Tuesday, June 23, 2009

நம்ம கடை வீதி கலக்கலக்கும்




நம்ம கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக அவ நடந்து வந்தா
நம்ம பஸ் ஸ்டாண்டு பளப்பளக்கும்
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா
அவ பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
மெல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு போட்டதைப் போல
சுண்டி சுண்டி வந்திழுக்கும்
(கடை வீதி..)

சிங்காரப் பூங்கொடிக்கு ஒரு சித்தாட காலெதுக்கு
அவ சில்லுன்னு சிரிக்கையிலே அடி ஐயடி ஐயா
சிறு வெள்ளிக் கொலுசெதுக்கு அடி ஐயடி ஐயா
கண்ணாலே சம்மதம் சொன்னா கைய புடிச்சா ஒத்துக்குவா
கல்யாணம் பண்ணுமின்னா வெக்கப்படுவா
வெறெதும் சங்கடமில்ல கங்கதி எல்லாம் கத்துக்குவா
விட்டு விலகி நின்னா கட்டிப்பிடிப்பா
வெட்ட வெளியில் ஐயயோ
ஒரு மெத்தை விரிச்சேன் ஐயய்யய்யோ
தொட்டு மலர தொட்டு பறிச்சேன்
மெல்ல சிரிச்சா
(கடை வீதி..)

அடி முக்காலும் காலும் ஒன்னு
இனி ஒன்னோட நானும் ஒண்ணு
அடி என்னோட வாடிப்பொண்ணு அடி ஐயய்யோ
ஒரு செம்மீனை போல கண்ணு
ஒன்னாக கும்மியடிப்போம்
ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம்
விட்டாக்கா உன் மனசை கொள்ளையடிப்பேன்
கல்யஅணப் பந்தலக்கட்டி பத்திரிக்கையும் வச்சுக்குவோம்
இப்போது சொன்னதை எல்லாம் செஞ்சு முடிப்போம்
தங்கக் குடமே ஐயயோ
புது நந்தவனமே ஐய்யய்யோ
சம்மதம் சொல்லி இந்த இடமே இன்பச் சொகமே
(கடை வீதி..)

படம்: அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

3 Comments:

ஆயில்யன் said...

ONCE UPON A TIME நான் இந்த பாட்டுத்தான் பாடிக்கிட்டு திரிஞ்சப்ப எங்க கிளாஸ் வாத்தியாரு வந்து ஒரு அப்பு வுட்டாரு அதுதான் இப்ப ஞாபகம் வந்துச்சு அதே டைம்ல பாட்டும் பாடிக்கிட்டிருக்கேன் இப்ப :))))

சூப்பரேய்ய்ய்ய்!

கானா பிரபா said...

தங்கச்சி

கலக்கல் பாட்டு போட்டேம்மா :)

gopalv1958 said...

Second Parah - 5th line - the pronounciation of "vetkappaduva" by SPBji - For this itself we can hear the song for a number of times.

One of the superb songs.

V. Gopalakrishnan
Coimbatore.

Last 25 songs posted in Thenkinnam