எங்கே போவேனோ
நீ என்னை நீங்கிவிட்டாய்
எங்கே போவேனோ
என் இதயத்தை வாங்கி விட்டாய்
எங்கே போவேனோ
என் கண்ணை கீறி விட்டாய்
எங்கே போவேனோ
என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்
கூண்டுக்குள் இருக்கும் பறவை நான்
என் கண்ணிலே ஒரு துண்டு வானம் நீதானடி
(எங்கே போவேனோ..)
தீராது வானின் வழி
எதிர்க்காற்றில் போகும் கிளி
இறை தேடி வாடும் வலி
கூடென்று காட்டும் விழி
பந்தாடுதே என்னை வாழ்தலின் நியாயங்கள்
சம்பாரித்தே தீருமோ
துணை போலத்தானா
பெண்கள் வீசிடும் வார்த்தையும்
வழிகின்றதே துக்கம் தான்
நீ என்னை நீங்கிவிட்டாய்
(எங்கே போவேனோ..)
தெய்வங்கள் இங்கே இல்லை
இருந்தாலும் இரக்கம் இல்லை
கழுத்தோடு கல்லை கட்டி
கடலோடு போட்டாள் என்னை
மரணத்தை தானா இந்த காதலும் கேட்குது
பொய் வேஷமே உள்ளதே எங்கும்
இல்லாமை தானா இங்கு காதலை மாய்ப்பது
என் சூழ்நிலை கொல்லுதே
நீ என்னை நீங்கிவிட்டாய்
(எங்கே போவேனோ..)
படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ், விஜய் அந்தோணி
பாடியவர்கள்: பென்னி தயால், MK பாலாஜி, ஜானகி ஐயர்
வர்கள்: நா. முத்துக்குமார்
Friday, June 12, 2009
அங்காடித் தெரு - எங்கே போவேனோ
பதிந்தவர் MyFriend @ 5:14 AM
வகை 2009, GV பிரகாஷ் குமார், MK பாலாஜி, பென்னி தயால், விஜய் ஆண்டனி, ஜானகி ஐயர்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment