ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில்
மின்னல் ஒன்றை பார்த்தேன்
சாலை ஓரத்தில் சேலை கட்டிய
சோலை ஒன்றை பார்த்தேன்
கண்ணுக்குள் நீந்தும் குட்டி குட்டி போவே
நெஞ்சுக்குள் பூக்கும் பட்டு பட்டு பூவே
(கண்ணுக்குள்..)
அலையாடிடும் கடல் பூவே
அடி நெஞ்சில் காதல் வந்து மோதும்
அதிகாலையும் அந்தி மாலையும்
தொடுவானம் வண்ண கோலம் போடும்
(ஜூலை..)
தொட்டு தொட்டு செல்லும் காற்றிலே
என்னை இந்த புது வாசனை
சுத்தி சுத்தி வரும் பூமியில்
சுற்றி சுற்றி வர யோசனை
காலம் அதை நிறுத்தி பிடித்து
ஒரு சிறையில் போட வேண்டும்
கனவு அதை துரத்தி பிடித்து
இரு விழியில் போட வேண்டும்
சிறு குழந்தையை போல மாறுவோம்
என்ன விதிமுறை யாவும் மீறுவோம்
சிற்றின்பம் அதை தேடலாமே தோழா
(ஜூலை..)
என்ன இடம் என்று பார்த்துதான்
மேகம் மழை தூறுமா
எந்த கிளை என்று பார்த்துதான்
பறவைகள் வந்து கூடுமா
ஆசை அது உன்னை
மனதில் வருவதில்லை
ஆணும் ஒரு பெண்ணும் சேர
எந்த தடையும் இங்கு இல்லை
நதி மலையில் பிறக்கும் காரணம்
கடல் மடியில் சென்று சேரவே
சிற்றின்பம் அதை தேடலாமே தோழா
(ஜூலை..)
படம்: முத்திரை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: முஹம்மட் அஸ்லாம், ராஹுல் நம்பியார், தான்வி, பிரியா
Saturday, June 13, 2009
முத்திரை - ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில்
பதிந்தவர் MyFriend @ 5:45 AM
வகை 2009, தான்வி, பிரியா, முஹம்மட் அஸ்லாம், யுவன் ஷங்கர் ராஜா, ராஹுல் நம்பியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment