Thursday, July 18, 2013

என் தேவதை பொன்தாரகை - நாடி துடிக்குதடி



என் தேவதை பொன்தாரகை நீதானவள்
என் தூரிகை உள்ளோவியம் நீதானவள்
எங்கோ ஒரு அதிகாலையில்
மணம் வீசிடும் ரோஜா மலர் நீதானவள்
என் பாடலின் உயிரானவள் நீதானவள்


பாதையில் தேங்கும் நீரில் பார்க்கும் நிலவின் முகம்
பார்த்ததும் கிள்ளத் தோன்றும் குழந்தை கன்னம் நிறம்
வானத்தில் தொடுவானத்தில் எழும் செந்நிறம் நீ
ஜாமத்தில் நடுஜாமத்தில் வின்மீன்களும் நீ
ஓடை நாணல்கள் ஆடும் பேதை இல்லாதபோதும்
காலை பூபாளம் பாடும் காற்றில் மைனாக்கள் கீதம்
நீதானவன் நீதானவன் நீதானவன்


விடிந்ததும் வாசல் மீது போடும் கோலங்களே
உறங்கிடும் நேரம் காதில் கேட்கும் ராகங்களே
சாலையில் நடைபாதையில் விழும் தூறல்கள் நீ
பேசுதே புது தாய்மொழி நதியோசைகள் நீ
தீயே இல்லாமல் தீபம் ஏற்றும் கீழ்வானம் யாரோ
நோயே இல்லாமல் நாளும் வாட்டும் என் காய்ச்சல் யாரோ
நீதானவள் நீதானவள் நீதானவள்


படம்: நாடி துடிக்குதடி
இசை: இளையராஜா
பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: கார்த்திக், அனிதா

1 Comment:

Yaathoramani.blogspot.com said...

வரிகள் ஒவ்வொன்றும் முத்துக்களே
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

Last 25 songs posted in Thenkinnam