கங்கை கரை தோட்டத்தில் கவிஞருக்கு ஓர் கவிமாலை - மயிலிறகு
ஆமாம் இசையன்பரகளே சென்ற வாரம் வானொலியில் இரவு நேரத்தில் ஒலிப்பரபட்ட அற்புதமான நிகழ்ச்சிதான் இவை. இந்த தேன்கிண்ணத்தில் புதுப்பாடல்கள் கேட்டு தொடர்ந்து கேட்டு ஓடிவரும் தேன்கிண்ண நேயர்களூக்கு இந்த கங்கை கரைத் தோட்டத்தில் அமர்ந்து ஹாயாக ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஓர் அற்புதமான கவிச்சோலை. கீழே உள்ள பாடல் பல்லவிகளின் வழித்தடத்தை பாருங்கள் நிச்சயம் உங்கள் கால்கள் இங்கே இளைப்பாறி செல்லலாமே என்று உங்களையும் அறியாமல் இழுத்துசென்று அமர்த்திவிடும். ஓரு மணி நேரம் இளைப்பாறி செல்லுங்கள் அன்பர்களே.
1.கனவுகளே கனவுகளே >> 2.சமுத்திர ராஜகுமாரி >> 3.மலர்ந்தும் மலராத >>
4.ஆலயமணியின் ஓசையை >> 5.உன் கண்ணில் நீர் வழிந்தால் >> 6.ஆட்டுவித்தால் யார் ஒருவர் >> 7.வான் நிலா நிலா அல்ல >>8.கேட்டதும் கொடுப்பவனே >>9.வீடுவரை உறவு வீதி வரை மனைவி.
பதிவிறக்கம் செய்ய இங்கே..
பாடல் பல்லவிகளை பார்த்தால் எல்லாமே மிகப்பிரபலமான பாடல்கள் தான், நான் அதிகம் எழுதப்போவதில்லை அதற்கு அவசியமும் இல்லை ஏனென்றால் வானொலி அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவர்கள் தன் சுந்தரக்குரலில் மிக மிக அற்புதமாக நிறுத்தி நிதானமாக தொகுத்து வழங்கியிருப்பது மிகவும் சிறப்பு. அதிகபட்சம் எல்லோரும் இணையத்தில் தெரிந்துவைத்திருக்கும் தகவல்கள் தான். இருந்தாலும் மீண்டும் கேட்டுப்பாருங்கள் கவிஞர் கண்ணதாசன் பாடல் அனுபவங்கள் சேகரிக்க வைக்கத்தோன்றும் அனுபவம் பெற்றவை. மிகவும் சிறப்பாக இணைய நண்பர்களூகாக தொகுத்து வழங்கிய திரு.க.சுந்தரராஜன் அவர்களூக்கு தேன்கின்ண நேயர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி. கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளையும் தாருங்கள்.
0 Comments:
Post a Comment