Friday, February 29, 2008

298. கண்ட நாள் முதலாய்....

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
(கண்ட நாள் முதலாய்)

நீலமயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறக்கவில்லை

கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகை தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான் (கண்ட நாள் முதலாய்)



http://www.esnips.com/doc/5e77b249-de2e-44ae-95ca-7c9ebeeb2bf0/kanda-nal-muthalai
பாடியவர் : பூஜா , சுபிக்ஷா
இசை :யுவன்

7 Comments:

Anonymous said...

எனக்கு யுவன் இசையிலபிடிச்ச பாடல்கள்ல இதுவும் ஒண்ணு. மத்த பாடல்களைப்போல இது ரொம்ப பிரபலமாகல. கேட்க இனிமையான பாடல்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க சின்ன அம்மிணி... இது சினிமா மூலம்பிரபலம் இல்லன்னா சொல்றீங்க ஒரு வேளை காரணம் இது ஒரு கர்நாட்டிக் கிளாசிக்கல ஜெம் .. மதுவந்தி ராகத்தில் .என் . எஸ் சிதம்பரம் அவர்களால் எழுத பட்டது.. சுதா ரகுநாதன்னு நினைக்கிறேன் கச்சேரில எல்லாம் பாடுவாங்க..

Anonymous said...

அலைபாயுதே கண்ணா பிரபலம் ஆன மாதிரி அவ்வளவா சினிமா மூலமா பிரபலமாகலை. யுவன் பாடல் வரிகளைச்சிதைக்காமல் பின்னணி இசை போட்டிருப்பார்.

Anonymous said...

fantastic song

thadcha said...

superb song

shiva said...

நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை

shiva said...

நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை

Last 25 songs posted in Thenkinnam