கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியாக் கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்க்கிறதே
நந்தகுமாரா நந்தகுமாரா
நாளை மிருகம் கொல்வாயா
மிருகம் தின்ற எச்சம் கொண்டு
மீண்டும் கடவுள் செய்வாயா
குரங்கில் இருந்து மனிதன் என்றால்
மீண்டும் இறையாய் ஜனிப்பானா
மிருக ஜாதியில் மிறந்த மனிதா
தேவஜோதியில் கலப்பாயா
நந்தகுமாரா
கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியாக் கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்க்கிறதே
கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
காற்றில் ஏறி மழையில் ஆடி
கவிதை பாடும் பறவை நான்
கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
காற்றில் ஏறி மழையில் ஆடி
கவிதை பாடும் பறவை நான்
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும்
உயிரின் வேர்கள் குளிர்கிறதே
எல்லா துளியும் குளிரும் போது
இருத்துளி மட்டும் சுடுகிறதே
நந்தகுமாரா நந்தகுமாரா
மழை நீர் சுடாது தெரியாதா
கன்னம் வடிகின்ற கண்ணீர் துளி தான்
வெந்நீர்த் துளி என அறிவாயா
சுட்ட மழையும் சுடாத மழையும்
ஒன்றாய் கண்டவன் நீ தானே
கண்ணீர் மழையில் தண்ணீர் மழையை
குளிக்க வைத்தவன் நீதானே
படம்: ஆளவந்தான்
இசை: ஷங்கர் - எசான் - லோய்
பாடியவர்: கமல்ஹாசன்
2 Comments:
மைஃபிரண்ட்..
//உயிரின் வேர்வை குளிர்கிறதே//
உயிரின் வேர்வரை குளிர்கிறதே
//மழையின் சுபாவம் தெரியாதா//
மழைநீர் சுடாது தெரியாதா
கடைசி சில வரிகளும் தவறெனப் படுகிறது..
கொஞ்சம் சரிபாருங்களேன்..
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும்
உயிரின் வேர்கள் குளிர்கிறதே
எல்லா துளியும் குளிரும் போது
இருதுளி மட்டும் சுடுகிறதே
நந்தகுமாரா நந்தகுமாரா
மழை நீர் சுடாது தெரியாதா
கன்னம் வடிகினற கண்ணீர் துளி தான்
வெந்நீர்த் துளி என அறிவாயா
சுட்ட மழையும் சுடாத மழையும்
ஒன்றாய்க் கண்டவன் நீதானே
கண்ணீர் மழையில் தண்ணீர் மழையை
குளிக்க வைத்தவன் நீதானே
Post a Comment