கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா
புல்லும் பூவும் வாழும் உலகம்
இங்கு நீயும் வாழ வழியில்லையா
பூமியில் ஏழைகளின் ஜனனம்
அது கடவுள் செய்த பிழை இல்லையா
இது மிக கொடுமை
இளமையில் வறுமை
பசிதான் மிகப்பெரும் மிருகம்
அதை அடக்கிட வழிகள் இங்கில்லையா
கண்ணீர் துளிகளின் ஆழம்
அது கடலை விடவும் பெரிதில்லையா
இது மாறுமா?
எதையும் விற்கும் எந்திர உலகம்
எல்லாம் இங்கே உண்டு
மனிதம் மட்டும் தேடிப்பார்த்தும்
எங்கும் இல்லை
கண்ணும் காதும் கையும் காலும்
இல்லா மனிதர் உண்டு
வாயும் வயிறும் இல்லா மனிதர்
எங்கும் இல்லை
மனிதம் எங்கும் அன்பின் விதை
அள்ளி தூவ கண் வேண்டும்
வருங்காலத்தில் வறூமை இல்லா
உலகம் வேண்டும்
(புல்லும்..)
படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ்
Wednesday, June 10, 2009
அங்காடித் தெரு - கண்ணில் தெரியும் வானம்
பதிந்தவர் MyFriend @ 5:56 AM
வகை 2009, GV பிரகாஷ் குமார்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment