புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
ஆல்பம் : கிருஷ்ணகானம்
வரிகள் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர் : டி.எம். செளந்தர்ராஜன்
2 Comments:
இந்த பாட்டோட ஒரு ஃப்ளாஷ் பேக் அடங்கியிருக்கு. இண்டர் படிக்கறச்ச ஒரு பையன் இந்த பாட்டை ப்ரேயர்ல சுமாரா பாடினான். நமக்கு போஜ மகராஜன்னு நினைப்பு. முன்னே பின்னே தெரியாது. நேரா கூப்பிட்டு பாராட்டினேன். அவன் நாவிதர் வகுப்பை சேர்ந்தவன். ரொம்பவே இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். அதை குறைக்க நான் இடம் கொடுக்க அவன் மடத்தை பிடுங்க வயித்தெரிச்சல்பா
மார்கழியில் இந்த பாடல் ஒலிக்காத கோவில்களே இல்லை என்னுமளவுக்கு மிக பிரபலமான பாடல் - கண்ணதாசனில் வரிகளும் விஸ்வநாதனின் இசையில் டிஎம்ஸ் குரல் பக்தி மழை பொழிய செய்த திரை இசைப்பாடல்
நன்றி பாஸ் :)
Post a Comment