அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு
அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
(அகரம்...)
கார்காலம் வந்தாலென்ன கடுங்கோடை வந்தாலென்ன
மழை வெள்ளம் போகும்.. கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை
இன்றென்பது உண்மையே..
நம்பிக்கை உங்கள் கையிலே..
(அகரம்...)
தண்ணீரில மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியார பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை
தலைகோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது..
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது...
(அகரம்...)
படம் : சிகரம்
இசை : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
விரும்பி கேட்டவர் : புதுகைத்தென்றல்
Wednesday, February 20, 2008
273. அகரம் இப்போ - சிகரம்
பதிந்தவர் G3 @ 11:10 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
super song. :-)
ஆஹா,
பாட்டு போட்டுடீங்களா?
மிக்க நன்றி.
s.p.B track பாடி, யேசுதாஸ்தான் இந்தப் பாட்டை பாடணும்னு சொல்லி பாடிய பாட்டு.
வாங்க புதுகை!
அருமையான பாட்டு!
இந்தப் பாட்டுக்கும், "வண்ணம் கொண்ட வெண்ணிலவே" பாட்டுக்காகவுமே இந்தப் படத்தை பலதடவை பார்த்திருக்கேன்!
எல்லாப் பாட்டுமே அருமையா இருக்கும்!
"உன்னைக் கண்ட பின்புதான் என்னைக் கண்டு கொண்டேன்"
"இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ!
என் வாழ்க்கையென்ன்னும் கோப்பையில்
இது என்ன பானமோ!
பருகாமலே ருசி ஏறுதே இது என்ன மாயமோ"
ன்னு இன்னொரு பாட்டும் என் ஃபேவரைட்தான்!
நன்றி!
ஆமாங்க
அருமையானப் பாடல்களைக்கொண்ட படம்.
இசையமைப்பாளராக பாலு பரிமளித்த படம்.
நன்றி.
Post a Comment