Thursday, December 31, 2009

புதுவருட நட்சத்திர மயிலிறகுமனிதன் என்பவன் தெய்வமாகலாம், யர்ர் அந்த நிலவு, பீலிசிவம், சின்னப் பயலே சின்னப்பயலே, மௌனமே பார்வையால், ராமன் எத்தனை ராமனடி, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நாணமோ இன்னும் நாணமோ, அன்பு நடமாடும் கலைக்கூடமே.

தேன் கிண்ணத்தில் புத்தாண்டு பதிவாக எந்த தொகுப்பு போடலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது வானொலியில் அற்புதமான ஒலித்தொகுப்பு ஒன்று ஒலிப்பரப்பினார்கள். விடுவோமா இதோ அந்த திரையிசை ஜாம்பவான்கள் ரசித்த பாடல் தொகுப்பு நிகழ்ச்சி. பாடல்களை எப்படி ரசித்தார்கள் என்பதை இதோ பிரபலங்களின் வாயாலேயே கேட்டு மகிழுங்கள். யார் யார் இந்த ஒலித்தொகுப்பில் வந்துள்ளார்கள் என்று ஒலித்தொகுப்பு கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாதவர்கள் ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள் (படங்கள் பெயர்கள் எழுதினால் ஒலித்தொகுப்பின் ஸ்வாரசியம் போய்விடும் ஆகையால்..மன்னிக்கவும்). தேன் கிண்ண நேயர்கள் அனைவருக்கும் புத்தாண்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

நட்சத்திர மயிலிறகு பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

2009 திரைப்பாடல்கள் ரவுண்ட் அப்

2009-இல் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை ரவுண்ட் அப்பாக இங்கே பார்க்கலாம்..

முதல் படத்துலேயே கலக்கல்ஸ் என்ற பெயர் பெற்ற இசையமைப்பாளர்கள்: போபோ சசி, ஹரிஹரன்-லெஸ்லி, ரஃபி, சுருதி ஹாசன், தமன்


இது வரை ஹிப் ஹாப் பாடல்கள் கேட்கணும்ன்னா ஆல்பங்களைத்தான் தேடிப்போகணும். படங்களில் இப்படிப்பட்ட பாடல்கள் வருவது ரொம்பவே குறைவு. முதல் படத்திலேயே அதை உடைத்து காட்டிவிட்டார். மனசெல்லாம் டச்... ஹிப்ஹிப் ஹூரே பாடல் உங்களுக்காக..


பல வருடங்களுக்கு பிறகு இசையமைப்பாளராக வாய்ப்பு கிடைத்ததும் கப்புன்னு பிடிச்சு ஏறி வந்துட்டாருன்னே சொல்லலாம்.. ஏழு வண்ணத்தில் பாடலிலும், ரீமிக்ஸ் பாடல் அன்புள்ள மான்விழியே பாடலிலும் அந்த உழைப்பு தெரிகிறது.


ஹரிஹரன் - லெஸ்லி ஆல்பங்களில் கலக்கிய அளவுக்கு இல்லைன்னாலும் கேட்கும் படி இருக்கு.. மோதி விளையாடு


பாராட்டக்கூடிய இன்னொரு இசையமைப்பாளர் தமன். மோஸ்கோவின் காவேரி என்ற படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் ஈரம் படம் அவருக்கு பெரிய பேரை சம்பாதித்துக்கொடுத்திருக்கிறது. அவருடைய மழையே மழையே பாடல் ஆகட்டும், பின்னனி இசையாகட்டும்.. எல்லாமே அருமை அருமை..


புலிக்கு பிறந்தது பூனையல்ல என்று நிறூபித்திருந்தாலும் சுருதியிடமிருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம். பாம்பே ஜெயஸ்ரீ, கமல்ஹாசன் குரலில் நிலை வருமா இன்றைய நிலையை அப்பட்டமாக காட்டுக்கிறது


ஷங்கர் - எஹ்சான் - லோய் தமிழில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் தோல்வி கண்டன.. ஆனால் யாவரும் நலம் விதிவிலக்கு.. யாவரும் நலமாய் இருத்தல் நல்லது


பிரேம்ஜி - இந்த படம் தோல்வி என்றால் இனி நீர் இசையமைக்கவே வேண்டாம்யா என்று பலரும் சொன்னார்கள். கண்டிப்பா ஒன்னு ரென்டு பாடல்களையாவது ஹிட் ஆக்கி விடவேண்டும் என முழுமூச்சாய் இறங்கியதன் பலன் முதன் முறை உன்னை பார்த்த போது மற்றும் அது ஒரு காலம்.. முதன் முறை இசை இன்று பலரின் காலர் ரிங்டானாய் மாறியது இவரின் வெற்றி.


