Thursday, July 18, 2013

வெளிநாட்டு கிராமப்புரத்தில் - நாடி துடிக்குதடி



வெளிநாட்டு கிராமப்புரத்தில்
விளையாடும் காதல் ஜோடி
அறியாத மனிதர் காட்டும்
ஒரு அரவணைப்பிலே
பகல் வெளிச்சம் நுழைந்திடாத
இந்த வனத்தில் இரவின் சுகத்தை
மகிழ்ந்து களிக்க வா


பழகும் இந்த நாட்கள்
மயில் இறகைப் போல வருட
நதியிலே ஓர் நதியிலே
மிதக்குதே உள்ளம்
நதியில் விழுந்த பூவாய்
மனம் உனது வழியில் செல்ல
கெஞ்சலில் உன் கொஞ்சலில்
பிடிக்குதே செல்லம்
எனக்கு என்று எதுவுமில்லை
எனது உலகிலே
இதயம் திறக்கும் தினமும் தினமும்
உனது நினைவிலே
இந்த நிமிஷம் இனிய நிமிஷம்
இந்த நிமிஷம் இனிய நிமிஷம்
எனக்கு போதுமே



நிலவின் ஒளியை எடுத்து
ஒரு புடவையாக உடுத்து
மயங்குதே உன் அழகிலே
உன் அழகிலே நெஞ்சம்
மெளனமான மயக்கம்
உன் உயிரில் கலந்த நெருக்கம்
நடுங்குதே உடல் நடுங்குதே
உடல் நடுங்குதே கொஞ்சம்
உடலில் கொஞ்சம் உயிரில் கொஞ்சம்
ஒளிந்து கொள்ளவா
உனக்குள் இருக்கும் உலகை ரசித்து
கடந்து செல்லவா
வண்ண வயதும் வளரும் கனவும்
வண்ண வயதும் வளரும் கனவும்
சிறகைத் தேடுதே


படம்: நாடி துடிக்குதடி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஹரிசரண், ஸ்வேதா மோகன்

என் தேவதை பொன்தாரகை - நாடி துடிக்குதடி



என் தேவதை பொன்தாரகை நீதானவள்
என் தூரிகை உள்ளோவியம் நீதானவள்
எங்கோ ஒரு அதிகாலையில்
மணம் வீசிடும் ரோஜா மலர் நீதானவள்
என் பாடலின் உயிரானவள் நீதானவள்


பாதையில் தேங்கும் நீரில் பார்க்கும் நிலவின் முகம்
பார்த்ததும் கிள்ளத் தோன்றும் குழந்தை கன்னம் நிறம்
வானத்தில் தொடுவானத்தில் எழும் செந்நிறம் நீ
ஜாமத்தில் நடுஜாமத்தில் வின்மீன்களும் நீ
ஓடை நாணல்கள் ஆடும் பேதை இல்லாதபோதும்
காலை பூபாளம் பாடும் காற்றில் மைனாக்கள் கீதம்
நீதானவன் நீதானவன் நீதானவன்


விடிந்ததும் வாசல் மீது போடும் கோலங்களே
உறங்கிடும் நேரம் காதில் கேட்கும் ராகங்களே
சாலையில் நடைபாதையில் விழும் தூறல்கள் நீ
பேசுதே புது தாய்மொழி நதியோசைகள் நீ
தீயே இல்லாமல் தீபம் ஏற்றும் கீழ்வானம் யாரோ
நோயே இல்லாமல் நாளும் வாட்டும் என் காய்ச்சல் யாரோ
நீதானவள் நீதானவள் நீதானவள்


படம்: நாடி துடிக்குதடி
இசை: இளையராஜா
பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: கார்த்திக், அனிதா

Wednesday, July 17, 2013

காதலே இல்லாத தேசம் - நாடி துடிக்குதடி



காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு
காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு
காதலே நீயில்லையென்றால் உலகில் என்ன இருக்கு
காதலே உனை சொல்லத்தானே பூக்கள் பூத்துயிருக்கு

காதலில் துள்ளும் நெஞ்சங்கள்
அது மழலை குழந்தையாகும்
பொம்மை போல அவர் கைகளில்
இந்த பூமி விரும்பி சுழலும்
நூறு நிலவுகள் தோன்றியே
ஒரு நதியில் மிதந்திடும்
உள்ளங்கைகளில் ஏந்தியே
அதை காதல் பருகிடும்
தாயின் கருவறை நிழலைப் போல்
அமைதி தருவது காதலே
இரவு பகலை மறுத்துத்
திரியும் உறவு இனிக்குமே
பறவை சிறகாய் இரண்டு இதயம்
இணைந்து பறக்குமே!

தூரமாய் மிக தூரமாய்
இருந்தாலும் நெருக்கமாகும்
தேடுகின்ற மனச்சோர்விலும்
சுகமாகும் அந்த சோகம்
காதல் என்பது காற்றைப்போல்
அதை நிறுத்த முடியுமா
காதல் என்பது நெருப்பைப்போல்
அதை அணைக்க முடியுமா
காதல் ஜோடிகள் ஜோடிகள் தோற்கலாம்
காதல் தோற்பது இல்லையே
உறவும் பிரிவும் உலகில் இருக்கும்
இதயம் பிரியுமா
மலர்கள் உதிரும் உதிர்ந்து மலருமா
பருவம் மறக்குமா

படம்: நாடி துடிக்குதடி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: இளையராஜா

என் பூநெஞ்சை - நாடி துடிக்குதடி




என் பூநெஞ்சை என் பூநெஞ்சை
என் பூநெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டு வா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில்தான் ஒலி கேட்டேனே
தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தாய் ஆடும்

ஏறாதோர் தேர் ஏறியே நான் போகிறேன்
எங்கோ ஏதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன்
நீரலை போல நீயொரு பார்வை நேற்று பார்த்ததால்
நீர்க்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி என்னை நனைக்குதே
வெறும் நாளெல்லாம் புது நாளாகும்
இது தான் மாயம் என்றே செய்தான் அவன் யாரோ

நேற்றென்னவோ பூ தந்தது ஓர் வாசனை
பூவுக்கெல்லாம் யார் தான் தந்தார் ஆண்வாசனை
வாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய்
காதலின் பாஷை காலடியோசை என்று காட்டினாய்
தனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன்
எனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே


படம்: நாடி துடிக்குதடி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ரீட்டா

Last 25 songs posted in Thenkinnam