Monday, June 15, 2009

ஜோதா அக்பர் - முழுமதி அவளது முகமாகும்



முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை.. கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அனிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

படம் : ஜோதா அக்பர்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்

4 Comments:

ஆயில்யன் said...

//அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் //


ம்ம் அந்த பயபுள்ளை கொடுத்து வைச்சது போல! :)))

ஆயில்யன் said...

மொழி மாற்றம் செய்யப்பட்ட படமா இருந்தாலும் பாடல் வரிகள் அசத்தல் :)

Unknown said...

chance less combo ARR + Srinivas + Vairamuthu + Krithick + Aish ....

Unknown said...

மனதை கவரும் கவிதை வரிகள்

Last 25 songs posted in Thenkinnam