Friday, February 8, 2008

246. ஏதேதோ செய்யவும் தோணுதேGet Your Own Hindi Songs Player at Music Plugin
ஏதேதோ செய்யவும் தோணுதே
எண்ணங்கள் எங்கெங்கோ போகுதே
என்னுள்ளே ஏதோ மாற்றங்கள்
இளமை பருவத்தின் ஏக்கங்கள்

தம்பி இளங்கற்று பயமறியாது
உங்களுக்கு இள ரத்தம்
ரொம்ப துடிப்பாத்தான் இருக்கும்
ஆனா துடிப்பு இருக்க வேண்டிய விஷயத்துல இருக்கணும்
தப்பான வழியில போயிட கூடாது..


தப்பென்று ஏதும் இல்லையே
தடித்தால் தானே தொல்லையே
தம்மில்லா வாழ்க்கை வாழ்க்கையா?
தண்ணியை அடிக்காத இளமையா?

டேய் டேய் டேய் டேய்
குடி குடியை கெடுக்கும்டா
பீடி சிகரெட் குடிச்சீங்கன்னா
உன் நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போகும்டா
இந்த வயசுல ஏன் இப்படி கெட்டுப் போகுறேங்கிறேன்
நல்லதை பாரு நல்ல பழக்கத்தை மட்டும் பழகுங்கடா


இளமை ததும்பும் திரைப்படம்
இண்டெர்நெட்டில் இருக்குது
பார்க்க மனசு துடிக்குது
பார்த்தால் இளமை இனிக்குது

அடப்பாவி..
கம்ப்யூட்டர் இண்டெர்நெட் எல்லாம் அறிவியலோட அற்புதமான வளர்ச்சிடா
அதை நல்லதுக்கு பயன்படுத்து
அதை விட்டுபுட்டு கண்ட கண்ட சனியனை பார்க்க பயன்படுத்துறீயே
இப்போ படம் பார்க்க தோணும்
அப்புறம் தப்பு பண்ண தோணும்
புரியுதா?
வேணாம்டா இதெல்லாம்..


ஆணும் பெண்ணும் இயற்கையே
அதனை மறுத்தல் செயற்கையே
இளமை எங்கள் கைகளில்
இன்பம் எங்கள் பைகளில்

வினையை விலை கொடுத்து வாங்க போறிக
இது சரியாங்கிறேன்
அசிங்கம்டா இது..
பிஞ்சுலேயே பழுக்க கூடாது
நமக்குன்னு ஒரு பண்பாடு இருக்கு
இளம் வயசை தப்பான வழியில் வீணாக்காதே
நீ ஏய்ட்ஸ் பத்தி கேள்வி பட்டதில்லையா?
ஏதாச்சும் நல்லது பண்ண பாருடா மவனே..


ரசிக மன்றங்கள் வைக்கனும்
ரசிச்சு ரசிச்சு வளர்க்கணும்
தலைவர் படம்தான் ரிலீஸுடா
போஸ்டர் அடிச்சு ஒட்டணும்

உன் அப்பன் ஆத்தா சம்பாரிச்ச காசை இப்படி வீணாக்கிறீயே
இது உனக்கே நல்லா இருக்காங்கிறேன்
சினிமாவை பார்க்கறதோட விட்டுடா
ரசிகர் மன்றத்தை வளர்க்கிறதை விட்டுட்டு
முதல்ல உன்னை வளர்க்க பாரு
போடா..
போய் உருப்படியா படி
படிச்சாதான் நல்லா இருப்பே..


என்ன படிச்சு என்னடா?
படிச்சா வேலை கிடைக்குதா?
இருக்கும் அறிவு போதுமே
இன்பம் தேடி போவோமே..

இப்போ இன்பம் தேடி போவீங்க
அப்புறம் துன்பம் நோய் சேர்ந்து வரும்
ஹ்ம். அறிவு கெட்டவனே
படிக்கிறது அறிவை வளர்த்துக்கடா
நீ கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்குது
உருப்படியா படிச்சீயன்னாத்தான் உருப்பட முடியும்
போய் உருப்புடுற வேலையை பாரு
அண்ணன் சொல்றேன்.


ஊருல உள்ள தப்பெல்லாம்
மொத்தமா செஞ்ச அண்ணனே
எனக்கு அட்வைஸ் பண்ணினா
என்னதான் நியாயம் சொல்லுண்ணே

மொத்தமா செஞ்சதுனாலத்தான் ஊரு முச்சந்தில நிக்குறேன்
நல்லவன் பேச்சை கேட்டிருந்தா நான் நல்லா இருப்பேனே
நீயாவது நல்லா இருக்கணும்ன்னுதானடா சொல்றேன்
தீ சுடும்ன்னு சொல்றேன் கேளு
கையை வச்சி பார்த்தாதான் நம்புவேனா எப்படிடா?
ஒன்னு சொல்றேன் கேக்குறீயா?
தட்டிப்போட்டா வடை
உருட்டி போட்டா போண்டா
இதுதாண்டா வாழ்க்கை
டேய்..
அதுக்கு மேலே உன் இஷ்டம்டா..


ஆல்பம்: இளமை தேசம்
பாடியவர்கள்: தேவன், கருணாஸ்

1 Comment:

நிவிஷா..... said...

நல்ல பாட்டுக்கா

நட்போடு
நிவிஷா

Last 25 songs posted in Thenkinnam