வித்யாசாகருக்கு இந்த வரூடம் ஒரே படம்: கண்டேன் காதலை. இசைப்பிரியர்கள் ஹிந்தி பாடல் அளவுக்கு இல்லை என்று வருத்தப்படுகிறார்கள். பரத்துக்கு கண்ணனுக்கும் வாக்குவாதம் கூட வந்தது. பரத்துக்கு ஹிந்தியில் இருந்து ஹிமேஷை கொண்டு வந்து அதே இசையை போட வேண்டும்.. அதற்க்கு ஆட வேண்டும் என ஆசை. அது நிறைவேற வில்லை.. வெண்பஞ்சு பாடலில் உதித் குரலும் அதில் கண்டேன் கண்டேன் காதலை கண்டேன் என கார்த்திக் பாடும் கட்டம் சக்கரைக்கட்டியாக இனிக்கிறது..


இளையராஜாவுக்கு இந்த வருடம் 3: நந்தலாலா, நான் கடவுள், அழகர் மலை. நான் கடவுள் - நந்தலால இரண்டும் இரண்டு எக்ஸ்ட்ரீம். பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன், ஓம் சிவ ஓம் டக்கர்.. மெல்ல ஊர்ந்து ஊர்ந்து தாலாட்டு.. உலகம் இப்போ எங்கோ போகுது ஆஸ்கார் ரஹ்மானுக்கு சமர்ப்பணமா?
தேவிஸ்ரீபிரசாத்துக்கு இந்த வருடம் பெரிய ஹிட் எதுவும் இல்லை. வருட ஆரம்பத்தில் கந்தசாமியும் வருடக்கடைசியில் குட்டியும்தான். Feel my love மெலோடி..


ஜிவி பிரகாஷ்க்கு இந்த வருடம் எக்ஸ்பேரிமெண்டல் வருடமாய் இருந்திருக்கும். கண்டிப்பாக இந்த பாடம் அவர் இசைத்துறையின் ஒரு நல்ல பாடமாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு திசையாக இருக்கு. நவக்கிரகத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு திசையை பார்த்துட்டு இருந்தாலும் நாம் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுப்போம் இல்லையா? அதேப்போல் இந்த படத்தின் பாடல்களும் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் எதையும் தவிர்க்க முடியாததாகவும் இருக்கின்றன. ரொம்ப காலத்துக்கு அப்புறம் படத்தின் ஹீரோயின் படத்திலும் நடித்து பாடியும் இருக்கிறார். ஹேட்ஸ் ஆஃப் ஆன்ரியா. மாலை நேரம் மேலோடியஸ்.. தாய் தின்ற மண்ணே கண்டிப்பாக படம் வந்ததும் ஹிட் ஆகும் பாடல். அங்காடித்தெரு அவள் அப்படி ஒன்றும் அழகில்லை தமிழ் படிக்காதவங்களும் ரசித்து கேட்கும் பாடல்.


ஹாரீஸ்க்கு இந்த வருடம் அமைந்த இரண்டு படங்களும் சூரியாவின் படங்கள்தான்: அயன், ஆதவன். ரெண்டிலும் பெரிய வித்தியாசங்கள் ஒன்றும் இல்லை. விழி மூடி யோசித்தால் கார்த்திக்கு ஒரு மைல் கல். வாராயோ வாராயோ திரும்ப உன்னிகிருஷ்ணன் இசைத்துறையில் இருக்கிறார் என்று ஞாபகப்படுத்தியிருக்கு..


தரனுக்கு ரெண்டு: லாடம், சித்து +2. லாடம் பெரிதாக ஓடவிட்டாலும் சுமார் ஹிட். பாடல்கள் தனித்து நிற்கின்றன. மலேசியாவில் ஒரு வானொலியில் சிறு தொடுதலிலே பாடல் தினமும் கடைசிப்பாடலாக ஒளியேறிக்கொண்டே இருக்கிறது. அதன் இசைக்காகவே! இப்போது வெளிவந்த சித்து +2வில் பூவே பூவே பாடலில் யுவன் பாடிய பாடல் காதல் மழை..


