அந்தகாலத்தில் பாட்டே பெரிய பாட்டாகத்தா இருக்கும்.. இருந்தும் அதிலும் ஒரு ஒரு வரியையும் இரண்டு முறை பாடி ஆகா ..ஆனால் இனிமையான பாடல் என்பதால் நீளம் ஒரு பொருட்டாக படவில்லை.
திரைப்படம்ம்: அம்பிகாபதி
பாடியவர்கள்: டி.எம்.எஸ்.,, பானுமதி
--------------------------
ஆண்: மாசிலா நிலவே நம்
காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே! - கண்ணே!
மாநிலம் கொண்டாடுதே!
பெண்: பேசவும் அரிதான ப்ரேமையின் திறம் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே! - கண்ணா
பேதங்கள் பறந்தோடுதே!
(மாசிலா நிலவே நம் )
ஆண்: சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி(2)
தீபமாய் ஒளிவீசுதே கண்ணே!
தீபமாய் ஒளிவீசுதே!
பெண்: மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம்நீட்டி (2)
மௌனமாய் நம்மை வாழ்த்துதே கண்ணா!
மௌனமாய் நம்மைவாழ்த்துதே!
(மாசிலா நிலவே)
ஆஆஆ அ ஆ
ஆஆஆ அ ஆ
ஆஆஆ அ ஆ
ஆண்: அன்பே
பெண்: இன்பம்
ஆண் : எங்கே ?
பெண்: இங்கே!
ஆண் :மாறாத பேரின்ப நீராடுவோம்.
பெண் ; நீரோடு நீர்போல நாம் கூடுவோம்.
அன்பே இன்பம் எங்கே இங்கே
மாறாத பேரின்ப நீராடுவோம்.....
ஆண் : நீந்தும் அலையின் மீது நிலவின் தன்னொளி விளையாடுதே(2)
பெண் : தேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே(2)
ஆண் : உந்தன் நீள்விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே(2)
பெண் : ஆணெழில் முகம் வான்மதியென அல்லியும் உனை நாடுதே(2)
பெண் : வானம் எங்கே? பூமிஎங்கே ?
வாழ்வு தாழ்வெங்கே?
ஆண் : காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே?
பெண் : வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே (2)
ஆண் : கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை (2)
பெண்:இனி நானும் வேறில்லை
ஆண்: இனி நானும் வேறில்லை
இருவரும்: இனி நானும் வேறில்லை (2)
-----------------------
ஒரு பாட்டை மட்டுமாக தனியாக இணைக்க முடியவில்லை படம் முழுமைக்குமான ஒரு இணைப்பு இதில் இரண்டாவது பாடல் மாசிலா....
2 Comments:
அருமையானப் பாடல்.
நல்ல அர்த்தம் நிறைந்ததும் கூட.
நன்றி.
என்னை சொக்க வைத்த பாடல். TMSன் கம்பீரக் குரலுடன் பானுமதியின் தென்றலும், இதமான இசையும் கலந்து உருவான ஜுவனுள்ள பாடல். பாடலை இயற்றியவர் பெயரும், இசையை சிருஷ்டித்தவர் பெயரையும் தெரிய ஆவலாய் உள்ளேன். நன்றி.
Post a Comment