித்து நடந்தேன் உனக்குள் விழுந்திடவே
இமைகளை திறந்தேன் இமைகளை திறந்தேன் உடனே பறந்திடவே
யார் யாரோ சாலையில் வந்து சென்று போகட்டுமே
நீ வந்து போகையில் கண்கள் அகலம் ஆகிடுமே
திரும்பாமல் போனால் பாதி ஜீவன் தேய்விடுமே
விரும்பாமல் போனால் மொத்த ஜீவனும் சாய்ந்திடுமே
அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது
அழைந்தது அடி மனம் அசைந்தது பார்
மிதந்தது மிதந்தது இரவென மிதந்தது
வளர்ந்தது இரு இமை வளர்ந்தது பார்
(ஏதேதோ..)

படம்: பட்டியல்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ஷ்வேதா

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

Last 25 songs posted in Thenkinnam