பாடலை கேட்க இங்கே செல்லுங்கள்
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவநிதியாக
குன்றாத நவநிதியாக
துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
நீ வாழ்க.. நீ வாழ்க..
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
மலடென்ற பேரும் பொய்யாக
மலடென்ற பேரும் பொய்யாக
வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
நீ வாழ்க... நீ வாழ்க..
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
படம் : பேசும் தெய்வம்
இசை : KV மகாதேவன்
பாடியவர் : சூலமங்களம் ராஜலக்ஷ்மி
Friday, June 26, 2009
பேசும் தெய்வம் - நூறாண்டு காலம் வாழ்க
பதிந்தவர் G3 @ 2:28 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
வாழ்த்து பாடலென்றாலே டக்குன்னு ஞாபகத்துக்கு வர வைக்கும் வரிகளாகி போனதுதான் இந்த பாடலின் சாதனை !
பகிர்வுக்கு நன்றி :)
இப்பாடலை சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இணைந்து பாடியவர் பாடகி சரளா
இந்த பாடலை கேட்க எவ்வளவு இனிமையான முறையில் இருக்கிறது
இதில் தமிழின் பெருமையை எடுத்து சொல்லும் விதமாக இந்த வரிகள் மிக மிக அருமை
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
Post a Comment