விஜய் அந்தோணிக்கு இவ்வருடம் செம்ம ஜாலியான வருடம். நினைத்தாலே இனிக்கும் சூப்பர், வேட்டைக்காரன் கேட்கும் ரகம்.. அப்படியே ரசிக்க முடியாத பாடல்களாக இருந்தாலும் சன் டீவி திரும்ப திரும்ப போட்டு மக்களுக்கு பிடித்ததாக மாற்றியிருக்கும். ஏனென்றால் ரெண்டுமே சண் டீவி வெளியீடு.. எப்போதுமே சன் டீவி டாப் டென்னில் நம்பர் ஒன் இடத்திலேயே இருக்கின்றன.. நண்பனைப் பார்த்த தேதி திரும்ப திரும்ப கெட்கும் ரகம்; பனாரஸ் பட்டு கட்டி ஆட்டம் போட வைக்கும் ரகம்.


இந்த வருடத்தில் அதிகம் இசையமைத்தவர் ஜூனியர் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா. சர்வம், முத்திரை, சிவா மனசுல சக்தி, வாமனன், பையா; அதே வழக்கமான இசை. ஒரு கல் ஒரு கண்ணாடி கொஞ்சம் வித்தியாசம். அடுத்த வருடம் எதாவது பெட்டரா ட்ரை பண்ணுங்க யுவன்..


இந்த வருடம் என்னுடைய ஓட்டு ஜேம்ஸ் வசந்தனுக்கே! பசங்க, யாதுமாகி, நாணயம் மற்றும் காவலர் குடியிருப்பு.. ஒவ்வொன்றிலும் ஒரு மெலோடி சூப்பர் ஹிட்; ஒரு வெட்கம் வருதே, ஆனதென்ன ஆவதென்ன, நான் போகிறேன் மேலே, உயிரே என் உயிரில் வந்தாய் அனைத்தும் ஒன்ஸ் மோர் ஹிட்.

மொத்தத்தில் இந்த வருட அவுட்புட் அவ்வளவு மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை. 2010-இல் எதிர்ப்பார்ப்புகள் கொஞ்சம் அதிகமே! யுவனின் கோவா, ரஹ்மானின் எந்திரன், விண்ணைத்தாண்டி வருவாயா. இவற்றைத்தவிர்த்து புதுப்புது இசையமைப்பாளர்களின் புது இசையை கேட்க இசைப்பிரியர்களாகிய நாங்கள் ஆவலாய் இருக்கிறோம்.


தேன்கிண்ண ரசிகர்கர்களுக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்...

Wednesday, December 30, 2009

வேட்டைக்காரன் - நான் அடிச்சா தாங்க மாட்டநான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
(நான் அடிச்சா..)

நான் புடிச்சா உடும்பு புடி
நான் சிரிச்சா வாய்ல வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள்பறை நீ எடு
(நான் அடிச்சா..)

ஏ வாழு வாழு வாழ விடு
வாழும் போது வானை எடு
வம்பு பண்ணா வாலை எடு
வணங்கி நின்னா தோள தொடு
(ஏ வாழு..)
(நான் அடிச்சா..)

ஏ மை ராசா
வா நீ க்லோஸா
ஆடு என் கூட வில்லேஜ் சல்ஸா
சல்ஸா சல்ஸா ச ச ச ச
ஜல்ஸா ஜல்ஸா ஜ ஜ ஜ ஜ ஜ

உணவு உடை இருப்பிடம் உழவனுக்குல் கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கு படைக்கணும்
ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்வர்ட்டா மாறணும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தணும்

வாய் மூடி வாழாதே வீண் பேச்சு பேசாதே
காலம் கடந்து போச்சுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வெணும்ன்னா கண்ணை மூடி தூங்காதே
குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து
(நான் அடிச்சா..)

வரட்டி தட்டும் செவுத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு கருத்து போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல

தாய் பேச்சௌ மீராதே தீயோர் சொல் கேட்காதே
ஏதோ நானும் சொல்லிப்புட்டேன் ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையின்னா உன்னை நீயே மாத்திக்கோ
குத்துங்கடா குத்து ஏழூரு கேட்க குத்து
(நான் அடிச்சா..)

படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன்

Tuesday, December 29, 2009

குட்டி - Feel my loveFeel my love

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love
என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே Feel my love
என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ
வெறுத்தோம் பிடித்தோம் அடித்தோம் அணைத்தோம்
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)

நான் தந்த பூவை எல்லாம் வீசும்போது Feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும்போது Feel my love
என் வீடு தெரியும் ஜன்னல் மூடும்போது Feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும்போது Feel my love
சில வார்த்தை திட்டி பேசு அதுகூட கோபமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லைப்போல
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)

கைவிசிறி போலே உன் கை தீண்டும்வரவேண்டாம்
மின்விசிறியாக வாழ்வேன் அழகே Feel my love
பணிரெண்டு மணி முள்ளை போல சேறும் ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே Feel my love
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீந்தான் சொல்லுமா
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உந்தன் அனுமதியே
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்...)

படம்: குட்டி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: கேகே

Monday, December 28, 2009

நிலாவே வா வா நில்லாமல் வா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பதிவர் ராமலக்‌ஷ்மிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. அழகான அவரின் கவிதைகளின் கருத்துக்களைப் போலவே இப்பாடலும் இனிமையானதும் பொருத்தமானதும் கூட. பாடலைத் தேர்வுசெய்த நண்பர் ஆயில்யனுக்கு நன்றிகள்.


அன்பே தெய்வமே கண்டேன் பூமி மேலே
ஒளியேற்றுவோம் பிறர் வாழ்வில் நாமே

நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா -[நிலாவே](3)

மலரே உன் வாசம் அழகே
மழையே உன் சாரல் அழகே
நதியே உன் தேகம் அழகே
கடலே உன் நீலம் அழகே

பனியே உன் காலம் அழகே
பகலே உன் காலை அழகே
இரவே உன் மாலை அழகே
உலகே என் தேசம் அழகே
கவிதை அழகே
கலைகள் அழகே
மழலை அழகே - மறந்தாயே
மனிதா மனிதா
வாழ்க்கை முழுதும்
அழகை அருகில் காண்பாயே
வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே
இது உண்மையேஏஏ

(நிலாவே) -2


முகமே உன் கண்கள் அழகே
விழியே உன் பார்வை அழகே
இதழே உன் பேச்சு அழகே
மொழியே உன் வார்த்தை அழகே

மனமே உன் எண்ணம் அழகே
நினைவே உன் நேர்மை அழகே
உயிரே உன் மூச்சும் அழகே
மனிதா உன் தேகம் அழகே
சிரிப்பும் அழகே
அழுகை அழகே
மனிதா வாழ்க்கை இதுதானே
தண்ணீர் விட்டு
பாலை அருந்தும்
அன்னப்பறவை நீதானே
வாழ்க்கை இன்பமே
வாழ்வோம் என்றுமே
மதி வெல்லுமேஏஏ

நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா - 2


பாடல் இடம்பெற்ற திரைப்படம் :கோகுலத்தில் சீதை
பாடியவர் : சித்ரா
இசை: தேவா

பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்
குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்
ஓசையெல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்
சத்தங்கள் இல்லாத சங்கீதம் மௌனங்கள் சங்கீதம்
சண்டையும் சங்கீதம்
(பூங்குயில்..)

சுருதி சேரும் ராகம் என்றும் கற்கண்டு
பூவில் பாடும் வண்டு என்ன கதி கொண்டு
நீங்கள் பாடும் சந்தம் இன்பம் ஆனந்தம்
மழையின் சந்தம் ஒன்றே என்றும் சுயசந்தம்
நேசமாக நீங்கள் கேட்பதென்ன பாட்டு
மூங்கில் மீது காற்று மோதிய பழம் பாட்டு
(பூங்குயில்..)

எங்கும் கடவுள் தேடும் தெய்வ சங்கீதம்
எதிலும் மனிதன் தேடும் எங்கள் சங்கீதம்
தேவலோகம் கேட்கும் ஜீவ சங்கீதம்
ஏழை குடிசை கேட்கும் எங்கள் சங்கீதம்
காசுமாலை தானே அலையின் சன்மானம்
கண்ணின் துளிகள் தானே கலைகளின் வெகுமானம்
(பூங்குயில்..)

படம்: நம்மவர்
இசை: மகேஷ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

Sunday, December 27, 2009

நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்

நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசைவெல்லம் நதியாக ஓடும் அதில்
இள நெஞ்சம் படகாக ஆடும்
(நான் பாடும்..)

தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம்
தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம்
எங்கே நானென்று தேடட்டும்
உன்னை சிந்தாத முத்தங்கள் சிந்த
எங்கே நானென்று தேடட்டும்
உன்னை சிந்தாத முத்தங்கள் சிந்த
காலம் கொண்டாடும் கவிதை மகள்
கவிதை மகள்
(நான் பாடும்..)

நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருதாலோ தனிமை
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருதாலோ தனிமை
அழகே உன் பின்னால் அன்னம் வரும்
அன்னம் வரும்
(நான் பாடும்..)

படம்: நான் ஏன் பிறந்தேன்
இசை: ஷங்கர் - கணேஷ்
பாடியவர்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: வாலி

Saturday, December 26, 2009

கூட்டத்திலே கோவில் புறாகூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணப் பார்க்கையிலே
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது
(கூட்டத்தில..)

நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
என் பாடல் உன் நெஞ்சில் யாழ் மூட்டுது
என் ஆசை உன்னைத் தாளாட்டுது
பூங்குயிலே பூங்குயிலே உந்தன் பாதையிலே
ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக்கொண்டு
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
வாழுகின்றாய் கோவில் கொண்டு
ஆனந்த மேடைல் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடகமாடிட
எண்ணுது என் மனமே
(கூட்டத்திலே..)

நீதானே நானாடும் பிருந்தாவனம்
நின்றாடும் தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே
கண்ணிப்பெண்ணே நீயும் இல்லையென்றால்
கானமழை வருமோ
தாமரை பூ நான் எடுத்து
நீ நடக்கும் வேளையிலே
தாலாட்டுடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே
என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்
வான் மழை போல் இந்த பாவலன்
நெஞ்சினில் வாழிய வாழியவே
(கூட்டத்திலே..)

படம்: இதய கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Friday, December 25, 2009

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது


நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர..)

சித்திரங்களைப் பாடச்சொல்லலாம்
தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்
புத்தகங்களில் முத்தெடுக்கலாம்
பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்
பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்
பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா
சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம்
சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா
வானம்பாடி வாழ்விலே
வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை
(நட்சத்திர..)

சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்
சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்
சந்தமழை நம்மை நனைக்கும்
பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்
சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்ததாரடி யாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
மேகத்தில் மீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
ஓங்கும் உந்தன் கைகளால்
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர..)

படம்: சூர்யவம்சம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: மனோ, சுனந்தா
வரிகள்: மு. மேத்தா

Thursday, December 24, 2009

கந்தக்கோட்டை - அவள் புருவத்தை சாய்த்து பார்க்கவில்லை

இரு சக்கர வாகனமாக அவளது விழிகள்
விபத்தாகி விழுந்தது ஏனோ எனதிரு விழிகள்

அவள் புருவத்தை சாய்த்து பார்க்கவில்லை
புன்னகையில் ஒரு மாற்றமில்லை
கால் விரலால் நிலம் தோண்டவில்லை
கடந்தப்பின் திரும்பி சிரிக்கவுமில்லை
எப்படி என்னுள் காதல் வந்தது
ஓஹோ எப்படி என்னுள் காதல் வந்தது

ஓஹோ எச்சில் உணவுக்கொடுக்கவில்லை
எனக்காய் இரவில் விழிக்கவில்லை
பார்த்தது ஆடை திருத்தவிலை
பாஷையில் முனைகள் சேர்க்கவுமில்லை
எப்படி என்னுள் காதல் வந்தது
ஓஹோ எப்படி என்னுள் காதல் வந்தது

என்னைப் பார்த்ததும் குழந்தையை தூக்கி முத்தம் கொடுக்கவில்லை இல்லை
என் பெயர் கேட்டதும் கன்னங்கள் இரண்டும் சிவந்து போகவில்லை இல்லை
என் தெருவில் அவள் அடிக்கடி தினுசாய் திரிந்துப் பார்ப்பதில்லை
ஓ என்னிடம் எதுவும் பிடித்ததுபோல புகழ்ந்து உரைத்ததில்லை
ஆனாலும் ஆனாலும் ஆனாலும்
எப்படி என்னுள் காதல் வந்தது
அதை என்னிடமே தான் கேட்க தோணுது

என்னிடம் உள்ள கெட்ட பழக்கத்தை தட்டி கேட்டதில்லை இல்லை
சாப்பிடும்போது அவள் நினைத்து நான் தும்மல் போட்டதிலை
அவள் கனவில் நானும் வந்துப் போனதாய் எந்தச் சுவடுமில்லை
ஒரு நாள் கூட நள்ளிரவில் குறுஞ்செய்தி வந்ததில்லை
ஆனாலும் ஆனாலும் ஆனாலும்
எப்படி என்னுள் காதல் வந்தது
அதை என்னிடமே தான் கேட்க தோணுது
(அவள்..)

