Wednesday, February 6, 2008

242.ரோஜா மலரே ராஜக்குமாரி




ஆண்: ரோஜா மலரே ராஜக்குமாரி
ஆசை கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா வருவதும் சரிதானா
உறவும் முறைதானா

பெண்: வாராய் அருகில் மன்னவன் நீயே
காதல் சமமன்றோ பேதம் இல்லையன்றோ
காதல் நிலையன்றோ
ஏழையென்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ
என்றும் நிலையென்றோ

ஆண்: வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலரன்றோ
ஓடி அலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலரன்றோ

பெண்: மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ

(ரோஜா மலரே ராஜக்குமாரி)

ஆண்: பாடும் பறவைக் கூட்டங்களே
பச்சை ஆடைத் தோட்டங்களே

பெண்: விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே

ஆண், பெண்: ஓர்வழிக் கண்டோம் ஒரு மனமானோம்
வாழியப் பாடல் பாடுங்களேன்
ஓர்வழிக் கண்டோம் ஒரு மனமானோம்
வாழியப் பாடல் பாடுங்களேன்

(ரோஜா மலரே ராஜக்குமாரி)

படம்: வீரத்திருமகன்
பாடியவர்கள்: P.B.ஸ்ரீனிவாஸ், சுசீலா
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam