கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
படம் : பணம் படைத்தவன்
இசை : விஸ்வநாதன் - ராம்மூர்த்தி
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
Wednesday, June 10, 2009
பணம் படைத்தவன் - கண் போன போக்கிலே
பதிந்தவர் G3 @ 6:34 PM
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
பாஸ் பழைய பாட்டா?
சூப்பரூ:)
//நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்//
இந்த வரிகள் பாடும்போது ரொம்ப ஃபீலிங்க் பிலிங்கா இருக்கும் !
வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்//
கவிஞரே உன் வரிகளில் வாழ்க்கை இருக்கிறது
உன் வரிகளை வாழ்க்கையில், வரிந்துக்கொள்ளுபவர்களுக்கு
நல் வாழ்க்கை இனிக்கிறது !
//இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்///
வாழ முயற்சிக்கிறேன் இப்படியான ஒரு வாழ்வினை :)
ever green song. thanks
Post a Comment