Sunday, February 24, 2008

285. ரவிவர்மன் எழுதாத கலையோ



இங்கு வீடியோ பார்க்கலாம்

லலலால லலலால லலலா
லலலால லலலால லலலா
லலலால லலலால லலலாஆஆஆ

ரவிவர்மன் எழுதாத கலையோ
அஹஹா
ரதி தேவி வடிவான சிலையோ
அஹஹா

கவி ராஜன் எழுதாத கவியோ ஓஹோ
கரை போட்டு நடக்காத நதியோ
ஓஓஓஓ
ம்ம்ம்ம்

[ரவிவர்மன்...]

விழியோர சிறு பார்வை போதும்
நாம் விளையாடும் மைதானம் ஆகும்
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாற மணப்பந்தலாகும்
கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே
கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே
[ரவிவர்மன்...]

பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்
மகராணி போலுன்னை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்
என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்
அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்
[ரவிவர்மன்...]

இசை: சந்திரபோஸ்
பாடியவர்: K.J. யேசுதாஸ், சித்ரா
படம்: வசந்தி

பாடலை விரும்பிக்கேட்டர்: இராம்/Raam

1 Comment:

nagoreismail said...

Ultimate song - Nagore Ismail

Last 25 songs posted in Thenkinnam