காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு
காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு
காதலே நீயில்லையென்றால் உலகில் என்ன இருக்கு
காதலே உனை சொல்லத்தானே பூக்கள் பூத்துயிருக்கு
காதலில் துள்ளும் நெஞ்சங்கள்
அது மழலை குழந்தையாகும்
பொம்மை போல அவர் கைகளில்
இந்த பூமி விரும்பி சுழலும்
நூறு நிலவுகள் தோன்றியே
ஒரு நதியில் மிதந்திடும்
உள்ளங்கைகளில் ஏந்தியே
அதை காதல் பருகிடும்
தாயின் கருவறை நிழலைப் போல்
அமைதி தருவது காதலே
இரவு பகலை மறுத்துத்
திரியும் உறவு இனிக்குமே
பறவை சிறகாய் இரண்டு இதயம்
இணைந்து பறக்குமே!
தூரமாய் மிக தூரமாய்
இருந்தாலும் நெருக்கமாகும்
தேடுகின்ற மனச்சோர்விலும்
சுகமாகும் அந்த சோகம்
காதல் என்பது காற்றைப்போல்
அதை நிறுத்த முடியுமா
காதல் என்பது நெருப்பைப்போல்
அதை அணைக்க முடியுமா
காதல் ஜோடிகள் ஜோடிகள் தோற்கலாம்
காதல் தோற்பது இல்லையே
உறவும் பிரிவும் உலகில் இருக்கும்
இதயம் பிரியுமா
மலர்கள் உதிரும் உதிர்ந்து மலருமா
பருவம் மறக்குமா
படம்: நாடி துடிக்குதடி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: இளையராஜா
0 Comments:
Post a Comment