Oru Kaithiyin Diar... |
பொன்மானே கோபம் ஏனோ?
பொன்மானே கோபம் ஏனோ?
காதல் பால்குடம் கள்ளாய் போனது
ரோஜா ஏனடி முள்ளாய் போனது?
(பொன்மானே..)
காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா?
ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
கோபம் கூட அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ..
(பொன்மானே..)
உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் வா
ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன் வா
உன்னைப் பார்த்ததும் எந்தன் பெண்மைதான்
கண் திறந்ததே
கண்ணே மேலும் காதல் பேசு
நேரம் பார்த்து நீயும் பேசு
பார்வைப் பூவை நெஞ்சில் வீசு ஓஹோ..
பொன்மானே கோபம் எங்கே?
பொன்மானே கோபம் எங்கே?
பூக்கள் மூடினால் காயம் நேருமா?
தென்றல் தீண்டினால் ரோஜா தாங்குமா?
படம்: ஒரு கைதியின் டைரி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: உன்னி மேனன், உமா ரமணன்
வரிகள்: வாலி
விரும்பி கேட்டவர்: அர்சாத்
0 Comments:
Post a Comment