Thursday, February 28, 2008

295. உளுந்து விதைக்கையிலே



பெண்: உளுந்து விதைக்கையிலே
சுத்தி ஊதக் காத்து அடிக்கையிலே
நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக் குழிப் பூத்துப் போனேன்

(உளுந்து விதைக்கையிலே)

பெண்: வெக்கப் படத்தில் கவளிக் கத்த
வளைவுப் பக்கம் கருடன் சுத்த
தெருவோரம் நிறைக்குடம் பார்க்கவும்
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
ஒரு பூக்காரி எதிர்க்க வர
பசும்பால் மாடு கடக்கிறதே
இனி என்னாகுமோ ஏதாகுமோ
இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ

(உளுந்து விதைக்கையிலே)

ஆண்: அனிச்ச மலரழகே
அச்சு அச்சு வெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடுக் கட்டி
காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டி எட்டிப் போகையிலே
விட்டு விட்டுப் போகும் உயிரே

ஒரு தடவை இழுத்து அணைச்சபடி
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே

பெண்: உன் முதுகை துளைச்ச வெளியேற
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே

ஆண்: மழையடிக்கும் உன் பேச்சு
வெயிலடிக்கும் சிறுபார்வை
உடல் மண்ணில் புதையற வரையில்
உடன் வரக் கூடுமோ

பெண்: உசுர் என்னோட இருக்கையிலலே
நீ மண்ணோடு போவதெங்கே
அட உன் ஜீவனில் நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூட கொழம்புமய்யா

ஆண்: குறுக்குச் சிறுத்தவளே
என்னைக் குங்குமத்தில் கரைச்சவளே
மஞ்சத் தேச்சுக் குளிக்கையில்
என்னைக் கொஞ்சும் பூசுத் தாயே
கொலுசுக்கு மணியா
என்னைக் கொஞ்சம் மாத்து தாயே

பெண்: ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசுர் கசிய
உன்னாலே சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோடப் போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

(குறுக்குச் சிறுத்தவளே)

படம்: முதல்வன்
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீனிவாஸ், ஸ்வர்ணலதா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam