பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா வா... பூத்திருப்போம் பூவா..
கட்டுக்காவல் விட்டுப்போக பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்
(பூட்டுக்கள் போட்டாலும்...)
பாடத்தை தள்ளி வைப்போம்
பாட்டுக்கள் அள்ளி வைப்போம்
ஆனந்த கோலத்துக்கு ஆரம்ப புள்ளி வைப்போம்
பறவை போல பறந்து பறந்து
படிப்பை கொஞ்சம் மறந்து மறந்து
ஆணையிட்டு ஆடவைத்தால் தாமரை பூங்கொடி ஆடிடுமா
(பூட்டுக்கள் போட்டாலும்...)
மாமர சிட்டுக்களே.. மாதுளை மொட்டுக்களே
காலங்கள் உள்ளவரை... நான் உங்கள் பக்கத்திலே...
அறிவு நாளும் வளர வளர
தினமும் நானும் கதைகள் கூற
பூங்குருவி தேனருவி ஆடிட வந்ததென் கைதழுவி
(பூட்டுக்கள் போட்டாலும்...)
படம் : சத்ரியன்
இசை : இளையராஜா
பாடியவர் : S ஜானகி
Wednesday, June 10, 2009
சத்ரியன் - பூட்டுக்கள் போட்டாலும்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
இந்த பாட்டு ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா கேட்டுக்கிட்டே வரும்போது முடிவில ஒரு கொலைக்காட்சி வரும்ல அதை பார்த்துட்டு பயந்துட்ட்டேன் ! - ரொம்ப குட்டி பையனா இருக்கும்போது
பட் பாட்டு சூப்பரூ :)
ஜி3 யக்கோ..
எனக்கு பிடிச்ச பாட்டு இது. :-))
//பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று//
என்னமா அருமையா எழுதியிருக்காரு கவிஞர். :-)
Post a Comment