Wednesday, February 6, 2008

241. பாடவா பாடவா..


Little John - Paad...

பாடவா பாடவா அலைகளைப் பாடவா...
பாடவா பாடவா கரைகளைப் பாடவா...
பாடல்கள் கோடி....
பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி
பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட
அலையடிக்கும் நீரில் அல்லி என்ன பாட

மழையின் துளி ஒன்று மயிலிறகில் விழுந்தால்
தோகைமயிலாடும் காட்சிகளும் கண்டேன்
மழையின் துளி ஒன்று பாறைகளில் விழுந்தால்
மௌனமே மிஞ்சும் காட்சிகளும் கண்டேன்
ரெண்டு பொருள் உண்டு என்ன பொருள் பாட
பாலைவனமெங்கும் பால்நிலவு போல் சிந்தி யார் பார்த்திட

ம்ம்ம்...

சின்ன சின்னக் கிண்ணம் ஊற்றி வைத்த வண்ணம்
தூரிகையில் சேர்ந்தால் ஓவியங்களாகும்
ஓவியனின் வண்ணம் ஊற்றி வைத்த கிண்ணம்
பேதை கையில் சேர்ந்தால் என்னனிலையாகும் ?
ரெண்டு நிலை உண்டு எந்த நிலை பாட
ரசிகன் இல்லை என்றால் தாமரை பூ பூத்து யார் பார்த்திட

பாடவா பாடவா ..பாடவா பாடவா ..பாடவா
பாடல்கள் கோடி....
பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி ?
பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட
அலையடிக்கும் நீரில் அல்லி என்ன பாட

பாடவா..
பாடவா..பாடவா..
ம்ம்ம்...

படம்: லிட்டில் ஜோன்
இசை: பிரவின் மணி
பாடியவர்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam