Thursday, February 21, 2008

278. சிவகாமி நினைப்பினிலே



ஆண்: சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன்
பெண்: அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன
ஆண்: முக்கனியே சர்க்கரையே ஒத்தையிலே நிக்கறியே
பெண்: வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

(சிவகாமி நினைப்பினிலே)

ஆண்: ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு பேசுமா இல்லை ஏசுமா
ஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக்கூடுமா விட்டு ஓடுமா
பெண்: கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம கேட்கவா என்னைப் பார்க்கவா
காலம் கடத்தாமல் கையோடு கையாக சேர்க்கவா மையல் தீர்க்கவா
ஆண்: போதும் இது போதும் இந்த பிறவியில் வேறொன்றும் வேண்டாமே
பெண்: மோதும் அலை மோதும் நெஞ்சக் கடலில் ஆசைகள் ஓயாம
ஆண்: வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

பெண்: அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன
ஆண்: சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன்
பெண்: எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே
ஆண்: வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

பெண்: காதல் கடுதாசி கண்ணால இந்நேரம் போட்டது வந்து சேர்ந்தது
கூடிக் கலந்திட கும்மாளம் இப்போது தோணுது பொண்ணு நாணுது
ஆண்: தேனும் தினை மாவும் தின்னாம நின்னாலே தாங்குமா பசி நீங்குமா
தேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில் சேருமா சுகம் மீறுமா
பெண்: பேசி வலை வீசி இந்த மனசுல போதைய ஏத்தாதே
ஆண்: ராசி நல்ல ராசி நம்ம பொருத்தத்தை நீயென்றும் மாத்தாதே
பேண்: இப்ப என்னவோ என்னவோ என்னவோ
என்னைப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே

(சிவகாமி நினைப்பினிலே)

படம்: கிளிப் பேச்சுக் கேட்கவா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், ஜானகி

விரும்பிக் கேட்டவர்: உண்மைத்தமிழன்

4 Comments:

உண்மைத்தமிழன் said...

ஆஹா.. கேட்டவுடனே கொடுத்து விட்டீர்களே..

நன்றிகள் பல..

இம்சை அரசியே வாழ்க..

இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ள விதம் மிக அருமையாக இருக்கும்.

மிக இயல்பான நகைச்சுவையும் இப்பாடல் காட்சியினூடேயே இருக்கும்.

பாசிலின் அருமையான இயக்கத்தில் மலையாளத்திலும் இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

அந்த பள்ளிக்கூட ஹெட்மாஸ்டர் மறக்க முடியாத மனிதராக இருக்கிறார்..

நன்றி இம்சை அரசி..

இம்சை அரசி said...

u r always welcome :)))

நாமக்கல் சிபி said...

உண்மைத்தமிழன் அண்ணே!

எந்த நினைப்பினிலே இந்தப் பாட்டை மறகாம கேட்டீங்கன்னு நான் கேக்க முடியாதுன்னு நினைக்கிறேன்! நீங்க என்ன நினைக்கிறீங்க?

//காட்சியினூடேயே//

காட்சியில் முழுதாக இருக்கும் னு எளிமையா சொல்லலாமே! எதுக்காக ஊடே, கீடே ன்னெல்லாம் சொல்லி படிக்கிறவங்களை வேற கஷ்டப்படுத்துறீங்க?

:))
(சும்மா லுலூங்காட்டி, உங்ககிட்டே உரிமையோட வெளாடுறேன், கண்டுக்காதீங்க)

Anonymous said...

அடடா இந்த பாடல் தேன்கின்னத்துல போட்டாச்சா? பாடும் நிலா பாலுவில் இப்போதுதான் இந்த பாடலுக்கு விடிவு வந்தது. பதிவிற்க்கு நன்றி.

Last 25 songs posted in Thenkinnam