தேன்கிண்ணம் குழுவில் இணைந்ததும் முதல் பாடல் சிபி யின் விருப்பம் என்று இந்த ஆவி பாடும் பாட்டு இங்கே... சிபிக்கு ஆவிகளின் மேல் அப்படி என்னதான் ஒரு பிரியமோ? :-) {எழுதியபின் தான் தெரிந்தது அவர் கேட்டது ஜேஸுதாஸ் பாடியதாம் பரவாயில்லை இதையும் தான் கேளுங்களேன்..}
------------------------------------------------
அன்பே வா அருகிலே...
என் வாசல் வழியிலே...
உல்லாச மாளிகை ..மாளிகை..
இங்கே ஓர் தேவதை ...தேவதை..
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்...
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்..
அன்பே வா அருகிலே...
என்வாசல் வழியிலே..
பொற்சதங்கை சத்தமிட...
சிற்பம் ஒன்று பக்கம்வர...
ஆசை தோன்றாதோ ....
விற்புருவம் அம்புவிட...
வட்ட நிலா கிட்டவர ..
ஆவல் தூண்டாதோ ...
வானம் நீங்கி வந்த...
மின்னற்கோலம் நானே,
அங்கம்யாவும் மின்னும்..
தங்கப்பாளம் தானே.
தினம்தினம் உனக்கென உருகிடும் என் இதயமே!
மந்திரமோ தந்திரமோ ..
அந்தரத்தில் வந்து நிற்கும்..
தேவி நான் தானே,
மன்னவனே உன்னுடைய ...
பொன்னுடலை பின்னிக்கொள்ளும்...
ஆவி நான் தானே,
என்னைச்சேர்ந்த பின்னால்..
எங்கே போகக்கூடும் ...
இங்கே வந்த ஜீவன்...
எந்தன் சொந்தம் ஆகும் ,
தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே! (அன்பேவா)
படம் : கிளி பேச்சு கேக்கவா
இசை: இளையராஜா
பாடியவர் : ஜானகி
5 Comments:
//இந்த ஆவி பாடும் பாட்டு இங்கே... சிபிக்கு ஆவிகளின் மேல் அப்படி என்னதான் ஒரு பிரியமோ? :-) //
:) ஹிஹி
தற்செயலா என் விருப்பம் அப்படி ஆகிடுச்சு!
எனிவே இதுவும் நல்லாத்தான் இருக்கு!
யக்கா.. வந்ததுமே ஆவி பாட்டெல்லாம் போட்டு பயமுறுத்தறீங்க :((
போன கமெண்ட்ல ஸ்மைலிய மாத்தி போட்டுட்டேன் :))
இம்சை அரசியே.. அப்படியே "சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்துவிட்டேன்.." என்ற பாடலையும் எனக்காக போடுங்க தாயீயீயீயீயீயீ..
பதிலுக்கு, நானும் அடுத்த பத்து பதிவுகளுக்கு தவறாம வந்து ஆஜர் கொடுத்தர்றேன்..
\\ G3 said...
யக்கா.. வந்ததுமே ஆவி பாட்டெல்லாம் போட்டு பயமுறுத்தறீங்க :((\\
;)) ரீப்பிட்டேய்ய்
Post a Comment