|
சின்ன சின்னப் பூவே
நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டுத் தொட்டுப் பேசு
என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கைதொட்டால்
காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும்
பாகற்காய் தேனூறும்
(சின்ன சின்னப் பூவே)
உலகத்தில் பூவெல்லாம் உன் போல அழகில்ல
நானும் உன் அம்மாவும் பண்ணாத தவமில்ல
தென்பாண்டி மன்னவனோ முழுகித்தான் முத்தெடுத்தான்
தேனே உன் அம்மாவோ முழுகாம முத்தெடுத்தா
கண்ணே தெய்வம் கண்டேன் உந்தன் கண்ணே சந்நிதி
உன் முத்தம் பட்ட எச்சில் பட்டா கொஞ்சம் நிம்மதி
(சின்ன சின்னப் பூவே)
பாப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாராது
உன் பேச்சைக் கேட்காம ஒரு நாளும் விடியாது
நீ உண்ணப் பால் கிண்ணம் போதாது பொன்மானே
நிலவென்னும் கிண்ணத்தை நான் கொண்டு வருவேனே
பூவும் பூவும் உன்னைப் பார்த்துப் பேசிக் கொண்டது
காட்டில் ஓடும் ஓடைக் கூட உன் பேர் சொன்னது
(சின்ன சின்னப் பூவே)
படம்: சங்கர் குரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், ஜானகி
விரும்பிக் கேட்டவர்: நாமக்கல் சிபி
1 Comment:
Music by Chanddrabose.Not by IR.
With Love,
Usha Sankar.
Post a Comment