Monday, June 29, 2009

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா முத்து பல்லக்கா
அது என்னமோ என்னமோ ஹோய்
(செவ்வந்தி..)

கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு அத நீயும் காட்டு
அது சிரிப்பது தெரியாதா பூஜை உன் கையால் போட்டாச்சு
நானும் பார்த்தாச்சு இனி எனக்கது புரியாதா
கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே வளைப்பேன்
சிரிக்காதே நாடு பொறுக்காதே
என் மனசே கெடுதே குயிலே மயிலே ஹோய்
(செவ்வந்தி..)

ஆத்துல காத்தடிச்சா அலை மோது கெண்டை விளையாடும்
இப்போ மனசுல துடிக்குதம்மா
ஆயிரம் நினப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு அது துணிஞ்சிருக்கு எதுக்காக
உடம்பு இப்போ நடுங்குதம்மா
சலங்கையைப்போல் குலுங்குதம்மா
நீ பலசாலி நல்ல அறிவாளி
எனக்கு இதுவே போதும் குயிலே மயிலே ஹோய்
(செவ்வந்தி..)

படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், P சுசீலா

கங்கை கரை தோட்டம்கங்கை கரை தோட்டத்தில் கவிஞருக்கு ஓர் கவிமாலை - மயிலிறகு

ஆமாம் இசையன்பரகளே சென்ற வாரம் வானொலியில் இரவு நேரத்தில் ஒலிப்பரபட்ட அற்புதமான நிகழ்ச்சிதான் இவை. இந்த தேன்கிண்ணத்தில் புதுப்பாடல்கள் கேட்டு தொடர்ந்து கேட்டு ஓடிவரும் தேன்கிண்ண நேயர்களூக்கு இந்த கங்கை கரைத் தோட்டத்தில் அமர்ந்து ஹாயாக ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஓர் அற்புதமான கவிச்சோலை. கீழே உள்ள பாடல் பல்லவிகளின் வழித்தடத்தை பாருங்கள் நிச்சயம் உங்கள் கால்கள் இங்கே இளைப்பாறி செல்லலாமே என்று உங்களையும் அறியாமல் இழுத்துசென்று அமர்த்திவிடும். ஓரு மணி நேரம் இளைப்பாறி செல்லுங்கள் அன்பர்களே.

1.கனவுகளே கனவுகளே >> 2.சமுத்திர ராஜகுமாரி >> 3.மலர்ந்தும் மலராத >>
4.ஆலயமணியின் ஓசையை >> 5.உன் கண்ணில் நீர் வழிந்தால் >> 6.ஆட்டுவித்தால் யார் ஒருவர் >> 7.வான் நிலா நிலா அல்ல >>8.கேட்டதும் கொடுப்பவனே >>9.வீடுவரை உறவு வீதி வரை மனைவி.

பதிவிறக்கம் செய்ய இங்கே..

பாடல் பல்லவிகளை பார்த்தால் எல்லாமே மிகப்பிரபலமான பாடல்கள் தான், நான் அதிகம் எழுதப்போவதில்லை அதற்கு அவசியமும் இல்லை ஏனென்றால் வானொலி அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவர்கள் தன் சுந்தரக்குரலில் மிக மிக அற்புதமாக நிறுத்தி நிதானமாக தொகுத்து வழங்கியிருப்பது மிகவும் சிறப்பு. அதிகபட்சம் எல்லோரும் இணையத்தில் தெரிந்துவைத்திருக்கும் தகவல்கள் தான். இருந்தாலும் மீண்டும் கேட்டுப்பாருங்கள் கவிஞர் கண்ணதாசன் பாடல் அனுபவங்கள் சேகரிக்க வைக்கத்தோன்றும் அனுபவம் பெற்றவை. மிகவும் சிறப்பாக இணைய நண்பர்களூகாக தொகுத்து வழங்கிய திரு.க.சுந்தரராஜன் அவர்களூக்கு தேன்கின்ண நேயர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி. கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளையும் தாருங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, June 28, 2009

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையிலதானே இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி

கூத்து மேடை ராஜாவுக்கு நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்
நூற்றிரெண்டு பெண்டாட்டியும் வாத்து முட்டை போட்டதுவாம்
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு
சின்ன குட்டிகளின் மேல் ஆணை புது சட்டிகளின் மேல் ஆணை
இரு வள்ளுவன் பாட்டிலுண்டு
பரம்பரை கதையிலுண்டு கதையல்ல மகராசி
காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிப்புட்டு நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா நானும் சாப்பிட்டு வர வா
சம்பந்தம் பண்ணா உனக்கு சம்மதம்தானா
காக்கையில்லா சீமையே ஏ...

காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாக்கு வச்சி நேரம் பாத்து வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன் நீங்க சாப்பிட்டு வாங்க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க
அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மனம் கேளுங்களே
அட ஏண்டி என்ன மஞ்சளுக்கு கேக்குறீயா
பழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான்
கிட்டப்பாவின் பாட்டை கேட்டு சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா
மேடைக்கு போனா எனக்கு வீட்டுல பொண்ணு
பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு
என் திறமையை காட்டட்டுமா
இரண்டு சங்கதியை போடட்டுமா

படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், S ஜானகி

Saturday, June 27, 2009

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
(செந்தூரப்பூவே..)

தென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னி பருவத்தில் வந்த நினப்பே வண்ணப்பூவே
தென்றல் காற்றே என்னை தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)

நீலக்கருங்குயிலே தென்னை சோலை குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
காணும் வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)

படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி

Friday, June 26, 2009

ஆளவந்தான்..

ஆளவந்தான்..
ஐம்பெருங்கண்டங்கள் ஆளவந்தான்
ஆயிரம் சூரியன் போல வந்தான்
வாழ்க்கையை முழுமையாய் வாழ வந்தான்
அரசாண்ட பாண்டியன் மீள வந்தான்
சூள் கொண்ட பழையொன்று சூழ வந்தான்
நீலவான் எல்லை வரை நீளவந்தான்
மூச்சினில் தீக்கணல் மூலவந்தான்
மானுட வகையெல்லாம் ஆளவந்தான்
அர்ள் கொண்ட மேகமாய் தாழ வந்தான்
ஆயிரம் சூரியன் போல வந்தான்
ஆளவந்தான்..
ஆளவந்தான்..

படம்: ஆளவந்தான்
இசை: ஷங்கர் - எசான் - லோய்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

பேசும் தெய்வம் - நூறாண்டு காலம் வாழ்க

பாடலை கேட்க இங்கே செல்லுங்கள்

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவநிதியாக
குன்றாத நவநிதியாக
துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
நீ வாழ்க.. நீ வாழ்க..

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
மலடென்ற பேரும் பொய்யாக
மலடென்ற பேரும் பொய்யாக
வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
நீ வாழ்க... நீ வாழ்க..

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

படம் : பேசும் தெய்வம்
இசை : KV மகாதேவன்
பாடியவர் : சூலமங்களம் ராஜலக்ஷ்மி

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களேபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்

ஆல்பம் : கிருஷ்ணகானம்
வரிகள் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர் : டி.எம். செளந்தர்ராஜன்

Thursday, June 25, 2009

கடவுள் பாதி மிருகம் பாதி

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியாக் கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்க்கிறதே
நந்தகுமாரா நந்தகுமாரா
நாளை மிருகம் கொல்வாயா
மிருகம் தின்ற எச்சம் கொண்டு
மீண்டும் கடவுள் செய்வாயா
குரங்கில் இருந்து மனிதன் என்றால்
மீண்டும் இறையாய் ஜனிப்பானா
மிருக ஜாதியில் மிறந்த மனிதா
தேவஜோதியில் கலப்பாயா

நந்தகுமாரா
கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியாக் கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்க்கிறதே

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
காற்றில் ஏறி மழையில் ஆடி
கவிதை பாடும் பறவை நான்

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
காற்றில் ஏறி மழையில் ஆடி
கவிதை பாடும் பறவை நான்
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும்
உயிரின் வேர்கள் குளிர்கிறதே
எல்லா துளியும் குளிரும் போது
இருத்துளி மட்டும் சுடுகிறதே
நந்தகுமாரா நந்தகுமாரா
மழை நீர் சுடாது தெரியாதா
கன்னம் வடிகின்ற கண்ணீர் துளி தான்
வெந்நீர்த் துளி என அறிவாயா
சுட்ட மழையும் சுடாத மழையும்
ஒன்றாய் கண்டவன் நீ தானே
கண்ணீர் மழையில் தண்ணீர் மழையை
குளிக்க வைத்தவன் நீதானே

படம்: ஆளவந்தான்
இசை: ஷங்கர் - எசான் - லோய்
பாடியவர்: கமல்ஹாசன்

காதலிக்க நேரமில்லை - அனுபவம் புதுமைஅனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
ஆஹா... பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை...

தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா.. சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள்.. மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன்.. அது போதாதென்றாள்...
போதாதென்றாள்...
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
அனுபவம் புதுமை...

கண்ணென்ன கண்ணென்று அருகினில் அவன் வந்தான்
கண்ணென்ன கண்ணென்று அருகினில் அவன் வந்தான்
ஆஹா.. பெண்ணென்ன பெண்ணென்று என்னென்ன கதை சொன்னான்
இது போதாதென்றேன்.. இனி கூடாதென்றான்
இன்னும் மீதம் என்றான்.. அது நாளை என்றான்
நாளை என்றான்...
அனுப்வம் புதுமை...

சிஙகாரத் தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம்
ஆஹா..சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்
அவள் எங்கே என்றாள்.. நான் இங்கே நின்றேன்
அவள் அங்கே வந்தாள்.. நாங்கள் எங்கோ சென்றோம்
எங்கோ சென்றோம்...

பனி போல் குளிர்ந்தது கனி போல் இனித்ததம்மா
ஆஹா.. மழை போல் விழுந்தது மலராய் மலர்ந்ததம்மா
ஒரு தூக்கம் இல்லை.. வெறும் ஏக்கம் இல்லை
பிறர் பார்க்கும் வரை எங்கள் பிரிவும் இல்லை
பிரிவும் இல்லை
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை...

படம் : காதலிக்க நேரமில்லை
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் : பி.சுசீலா, PB ஸ்ரீநிவாஸ்
பாடல் வரிகள் : கண்ணதாசன்

Wednesday, June 24, 2009

ரத்த திலகம் - ஒரு கோப்பையிலே

பாடலை கேட்க

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
(ஒரு...)

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
நான் காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனிமனிதன்
நான் படைப்பதனால் என்பேர் இறைவன்
(ஒரு...)

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்
நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
(ஒரு...)

படம் : ரத்த திலகம்
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : KV மகாதேவன்

சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி
சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்ற பெயர்
சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்ற பெயர்
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி
பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமா
சிரித்து சிரித்து வயிறு வலித்தால் ஜி ஹெச்சுக்கு செல்வோமா
(கல..)

அம்மா சொன்னாள் மகன் கிட்டே
மகனே உனக்கொரு பெண் பார்த்துள்ளேன்
மணந்தால் அவளை மணக்க வேண்டும்
அவள் முத்து முத்தாக சிரிக்கிறாள்
மூக்கும் முழியுமாய் இருக்கிறாள்
மகன் சொன்னானாம்
முடியாதம்மா முடியாது
நீ எனக்கு பார்த்த பெண்ணோ
மூக்கும் முழியுமாய் இருக்கிறாள்
நான் எனக்கு பார்த்த பெண்ணோ
வாயும் வயிறுமாய் இருக்கிறாள்

ஒரு புருஷனை பொண்டாட்டி கரிச்சு கொட்டினாள்
பிரகாஷ் தனது பொண்டாட்டிக்கு
நித்தம் நித்தம் முத்தம் வைக்கிறான்
நின்றால் முத்தம் நடந்தால் முத்தம்
இருந்தால் முத்தம் கிடந்தால் முத்தம்
நீங்களும்தான் இருக்கிறீர்களே
எப்போது அப்படி முத்தம் கொடுப்பீர்
புருஷன் சொன்னானாம்
ஆகட்டும் ஆகட்டும்
பிரகாஷ் மட்டும் வெளியூர் போகட்டும்

கடற்கரை மணலில் காதலி கேட்டாள்
காதலா காதலா
கல்யாணம் முடிந்ததும் இப்படியே
என்னை காதலிப்பாயா
காதலன் சொன்னான்
அது நீ கட்டிக்கப் போகும்
கணவனை பொறுத்தது
(கல..)

படுக்கை அறைக்குள் புயலாய் புகுந்து
அழகுச் சிறுமி அம்மாவை கேட்டாள்
சீக்கிரம் சொல்லு மம்மி
செக்ஸ் என்றால் என்ன
ஏதோ எதுவோ என்றூ நினைத்து
அனைத்தும் சொன்னாள் அன்புள்ள அம்மா
அழகுச் சிறுமி சலித்துக் கொண்டு
அம்மாவை கேட்டாள்
அப்ளிகேஷன் ஃபார்ம்ல அரை இஞ்சு இடத்துல
இத்தனை விசயம் அடங்குமா?
இத்தனை விஷயம் அடங்குமா?
(கல..)

படம்: ஆளவந்தான்
இசை: ஷங்கர் - எசான் - லோய்
பாடியவர்கள்: கமல் ஹாசன், மகாலெட்சுமி ஐயர்

Tuesday, June 23, 2009

நம்ம கடை வீதி கலக்கலக்கும்
நம்ம கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக அவ நடந்து வந்தா
நம்ம பஸ் ஸ்டாண்டு பளப்பளக்கும்
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா
அவ பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
மெல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு போட்டதைப் போல
சுண்டி சுண்டி வந்திழுக்கும்
(கடை வீதி..)

சிங்காரப் பூங்கொடிக்கு ஒரு சித்தாட காலெதுக்கு
அவ சில்லுன்னு சிரிக்கையிலே அடி ஐயடி ஐயா
சிறு வெள்ளிக் கொலுசெதுக்கு அடி ஐயடி ஐயா
கண்ணாலே சம்மதம் சொன்னா கைய புடிச்சா ஒத்துக்குவா
கல்யாணம் பண்ணுமின்னா வெக்கப்படுவா
வெறெதும் சங்கடமில்ல கங்கதி எல்லாம் கத்துக்குவா
விட்டு விலகி நின்னா கட்டிப்பிடிப்பா
வெட்ட வெளியில் ஐயயோ
ஒரு மெத்தை விரிச்சேன் ஐயய்யய்யோ
தொட்டு மலர தொட்டு பறிச்சேன்
மெல்ல சிரிச்சா
(கடை வீதி..)

அடி முக்காலும் காலும் ஒன்னு
இனி ஒன்னோட நானும் ஒண்ணு
அடி என்னோட வாடிப்பொண்ணு அடி ஐயய்யோ
ஒரு செம்மீனை போல கண்ணு
ஒன்னாக கும்மியடிப்போம்
ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம்
விட்டாக்கா உன் மனசை கொள்ளையடிப்பேன்
கல்யஅணப் பந்தலக்கட்டி பத்திரிக்கையும் வச்சுக்குவோம்
இப்போது சொன்னதை எல்லாம் செஞ்சு முடிப்போம்
தங்கக் குடமே ஐயயோ
புது நந்தவனமே ஐய்யய்யோ
சம்மதம் சொல்லி இந்த இடமே இன்பச் சொகமே
(கடை வீதி..)

படம்: அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

படையப்பா : ஒ ஒஹோ கிக்கு ஏறுதேஒ ஒஹோ கிக்கு ஏறுதே
ஒ ஒஹோ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊறுதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ள
அட தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள
இந்த வாழ்கை வாழ தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல

தங்கத்தை பூட்டி வைத்தாய் வைரத்தை பூட்டி வைத்தாய்
உயிரை பூட்ட எது பூட்டு
குழந்தை ஞானி இந்த இருவரும் தவிர
இங்கு சுகமாய் இருப்பவர் யார் காட்டு
ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை நமக்கு மட்டும்
ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை நமக்கு மட்டும்
இதுதான் ஞான சித்தர் பாட்டு
இந்த பூமி சமம் நமக்கு
நம் தெருவுக்குள் மதச்சண்டை ஜாதிச்சண்டை வம்பெதுக்கு

தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை... இல்லை
முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை... இல்லை
பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை... இல்லை
எண்ணி பார்க்கும் வேளையில்
உன் வாழ்கை மட்டும் உந்தன் கையில் உண்டு அதை வென்று விடு

படம் : படையப்பா (1999)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : மனோ, பெபி மணி

இயற்கை - அலையே அலையே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

அலையே அலையே அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல் சொன்னது யார்
பிறந்தேன் பிறந்தேன் இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய் மண்ணில் நானில்லை
ஒரு துளியானேன் உன்னாலே
இன்று கடலானேன் பெண்ணாலே
என் உயிரெல்லாம் தேனாக ஒரு வார்த்தை சொன்னாலே
(அலையே.. அலையே.. )

மொட்டுக்குள்ளே வாசம் போலே க்ட்டுப்பட்டு நின்றாயே
முட்டிச்செல்லும் காற்றாய் வந்து தொட்டு திறந்து கொண்டேனே
உனது ஊடல் தீராமல் எனது கடலில் மீன் இல்லை
கருணை பார்வை நீ பார்த்தாய் கரையில் கூட மீன் தொல்லை
முகத்திரையை கழட்டிக்கொண்டாய்
சிறகுகளை அணிந்து கொண்டேன்
அலையாடிய அலையாடிய கரையில்
விளையாடிய விளையாடிய பறவை
மடியேறுது மடியேறுது பார் வெளியே
(அலையே.. அலையே.. )

பெண்ணே நான் ஓர் வார்த்தையில்லை உந்தன் இதழில் தித்திக்க
கண்ணே நான் ஓர் தூக்கமில்லை உந்தன் கண்ணில் ஒட்டிக்க
எனது ஜீவன் தீர்ந்தாலும் எனது வாழ்வு உன்னோடு
கிளைகள் வெளியில் போனாலும் வேரின் வாழ்வு மண்ணோடு
நீர் விழுந்தால் மண் மடியில் நான் விழுந்தால் உன் மடியில்
நீர் விழுந்தால் மண் மடியில் நான் விழுந்தால் உன் மடியில்
கடலோ இடம் மாறிய பொழுதும்
நிலமோ நிலம் தடுமாறிய பொழுதும்
பிரியாதிரு பிரியாதிரு புன்னகையே..

படம் : இயற்கை
இசை : வித்யாசாகர்
பாடியவர் : சங்கர் மகாதேவன்

படையப்பா : சுத்தி சுத்தி வந்தீகசுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டிக
ஹய்யோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக

சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டிக
முத்தாடும் ஆசை முத்தி போக
எத்தனை பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

பொம்பளை உசுரு போக போக நோக
இந்திரன் மகனே இந்த தொல்லை வாழ்க
அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க

சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டிக
ஹய்யோ என் நாணம் அத்துபோக
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டிக
முத்தாடும் ஆசை முத்தி போக

என் காது கடிக்கும் காது கடிக்கும் பல்லுக்கு
காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளைவிக்கு
மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு
முத்தம் தருவேன்

என் உசுரு குடிக்கும் உசுரு குடிக்கும் உதடுக்கு
மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு
கன்னம் கீறும் கன்னம் கீறும் நகத்துக்கு
முத்தம் இடுவேன்

அடி தும்மும் பொழுதிலும் இம்மி அளவிலும் பிரியாதீக
ஒம்ம தேவை தீர்ந்ததும் போர்வை போர்த்தியே உறங்காதீக
இனி கண் தூங்கலாம் கைக தூங்காதுங்க
ஒரு தாலிக்கு முன்னால ஒரு தாலாட்டு வைக்காதீக

சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டிக
முத்தாடும் ஆசை முத்தி போக
எத்தனை பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக
பொம்பளை உசுரு போக போக நோக
இந்திரன் மகனே இந்த தொல்லை வாழ்க
அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க

நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன்
தயிர்போல தயிர்போல உறைகிறேன்
கயிர் மேலே கயிர் போட்டு அய்யோ கடையிறீங்க

நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கிறங்கவும்
மயங்கம் தெளிஞ்சு மயங்க தெளிஞ்சு எழுப்பவும்
ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் அய்யோ அடிக்கிறீக

உச்சி வெயிலில் குச்சி ஐஸ் போல் உருகாதீக
தண்ணி பந்தலே தாகம் எடுக்கையில் எரியாதீக
எல்லை தாண்டாதீக என்னை தோண்டாதீக
என் வாயோடு வாய் வைக்க வக்கீலு வைக்காதீக

படம் : படையப்பா (1999)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்பரமணியம், ஹரிணி

Monday, June 22, 2009

மாலையில் யாரோ மனதோடு பேச

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

படையப்பா : சிங்க நடை போட்டுசிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்கப் படையப்பா
நெஞ்சில் ஆறுபடையப்பா பின்னால் நூறு படையப்பா
யுத்தம் என்று வருகையில் பத்துவிரல் படையப்பா
பாசமுள்ள மனிதனப்பா நான் மீசை வச்ச குழந்தையப்பா
என்றும் நல்லதம்பி நானப்பா நன்றியுள்ள ஆளப்பா
தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா

பத்துமாடி வீடு கொண்ட சொத்து சொகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கித் தரும் பதவியும் வேண்டாம்
மாலைகள் இடவேண்டாம் தங்க மகுடமும் தர வேண்டாம்
தமிழ்த் தாய்நாடு தந்த அன்பு போதுமே
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா
என் உடல்பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா

உன் கையை நம்பி உயர்ந்திட பாரு
உனக்கென எழுது ஒரு வரலாறு
உனக்குள்ளே சக்தியிருக்கு
அதை உசுப்பிட வழி பாரு
சுப வேளை நாளை மாலை சூடிடு
அட எவனுக்கு என்ன குணம் எவனுக்கு என்ன பலம் கண்டதில்லை ஒருவருமே
ஒரு விதைக்குள்ளே அடைப்பட்ட ஆலமரம் கண்முழிக்கும் அதுவரை பொறு மனமே

படம் : படையப்பா (1999)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : எஸ். பி. பாலசுப்பரமணியம்

ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரையைக் கேளுடாஆல்வார்பேட்டை ஆளுடா
அறிவுரையே கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா

காதல் போயின் சாதலா
இன்னோர் காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா

G:
லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே
மவனே, லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே

K:
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்ஸு பொண்ணை காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்

G:
ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை
ஆல்வார்பேட்டை ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா

K:
பன்னனு வயசில் பட்டாம்பூச்சி பறக்குமே

G:
லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே

K:
கண்ணை பார்த்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பார்க்குமே

G:
லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே

K:
கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது
உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே
ஜவுளி கடை பொம்மையை பார்க்கும் போது
உன் புத்திக்குள்ள கவுலி கத்தும் அதுவும் லவ் இல்லே

இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்
எதனையும் புரிஞ்சு நடக்கணும்

காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா
இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா

GROUP CHORUS:
ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை
ஆல்வார்பேட்டை ஆண்டவா

வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா

காதல் போயின் சாதலா
இன்னோர் காதல் இல்லையா

தாவணி போனால் சல்வார் உள்ளதடா

…போடு

….வா நர்சம்மா

…ஐய்யோ

K:
பார்க்கபோனா மனுஷனுக்கு first தோல்வி காதல்தான்

G:
நல்லது அனுபவம் உள்ளது

K:
காதலுக்கு பெருமையெல்லாம் first காணும் தோல்விதான்

G:
சொன்னது கவிஞர்கள் சொன்னது

K:
டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம்
கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா


ஒன்னு ரெண்டு escape ஆன பின்னே
உன் லவ்வுதான் மூணாம் சுத்தில் முழுமை காணுமடா


ஐய்யயோ இதுக்கா அழுவுரே
லைஃபுலே ஏன்டா நழுவுரே


காதல் ஒரு கடலு மாறிடா
அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா

டேய் டேய்

GROUP CHORUS

K:
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்ஸு பொண்ணை காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்

GROUP CHORUS
திரைப்படம்: வசூல் ராஜா MBBS
பாடியவர் : கமல்ஹாசன்

நானும் ஒரு பெண் - கண்ணா கருமை நிறக் கண்ணாபாடலை கேட்க முடியாவிட்டால் இங்கே கிளிக்குங்கள்

கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
(கண்ணா...)


மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா
கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே

பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா
(கண்ணா...)

படம் : நானும் ஒரு பெண்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் : பி.சுசீலா
பாடல் வரிகள் : கண்ணதாசன்

படையப்பா : மின்சார பூவே பெண் பூவேமின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காயவேண்டும்
சகியே சகியே சகியே
என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும்

மின்சார கண்ணா
மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை நீ மடி ஏந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்
மதனா மதனா மதனா
என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிக்கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிக்கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
என் ஆடைதாங்கிக் கொள்ள என் கூந்தல் ஏந்திக் கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா நான் உண்ட மிச்ச பாலை
நீ உண்டு வாழ்ந்து வந்தால் மோட்சங்கள் உனக்கல்லாவா
வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா

மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்

வெண்ணிலவை தட்டி தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன்
அதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகி விட்டேன்
வாள் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது
வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நான் வருதில்லை போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக் கொள்ள
ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்

படம் : படையப்பா (1999)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ், நித்யஸ்ரீ மகாதேவன்

Sunday, June 21, 2009

வாழவைக்கும் காதலுக்கு ஜேவாழவைக்கும் காதலுக்கு ஜே
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே
வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே
(வாழவைக்கும்..)

நாணம் என்னை விட்டுச்சே
மோகம் என்னை தொட்டுச்சே
கையணைக்க கையணைக்க
கன்னி விழி பட்டுச்சே
காளை மனம் கெட்டுச்சே
மெய்யணைக்க மெய்யணைக்க
கள்ளோடும் முள்ளோடும்
தள்ளாடும் செம்பூவை
நீயும் அள்ள அம்மம்மா
என்னென்ன ரசிச்சே
முன்னாலும் பின்னாலும்
முக்காட இந்நேரம்
மோகம் கொண்டு
அப்பப்பா தப்புக்கு தவிச்சே
பார்வை தன்னில் நாளும்
நீந்தும் பாவை ஒரு மீனாச்சே
தேகம் தன்னை நாளும் மூட
ஆடை இந்த ஆளாச்சே
(வாழவைக்கும்..)

தேன் மழையும் கொட்டுச்சே
தேகம் எங்கும் பட்டுச்சே
வெட்கம் விட்டு பக்கம் நிற்க
பெண் மனது அஞ்சிச்சே
போதும் என்று உன்னிடம்
உன்னிடம் வந்துச்சே
வாடை என் நானும் வந்தேன்
வாழை மடல் போலாச்சே
வாரி எனை நானும் தந்தேன்
வாலிவந்தான் மேலாச்சே
(வாழவைக்கும்..)

படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

Saturday, June 20, 2009

புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா
புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா
அண்ட மணமகள் தான் வந்த நேரமடா
பொண்ணு ஓவியம்போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையய்ப்போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கதை படிப்பா
(புது மாப்பிள்ளைக்கு..)

சிங்கம் புலி கூட ஜோடி ஒண்ணு தேட
தன்னந்தனியாக நானும் இங்கு வாட
வந்தாள் அந்த தோகை தான்
தந்தாள் ஒரு ஆசை தான்
எந்நாளும் நான் சாண் பிள்ளை தான்
ஆனாலும் ஓர் ஆண் பிள்ளைதான்
என்னோடு பூந்தேன் முல்லைதான்
உல்லாசமாய் ஆடிடத்தான்
காதல் மோதிரம் கைகளில் போட்டவள்
அவள்தான் எனக்கென பிறந்தாளே
எனை நெனைச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா
(புது மாப்பிள்ளைக்கு..)

சின்ன விழி மீது சொல்லும் மொழி
தேனு கன்னி ஒரு மாது கையணைக்க
நானு குள்ளமணி நீயாட
கொஞ்சம் கிளி உங்க கூட
கல்யாணந்தான் மாசி மாசம்
நாதஸ்வரம் மேளதாளம்
வந்தாச்சிங்க காலம் நேரம்
ஊர்கோலம் நான் போகத்தான்
மாலை சூடிட மாப்பிள்ளையாகிட
உனக்கோர் துணைதான் கிடைச்சாச்சு
எனை நினைச்சா பரிதவிச்சா துடி துடிச்சா
(புது மாப்பிள்ளைக்கு..)

படம்: அபூர்வ சகோதர்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், SP சைலஜா

Friday, June 19, 2009

காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலன் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு
என் வேதனை சொல்லும் ஓஹோ
நீங்காமல் எந்த நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் சொல்லும் ஓ
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி
இந்த ஈரம் என்று மாறுமோ
(காதலி..)

ஓயாத தாபம் உண்டான நேரம்
நோயானதே நெஞ்சம்
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம்
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
மணிவிழி மானே மறந்துவிடு இன்று
ஜென்ம பந்தம் விட்டு போகுமோ
(காதலா..)

படம்: அவ்வை ஷண்முகி
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சுஜாதா

லேசா லேசா - அவள் உலக அழகியேஅவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே

கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்பராகம் என்னவென்று காட்டுவேன்
சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை
எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக
கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே...

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே

ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அடைந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
பூவாடை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

படம் : லேசா லேசா
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : கார்த்திக்

Thursday, June 18, 2009

கல்யாணம் கச்சேரி
கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறி போயாச்சிடி
என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல
ரோஜாக்கள் ஏராளண்டி
என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்டு பதினஞ்சு
மாலினி ஏய் மோகினி மாம்பிஞ்சு நீ பூம்பஞ்சு நீ
குயில் குஞ்சு நீ வா கொஞ்சு நீ
(கல்யாணம்..)

கையெழுத்து போட்டாலென்ன தலையெழுத்து மாறுமா
உயிர் எழுத்து என்னை விட்டு மெய் எழுத்து வாழுமா
எத்தனை நான் சொன்னதுண்டு பள்ளி அறை காவியம்
சொன்னதுக்கு சாட்சி உண்டு சின்னஞ்சிறு ஓவியம்
ஓடைக்கு தென்றல் மீது இன்று என்ன கோபம்
ஒட்டாமல் எட்டிச் சென்றால் யாருக்கென்ன லாபம்
நீ சின்னமான் என் சொந்த மான்
(கல்யாணம்..)

அள்ளி அள்ளி நானெடுக்க வெள்ளி ரதம் வந்தது
சொல்லி சொல்லி நான் படிக்க பாட்டெடுத்து தந்தது
அல்லி விழி பிள்ளை மொழி பிள்ளை மனம் வென்றது
வெல்வெட்டு போல் வந்த முகம் கல்வெட்டு போல் நின்றது
சிக்கென்று நானும் நீயும் ரெக்கை கட்ட வேண்டும்
சிட்டு போல் எட்டு திக்கும் சுற்றிப் பார்க்க வேண்டும்
வா மெல்ல வா நான் அள்ள வா..
(கல்யாணம்..)

படம்: அவ்வை ஷண்முகி
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

குளிர் 100 டிகிரி - மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்

This feature is powered by Dishant.com - Home of Indian Music


Hey yo! this song is dedicated to everyone,
who miss their friend.. this is how, it feels

மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா
வான் என்று உன்னையும் நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறளாய் வந்து என் வாழ்வில்
இரு வரியில் முடிந்தாயே

கண்மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்
கண்மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்

Homie..
Its been a while since we last met
cant forget what happened until my last breath
I regret my action coz what we had was evarlasting
hey no joke man my heart comes crashing

எதுக்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய்
உன்னாலே நினைவுகள் அலைமோதி விழுகின்றதே
ஒலியாக இருந்தாய் கடைசியில் சிரித்தாய்
நன்பா உன் நினைவால் நடைபிணம் ஆகிறேன்

Its all coming back...

கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே
தண்ணீரில் குமிழியை போல வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள் மயானம் ஆனதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே..
என் பள்ளியே முற்றுப்புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும் உனை நினைத்தே தோழா

கண்மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்
கண்மூடினால் (I close my eyes) இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் நீ தானே வருகிறாய்

I am walking down memory lane it's all coming back
dont ever forget me man, that's all i ask
you got the control of my thoughts and emotion
when the world stops yo you put it back into motion

மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா
நண்பனாக நீயும் வந்தாய் சொல்லாமலே நீயும் சென்றாய்
நீ எங்கு போனாலும் உன் நினைவால் அழுகிறேன்
என் நண்பனே உனை இழக்கிறேன் என் நண்பனே
கரைகிறேன் உன் நினைவிலே உனை இழக்கிறேன் என் நண்பனே

I didn't know the word friend had en end!

படம் : குளிர் 100 டிகிரி
இசை : சசி
பாடியவர் : சிலம்பரசன்

சிந்து பைரவி - தண்ணி தொட்டி தேடி வந்ததண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்

புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊருகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்
என்னை பார்த்து கோப்பை தள்ளாடும்
காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்

இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது
மானம் போச்சு கானம் போகாது
ரோஷம் பார்த்தாலே போதை தான் ஏறாது

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி சாமி சாமி

படம் : சிந்து பைரவி
பாடியவர் : KJ ஜேசுதாஸ்
இசை : இளையராஜா

விரும்பி கேட்டவர் : ஆயில்யன்

Wednesday, June 17, 2009

அபியும் நானும் - வா வா என் தேவதையே
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

(வா வா என் தேவதையே)

வான் மிதக்கும் கண்களுக்கு மயிலிறகால் மையிடவா
மார் உதைக்கும் கால்களுக்கு மணிக்கொலுசு நானிடவா

(வா வா என் தேவதையே)

செல்லமகள் அழுகைப் போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன்மகளின் புன்னகைப் போல்
யுகப் பூக்களுக்குப் புன்னகைக்கத் தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல
இந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலைப் போல
ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே

(வா வா என் தேவதையே)

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் பையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வமகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகைக் கண்டேன்
சிற்றாடைக் கட்டி அவள் சிரித்த போது
என்னைப் பெற்றவள் சாயல் என்று பேசிக் கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது
இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்

(வா வா என் தேவதையே)

படம்: அபியும் நானும்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

மாமாவுக்கு குடும்மா குடும்மா

மாமாவுக்கு குடும்மா குடும்மா அடி ஒன்னே ஒன்னு
உன் மாமன் போல வருமா வருமா என் கண்ணே கண்ணு
(மாமாவுக்கு..)

ஜோரான ஜோக்கரிது யாரோடும் சேரும்
வயசான நாட்டுக்கட்டை வரியந்தான் ஏறும்
நரை வந்தா காதலுக்கு திரை போடக்கூடும்
சரிசொன்ன மாமனுக்கு நரை மாறிப்போகும்
கல்யாணம் ஆகவில்லை கச்சேரி பாடவில்லை
கல்யாண காய்ச்சல் வந்து காயவுமில்லை
பெருமூச்சி வயசாச்சி இனி
முத்தல் இட்டா சத்தம் இல்லை
சப்பாத்திக்கு குருமா குருமா அடி அம்மா கண்ணு
உன் மாமாவுக்கு குடும்மா குடும்மா அடி ஒன்னே ஒன்னு

தங்கம் போல வேசமிட்டா விற்காது போலி
இல்லாத மாமனுக்கு இங்கென்ன ஜோலி
என்னைப்போல மீசை வச்சான் பொல்லாத ஆளு
பூனைக்கும் மீசை உண்டா என்னான்னு கேளு
சரீரம் சுத்தம் உண்டா
என்னைப்போல் மச்சம் உண்டா
தங்கப்பல் ரெண்டிருக்கு மாறுவதுண்டா
உள்ளங்கை ரேகை என் போல் ஓடுவதுண்டா
அடி தேனே சொல் தேனே அசல்
ஒன்னா ரெண்டா காதல் கொண்டா

அக்கரி பச்சா குருவி சிக்கிடிச்சா
என் போல் மீசையும் வச்சா வசிக்கிச்சா

படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசிய வாசுதேவன்

ரயில் சிநேகம் - இந்த வீணைக்கு தெரியாதுஇந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று

என் சொந்த பிள்ளையும் அறியாது
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று

மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு
அடைக்கலம் தந்தது கடல் தானே
தரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு
அடைக்கலம் தந்தது கிளை தானே
எங்கோ அழுத கண்ணீர் துடைக்க
எங்கோ ஒரு விரல் இருக்கிறது
காகம் குருவிகள் தாகம் தீர
கங்கை இன்னும் நடக்கிறது
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று

சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
சொல்லி தெரிந்த முறை தானே
சொர்க்கம் நரகம் என்பது எல்லாம்
சூழ்நிலை கொடுத்த நிறம் தானே
உள்ளம் என்பது சரியாய் இருந்தால்
உலகம் முழுதும் இருக்கிறது
உதிரப் போகும் பூவும் கூட
உயிர் வாழ்ந்திடத்தான் துடிக்கிறது

இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று
என் சொந்த பிள்ளையும் அறியாது
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று

இசை : VS நரசிம்மன்
பாடியவர் : சித்ரா
தொலைக்காட்சி தொடர் : ரயில் சிநேகம்

Tuesday, June 16, 2009

நெஞ்சில் ஜில் ஜில் - காதல் தானா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல்...

காதல் தானா இது காதல் தானா
நெஞ்சை கேட்டேன் இது காதல் தானா
காதல் தானே இது காதல் தானே
நெஞ்சை கேட்டேன் இது காதல் தானே
இந்த காதல் என்னுள் வந்துவிடுமா
அது உன்னை மட்டும் விட்டுவிடுமா
எங்கிருந்து வரும்? என்னை என்ன செய்யும்?
எங்கிருந்தும் வரும்.. உன்னை எல்லாம் செய்யும்
பூக்கள் கசக்குமே தென்றல் மணக்குமே மேகம் மிரட்டுமே
பூமி நழுவுமே வானம் திறக்குமே வாழ்க்கை புரியுமே

காதல் தானா இது காதல் தானா
நெஞ்சை கேட்டேன் இது காதல் தானே

கண்ணுக்குள் கலவரம் நெஞ்சுக்குள் சுயம்வரம்
பார்க்க பார்க்க பிடிக்கிறது.. இரண்டாம் இதயம் துடிக்கிறது
ஆயுள் ரேகை வளர்கிறது.. ஆறாம் அறிவும் குறைகிறது.
காதல் தானா.. இது காதல் தானா
மௌனம் கூட மௌனம் கூட கவிதை ஆகிறதா
மூச்சுக்காற்றில் மூச்சுக்காற்றில் எடையும் சேர்கிற்தா
சொர்கம் நரகம் தெரிகிறதா.. பூவில் தீயும் மலர்கிறதா
காதல் தானே காதல் தானே காதல் தானே

காதல் தானா இது காதல் தானா... காதல் தானா

போ என்றால் நெருங்குமே.. வா என்றால் விலகுமே
தூக்கம் இமையில் தொலைந்திடுமே கனவுகள் கண்ணில் கலைந்திடுமே
தானாய் கவிதை வந்திடுமே.. மெதுவாய் நேரம் நகர்ந்திடுமே..
காதல் தானே.. இது காதல் தானே
அப்பா அம்மா நண்பர் எல்லாம் அறவே பிடிக்கலியே
கண்ணாடிக்கு முன்னால் நின்றால் அய்யோ சகிக்கலியே
சூரியன் எங்கே புரியலியே.. சூழ்நிலை எதுவும் சரியில்லையே
காதல் தானா காதல் தானா காதல் தானா

காதல் தானே இது காதல் தானே
நெஞ்சை கேட்டேன் இது காதல் தானே
இந்த காதல் என்னுள் வந்துவிடுமா
அது உன்னை மட்டும் விட்டுவிடுமா
எங்கிருந்து வரும்? என்னை என்ன செய்யும்?
எங்கிருந்தும் வரும்.. உன்னை எல்லாம் செய்யும்
பூக்கள் கசக்குமே தென்றல் மணக்குமே மேகம் மிரட்டுமே
பூமி நழுவுமே வானம் திறக்குமே வாழ்க்கை புரியுமே

படம் : நெஞ்சில் ஜில் ஜில்
இசை : D. இமான்
பாடியவர்கள் : கேகே, சித்ரா

பொக்கிஷம் - நிலா நீ வானம் காற்றுநிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
(நிலா..)

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
(நிலா..)

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், சின்மயி

Monday, June 15, 2009

ஜோதா அக்பர் - முழுமதி அவளது முகமாகும்முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை.. கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அனிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

படம் : ஜோதா அக்பர்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்

தோரணை - வா செல்லம் வா வா செல்லம்வா செல்லம் வா வா செல்லம்
நடக்கிற பட்டாம் பூச்சி நீதானே
ஆறடி ஆள் தான் செல்லம்
உதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே

உன்னே உன்னே பார்க்கணும் பேசணும் பழகணும்
கண்ணும் கண்ணும் சிரிக்கணும்
கனவுதான் காணணும்
பொசுக்குன்னு புருஷன்ன்னு சொன்னது
ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

என் மனச என் மன ஏன் பூட்டுற
மேல் உதட கீழ் உதட ஏன் ஆட்டுற
ஐஸ் வைக்கிறான் ஐஸ் வைக்கிறான் உருகாதடி
நைஸ் பண்ணுறான் நைஸ் பண்ணுறான் நம்பாதடி
(வா செல்லம்..)

வானவில்லில் துப்பட்டா வாங்கி வந்து வைக்கட்டா
பௌர்ணமிக்கே பவுடர் போடட்டா
உன் அழகை கல்வெட்டா நான் செதுக்க சொல்லட்டா
பாதையெல்லாம் பூவை நிக்கட்டா

ஊரில் உள்ள மரங்கள் ஒன்னுமே விடாம
உன் பேரை தான் செதுக்கி வைச்சேன்
வச்சேன் நெஞ்சில் வைச்சேன்

என் கனவில் என் கனவில் உன் சித்திரம்
என் எதிரில் என் எதிரில் நட்சத்திரம்
நூல் விடுறான் நூல் விடுறான் சிக்காதடி
ரீல் விடுறான் என் எதிரில் மாத்தாதடி

இங்கிலாந்து ராணிக்கா இந்தியாவில் கல்யாணம்
என்பது போல் கட்டி கொல்வேனே
நீ எனக்கு பொஞ்சாதி ஆன பின்னே என் பாதி
ராணி மகா ராணி நீ தானே

முதல் குழந்தை பிறக்கும் சிரிக்கும் அன்னேரம்
எனக்கு மட்டும் அழகே உன்ன சேர்த்து ரெட்டை புள்ள

ஃபுல் கலரில் ஃபுல் கலரில் படம் காட்டுறான்
ரீல் கணக்கில் ரீல் கணக்கில் பூ சுத்துறான்
(வா செல்லம்..)

படம்: தோரணை
இசை: மணிஷர்மா
பாடியவர்: உதித் நாராயணன்

Sunday, June 14, 2009

வானமே எல்லை - சிறகில்லை நான் கிளியில்லை

Get this widget | Track details | eSnips Social DNA


சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
பாடு சுந்தரி.. சுந்தரி..

சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை
வயதே கிடையாது.. முயல் போல் விளையாடு..
உன் பங்கை பூமியில் தேடு... தேடு..
சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை

ஐந்தறிவுள்ள ஜீவன் யாவும் வாழவில்லையா.. சுவை காணவில்லையா..
ஆறாம் அறிவு கொண்டோம்.. அது ஒன்றே தொல்லையா..
எத்தனை கோடி இன்பம் இந்த மண்ணில் இல்லையா.. பெண் கண்ணில் இல்லையா
கானல் நீரில் தூண்டில் நாம் போட்டோம் இல்லையா..
வாழ்க்கையின் இன்பம்.. நாட்களில் இல்லை..
சில நாழிகை வாழும் சிற்றீசல் கூட தீபங்கள் தேடும்.. தேடும்..
சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை

சூரியன் மேற்கில் வீழ்ந்த பின்னும் வாழ்க்கை உள்ளது.. அதை நிலவு சொன்னது
நிலவு தேய்ந்த போதும் அட விண்மீன் உள்ளது
வெட்டிய போதும் வேரில் இன்னும் வாழ்க்கை உள்ளது.. தளிர் வந்து சொன்னது
தொட்டாச்சிணுங்கி விரியும் அதில் வாழ்க்கை உள்ளது
நேற்றொரு வாழ்க்கை... இன்றொரு வாழ்க்கை
எதுவாகிய போதும்.. நலமாய் இரு போதும்.. இதுவே என் வேதம்.. வேதம்..

சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை
வயதே கிடையாது.. முயல் போல் விளையாடு..
உன் பங்கை பூமியில் தேடு... தேடு..

படம் : வானமே எல்லை
இசை : மரகதமணி
பாடியவர் : சித்ரா
பாடல் வரிகள் : வைரமுத்து

சர்வம் - காற்றுக்குள்ளே வாசம் போலகாற்றுக்குள்ளே வாசம் போல வந்தாய் எனக்குள் நீ
காட்டுக்குள்ளே மழையை போல ஆட உனக்குள் நான்
மாறாதே மண்ணோடு என்றுமே
மழை வாசம் நெஞ்சோடு உன்னைப்போல்
தீராதே கண்ணோடு என்றுமே
உயிர் ஈரம் எப்போதும் என்னை போல் என்னை போல்

நடு காட்டில் தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே
நடு காற்றில் தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே
இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக
ஏங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீ கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ
இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக
ஏங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீ கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ

கடல் காற்றில் இதயம் பட்டதே
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே
அலை மடி நீட்டுதே
அதில் உன்னை ஏந்துதே
கடல் காற்றில் இதயம் பட்டதே
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே
அலை மடி நீட்டுதே
அதில் உன்னை ஏந்துதே
தாங்காதே தாகங்கள் மண்ணிலே
உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே
நீங்காதே நிறம் மாற்றம் என்றுமே
உன் தேகம் நாடேதோ போகுதே போகுதே

படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

Saturday, June 13, 2009

சர்வர் சுந்தரம் - சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
லல்லலல்லல் லல்லலல்லல் லல்லலல்லல் லாலாலலா
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

லாலலால லாலலால லாலலால லாலலாலா
லாலலால லாலலால லாலலால லாலலாலா

கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க
கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க
கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க
கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க
பொட்டு வைத்த பூவையர் போட்டி போட
பொல்லாத பருவத்தை கல்லாக்கியே
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

ஒஓஓ ஒஓஓஒ ..
ஒஓஓ ஒஓஓ ..

படை கொண்ட பல்லவன் ஆக்கிவைத்தான்
பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்
கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான்
காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்...
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

லாலலால லாலலால லாலலால லாலலாலா
லாலலால லாலலால லாலலால லாலலாலா

அன்னமிவள் வயதோ பதினாரு
ஆண்டுகள் போயின ஆறுநூறு
இன்னும் இவள் முதுமை எய்தவில்லை
என்னதான் ரகசியம் தெரியவில்லை
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

லாலலால லாலலால லாலலால லாலலாலா
லாலலால லாலலால லாலலால லாலலாலா

படம் : சர்வர் சுந்தரம்
பாடியவர் : பி.சுசீலா
இசை : எம்.எஸ். விஸ்வநாதன் - ராம்மூர்த்தி

முத்திரை - ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில்ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில்
மின்னல் ஒன்றை பார்த்தேன்
சாலை ஓரத்தில் சேலை கட்டிய
சோலை ஒன்றை பார்த்தேன்
கண்ணுக்குள் நீந்தும் குட்டி குட்டி போவே
நெஞ்சுக்குள் பூக்கும் பட்டு பட்டு பூவே
(கண்ணுக்குள்..)
அலையாடிடும் கடல் பூவே
அடி நெஞ்சில் காதல் வந்து மோதும்
அதிகாலையும் அந்தி மாலையும்
தொடுவானம் வண்ண கோலம் போடும்
(ஜூலை..)

தொட்டு தொட்டு செல்லும் காற்றிலே
என்னை இந்த புது வாசனை
சுத்தி சுத்தி வரும் பூமியில்
சுற்றி சுற்றி வர யோசனை
காலம் அதை நிறுத்தி பிடித்து
ஒரு சிறையில் போட வேண்டும்
கனவு அதை துரத்தி பிடித்து
இரு விழியில் போட வேண்டும்
சிறு குழந்தையை போல மாறுவோம்
என்ன விதிமுறை யாவும் மீறுவோம்
சிற்றின்பம் அதை தேடலாமே தோழா
(ஜூலை..)

என்ன இடம் என்று பார்த்துதான்
மேகம் மழை தூறுமா
எந்த கிளை என்று பார்த்துதான்
பறவைகள் வந்து கூடுமா
ஆசை அது உன்னை
மனதில் வருவதில்லை
ஆணும் ஒரு பெண்ணும் சேர
எந்த தடையும் இங்கு இல்லை
நதி மலையில் பிறக்கும் காரணம்
கடல் மடியில் சென்று சேரவே
சிற்றின்பம் அதை தேடலாமே தோழா
(ஜூலை..)

படம்: முத்திரை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: முஹம்மட் அஸ்லாம், ராஹுல் நம்பியார், தான்வி, பிரியா

Friday, June 12, 2009

சூரியகாந்தி - பரமசிவன் கழுத்தில் இருந்துபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

படம் : சூரியகாந்தி
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்

அன்னை - புத்தியுள்ள மனிதரெல்லாம்

Get this widget | Track details | eSnips Social DNA


புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

படம் : அன்னை
பாடியவர் : சந்திரபாபு
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : R சுதர்சனம்

அங்காடித் தெரு - எங்கே போவேனோஎங்கே போவேனோ
நீ என்னை நீங்கிவிட்டாய்
எங்கே போவேனோ
என் இதயத்தை வாங்கி விட்டாய்
எங்கே போவேனோ
என் கண்ணை கீறி விட்டாய்
எங்கே போவேனோ
என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்
கூண்டுக்குள் இருக்கும் பறவை நான்
என் கண்ணிலே ஒரு துண்டு வானம் நீதானடி
(எங்கே போவேனோ..)

தீராது வானின் வழி
எதிர்க்காற்றில் போகும் கிளி
இறை தேடி வாடும் வலி
கூடென்று காட்டும் விழி
பந்தாடுதே என்னை வாழ்தலின் நியாயங்கள்
சம்பாரித்தே தீருமோ
துணை போலத்தானா
பெண்கள் வீசிடும் வார்த்தையும்
வழிகின்றதே துக்கம் தான்
நீ என்னை நீங்கிவிட்டாய்
(எங்கே போவேனோ..)

தெய்வங்கள் இங்கே இல்லை
இருந்தாலும் இரக்கம் இல்லை
கழுத்தோடு கல்லை கட்டி
கடலோடு போட்டாள் என்னை
மரணத்தை தானா இந்த காதலும் கேட்குது
பொய் வேஷமே உள்ளதே எங்கும்
இல்லாமை தானா இங்கு காதலை மாய்ப்பது
என் சூழ்நிலை கொல்லுதே
நீ என்னை நீங்கிவிட்டாய்
(எங்கே போவேனோ..)

படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ், விஜய் அந்தோணி
பாடியவர்கள்: பென்னி தயால், MK பாலாஜி, ஜானகி ஐயர்
வர்கள்: நா. முத்துக்குமார்

புது மனிதன் - நிலவுக்குத் தாலாட்டு சோலைக் குயிலே நீ பாடு

நிலவுக்குத் தாலாட்டு சோலைக் குயிலே நீ பாடு
நிலவுக்குத் தாலாட்டு சோலைக் குயிலே நீ பாடு
மரகத வீணை நரம்புகள் ஊமை இசையே பாடாதா - பாடாதா
- நிலவுக்குத் தாலாட்டு

பூ மெத்தை மேலே முள் வைத்துப் போனால்
பிள்ளை உறங்காது
ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில்
கண்ணீர் சுமந்தாளே!

பூ மெத்தை மேலே முள் வைத்துப் போனால்
பிள்ளை உறங்காது
ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில்
கண்ணீர் சுமந்தாளே!

இசை மழை தேடும் நதியெனப் பாடி
இசை மழை தேடும் நதியெனப் பாடி
நடந்திட வந்தாளே!
வெள்ளத்திலே செல்லக்குயில்
மௌனம் ஆனாளே!

நிலவுக்குத் தாலாட்டு சோலைக் குயிலே நீ பாடு
நிலவுக்குத் தாலாட்டு சோலைக் குயிலே நீ பாடு
மரகத வீணை நரம்புகள் ஊமை இசையே பாடாதா - பாடாதா
- நிலவுக்குத் தாலாட்டு

படம் : புது மனிதன்
இசை : இளையராஜா
பாடியவர் : LR ஈஸ்வரி

Thursday, June 11, 2009

சிந்து பைரவி - கலைவாணியேகலைவாணியே... கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...

சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய்
மடிமீது மரித்தேன் மறுஜென்மம் கொடுத்தாய்
சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய்
இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை மறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய்.. ஆ....
முகம் காட்ட மறுத்தாய்.. முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள்
தெரிக்கிறது துடைத்துவிடு.. கலைவாணியே..

உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...

உள்ளம் அழுதது உன்னை தொழுதது உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை இடையினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டும் உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி
க்ண்ணீர் பெருகியதே... ஆ....
கண்ணீர் பெருகிய கண்ணில் உன்முகம் அழகிய நிலவென மிதக்கும்
உயிரே உயிரின் உயிரே அழகே அழகின் அழகே
இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை
இனியொரு பிரிவில்லை துயர் வர வழியில்லை.. வருவாய்..

படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
பாடியவர் : KJ ஜேசுதாஸ்

நெஞ்சில் ஓரு ஆலயம் - நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

படம் : நெஞ்சில் ஓரு ஆலயம்
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : PB ஸ்ரீநிவாஸ்

அங்காடித் தெரு - கதைகளை பேசும் விழி அருகேகதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
(கதைகளை..)

ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
(கதைகளை..)

கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா
கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை
ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை
வெறும் கரையில் படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா
உன் மடியில் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி
(கதைகளை..)

உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே
ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்
ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்
நேற்றென்னும் சோகம்
நெருப்பாய் வந்து தீ மூட்டும்
இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே
(கதைகளை..)

படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ், விஜய் அந்தோணி
பாடியவர்கள்: பென்னி தயால், ஹம்ஷிகா
வரிகள்: நா. முத்துக்குமார்

Wednesday, June 10, 2009

பணம் படைத்தவன் - கண் போன போக்கிலேகண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

படம் : பணம் படைத்தவன்
இசை : விஸ்வநாதன் - ராம்மூர்த்தி
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

நியூ - If you wanna come along


Get Your Own Hindi Songs Player at Music Plugin

If you wanna come along and come along and sing a song
This is how we do it when we are having fun
It is our time to play around and getting up
Get it up together five four three two and a one
Is everybody ready? Tell me when you are ready
Is everybody ready? Tell me when you are ready

வா என்றால் வணக்கம்... பூ என்றால் மணக்கும்
வாசப்பூ வணக்கும்.. வைத்தாலே மணக்கும்
பூ வெடிக்கும்.. தேன் வடிக்கும்...
இடை துடிக்கும், நடிக்கும், தேர் போல் குதிக்கும்
கொஞ்ச நேரம் குச்சிப்புடி கொஞ்ச நேரம் கதகளி
கொஞ்ச நேரம் மனிப்பூரி வருவாயா...
கொஞ்ச நேரம் ராஜஸ்தானி கொஞ்ச நேரம் பஞ்சாபி
கொஞ்ச நேரம் காஷ்மீரி.. ஓ சைய்யா...

Gotta get gotta get gotta get up,
If you wanna be a lady and you never can be free
Gotta get gotta get gotta get up
If you really want to be strong, take a look at me
Get up get up turning all around
Get up get up we are standing on the road
Get up get up turning all around
Get up get up we are standing on the road
Calling all the ladies.. mothers and the babies..
Calling all the girls to sing along
Tell me can you hear me.. can you see me clearly
wanna make you sing this happy happy song..

அஞ்சு ஆறு இன்ச்சு தானே இந்த இடை
கனமாய் ஆடை சூடாது
அதனால் அனிந்தது மினி ஸ்கர்ட்டு
குற்றம் கூறக்கூடாது
இடைதான் தாவுது மேலேதான்
இதன் பேர் ரஷ்யன் பேலேதான்
இது ஆட்டம் போடுற ஏஜுங்க
இந்த ஏஜுக்கேது ஒரு கேஜுங்க
ஒரு வானதேவதை வந்து ஆடினால் ஊரே பாக்காதோ

If you wanna come along and come along and sing a song
This is how we do it when we are having fun
கொஞ்ச நேரம் குச்சிப்புடி கொஞ்ச நேரம் கதகளி
கொஞ்ச நேரம் மனிப்பூரி வருவாயா..

சுண்டிவிட்ட நாணயம்போல் துள்ளிவிழு
நோய்தான் உன்னை தீண்டாது
காட்டருவி போலே ஒரு பாட்டு எடு
கவலைகள் உன்னை தாக்காது.. ஆ....
கனவை நாளும் காணுங்கள்..
பலிக்கும் ஓர் நாள் பாருங்கள்..
அட பாட்டுக்கேது ஒரு வேலியடா
அட பூமி எங்குமே ஜாலியடா
ஒரு பாஷையின்றியே தேசம் தாண்டியே பாட்டும் போகாதோ

கொஞ்ச நேரம் குச்சிப்புடி கொஞ்ச நேரம் கதகளி
கொஞ்ச நேரம் மனிப்பூரி வருவாயா..
கொஞ்ச நேரம் ராஜஸ்தானி கொஞ்ச நேரம் பஞ்சாபி
கொஞ்ச நேரம் காஷ்மீரி.. ஓ சைய்யா...
Is everybody ready? Tell me when you are ready
Is everybody ready? Tell me when you are ready
வா என்றால் வணக்கம்... பூ என்றால் மணக்கும்
வாசப்பூ வணக்கும்.. வைத்தாலே மணக்கும்
பூ வெடிக்கும்.. தேன் வடிக்கும்...
இடை துடிக்கும், நடிக்கும், தேர் போல் குதிக்கும்

படம் : நியூ
இசை : AR ரஹ்மான்
பாடியவர்கள் : சின்மயி, அனுபமா, அபர்ணா

சத்ரியன் - பூட்டுக்கள் போட்டாலும்பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா வா... பூத்திருப்போம் பூவா..
கட்டுக்காவல் விட்டுப்போக பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்

(பூட்டுக்கள் போட்டாலும்...)

பாடத்தை தள்ளி வைப்போம்
பாட்டுக்கள் அள்ளி வைப்போம்
ஆனந்த கோலத்துக்கு ஆரம்ப புள்ளி வைப்போம்
பறவை போல பறந்து பறந்து
படிப்பை கொஞ்சம் மறந்து மறந்து
ஆணையிட்டு ஆடவைத்தால் தாமரை பூங்கொடி ஆடிடுமா

(பூட்டுக்கள் போட்டாலும்...)

மாமர சிட்டுக்களே.. மாதுளை மொட்டுக்களே
காலங்கள் உள்ளவரை... நான் உங்கள் பக்கத்திலே...
அறிவு நாளும் வளர வளர
தினமும் நானும் கதைகள் கூற
பூங்குருவி தேனருவி ஆடிட வந்ததென் கைதழுவி

(பூட்டுக்கள் போட்டாலும்...)

படம் : சத்ரியன்
இசை : இளையராஜா
பாடியவர் : S ஜானகி

அங்காடித் தெரு - கண்ணில் தெரியும் வானம்கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா
புல்லும் பூவும் வாழும் உலகம்
இங்கு நீயும் வாழ வழியில்லையா
பூமியில் ஏழைகளின் ஜனனம்
அது கடவுள் செய்த பிழை இல்லையா
இது மிக கொடுமை
இளமையில் வறுமை

பசிதான் மிகப்பெரும் மிருகம்
அதை அடக்கிட வழிகள் இங்கில்லையா
கண்ணீர் துளிகளின் ஆழம்
அது கடலை விடவும் பெரிதில்லையா
இது மாறுமா?

எதையும் விற்கும் எந்திர உலகம்
எல்லாம் இங்கே உண்டு
மனிதம் மட்டும் தேடிப்பார்த்தும்
எங்கும் இல்லை
கண்ணும் காதும் கையும் காலும்
இல்லா மனிதர் உண்டு
வாயும் வயிறும் இல்லா மனிதர்
எங்கும் இல்லை
மனிதம் எங்கும் அன்பின் விதை
அள்ளி தூவ கண் வேண்டும்
வருங்காலத்தில் வறூமை இல்லா
உலகம் வேண்டும்
(புல்லும்..)

படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ்

Tuesday, June 9, 2009

ஏ.ஏம்.ராஜாவின் மனதைவருடும் மயிலிறகு1.உள்ளங்கள் ஒன்றாகி >> 2.நிலவும் மலரும் பாடுது >> 3.வாடிக்கை மறந்திடுவோனோ
4.தேன் உண்ணும் வண்டு >> 5.தனிமையிலே இனிமை காணமுடியுமா >> 6.ராசி நல்ல ராசி
7.செந்தாமரையே செந்தேன் இதழே >> 8.தங்கநிலவில் >> 9.கன்னியரின் வெள்ளைமனம் போல் >> 10.என்னென்ன இன்பமே வாழ்வில் >> 11.அழகு நிலாவின் அமைதி கொஞ்சும்
12.பழகும் தமிழே பார்த்திபன் மகனே >> 13.மயக்கும் மாலை பொழுதே >> 14.தென்றல் உறங்கிய போதும்.

Get this widget | Track details | eSnips Social DNA


தேன்கிண்ண நேயர்களே மேலே உள்ள பாடல் பல்லவிகள் அதிகம் கேட்டவை தான் இருந்தாலும் ஏ.ஏம்.ராஜாவின் மனதைவருடும் மயிலிறகாய் அவரின் அபூர்வமான தகவல்களூடன் மீண்டும் மீண்டும் பாடல்களை கேட்டு மகிழுங்கள் இந்த ஒலித்தொகுப்பை அழகாக தொகுத்து வழங்கியவர் திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன் அவருக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

இங்கே பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்

நள தமயந்தி - என்ன இது என்ன இதுஎன்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றது
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது
நாடி எங்கும் ஓடியொரு கோடி மின்னல் கோலமிடுதோ

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ
பூமி எதிர்பார்த்து மழைத்தூறல் விழுமோ
காதல் வர கால் விரல்கள் கோலமிடுமோ
கைநகத்தை பல்கடிக்க ஆசைப்படுமோ
எதுவுமே... எதுவுமே... எதுவுமே..
எதுவுமே நடக்கலாம்
இறகின்றி இளமனம் பறக்கலாம்
இதுவரை விடுகதை
இனிவரும் கதை ஒரு தொடர்கதை
வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்
ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

காற்றடித்து அணைவதில்லை காதல் அகல் தான்
சாட்சியென நிற்கிறது தாஜ்மஹல் தான்
கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது
கண்ணுறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது
இனி வரும்....
இனி வரும் இரவெல்லாம்
சீனத்தின் சுவரைப்போல் நீளலாம்
உனக்கு நான் பிறந்தவள்
மனமெனும் கதவைத்தான் திறந்தவள்
காதல் பிறந்தால் காவல் கடக்கும்
போட்டுவைத்த கோட்டுக்குள்ளே காதலென்றும் நின்றதில்லை

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றது
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது
நாடி எங்கும் ஓடியொரு கோடி மின்னல் கோலமிடுதோ

படம் : நள தமய்ந்தி
இசை : ரமேஷ் விநாயகம்
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம், சின்மயி

Last 25 songs posted in Thenkinnam