படம்: கந்தக்கோட்டை
இசை: தீனா
பாடியவர்: நகுலன்

Wednesday, December 23, 2009

கந்த கோட்டை - உன்னை காதலி என்று சொல்லவா

உன்னை காதலி என்று சொல்லவா
நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே என் காதல் நெடுஞ்சாலை
உன் மூச்சுக்காற்றெல்லாம் அதில் தென்றல் தொழிசாலை
இதுவரைச் சொன்னது கவிதையல்ல
இதற்கு மேல் சொல்ல நான் கவிஞன் அல்ல
(உன்னை காதலி..)

அன்பே உந்தன் பார்வை ஏதோச் சொல்ல
கட்டி அணைத்தால் என்ன
எந்தன் பிரிவுக்கு பதில் சொல்ல
பெண்ணே நீயும் ஒரு கனவல்ல
ஒரு போராட்டம் தான் எந்தன் நெஞ்சுக்குள்ளே
நானும் சொல்ல
அன்னாந்து பார்க்கும் போது
ஆகாயம் நீல நிறம்
மண் மீது பார்க்கும் போது
என் வாசல் கோலம் நீதான்
விரல் நகத்தை கண்டால் கூட
முன் நின்று இரசிப்பேனே
உந்தன் நெஞ்சை கண்டால்
சொர்க்கம் என்றேப் போவேன் நானே
(உன்னை..)

சில்லென்று நீர்ப்போல நானிருந்தேன்
என்னை நீ தொட்டதால்
எந்தன் வெள்ளை தேகம் வெண்ணீராச்சு
கண்ணாடி சிற்பம் போல உன்னைக் கண்டேனே
இவள் முன்னாடி நான் இன்று
என்னை நானே காதல் கொண்டேன்
தீமூட்டும் ஆசையாலே தினந்தோறும் நின்றுப்போனேன்
தாய் வீட்டை நான் மறந்து உன்னோடு ஓடிவந்தேன்
ஆகாயம் பூமியெல்லாம் ஆண்டாண்டு காலமடி
ஆனாலும் என் காதல் அதைத்தாண்டி வாழுமடி
(உன்னை..)

படம்: கந்த கோட்டை
இசை: தீனா
இசை: நரேஷ் ஐயர், சாதனா சர்கம்

Tuesday, December 22, 2009

விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி

,
1.இன்னிக்கு காலையில எழுந்திருச்சு >> 2.எங்கே தேடுவேன் பணத்தை >>
3.நாலு கால் குதிரை >> 4.யானை பிடித்து பானைக்குள் >> 5.ஏழுகடல் தாண்டி போவோம் >>
6.ஆசைக்கொண்டு பேசி பேசி >> 7.கண்ணே கண்ணே உன்னால் >> 8.காலம் மாறிப்போச்சே >> 9.ஐயோ... >> 10.விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி >> 11.ஒன்னுல இருந்து இருபது வரைக்கும் >> 12.சிரிப்பு..ஹெ..ஹெ..ஹெ

Clik here for Download

திரையிசை உலகில் பெருமை சேர்க்கும் ஜாம்பவான்கள் பலபேர் தங்கல் திறமையினால் கொடி கட்டி பறந்திருக்கிறார்கால் அவர்களைப் பற்றி சிறிதேனும் நாம் தெரிந்து வைத்துகொள்வதில் தேன்கிண்ண நேயர்களுக்கு மேலும் பெருமை. அதன் அடிபபடியில் திரையுலக நகைச்சுவை சிந்தனையாளர் கலைவானர் என்.எஸ்.கிருஷ்னன் அவர்கள் பல கருத்துக்களை தன் நடிப்பாலும் பாட்டாலும் வழங்கியிருக்கிறார். அவரைப் பற்றிய் சிறிய அறிய தகவல்களுடன் பாடல் தொகுப்பு தான் இந்த ஒலித்தொகுப்பு இந்த ஒலித்தொகுப்பை மிகவும் திறம்பட தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.சாரதா ராமனாதன்
அவர்கள்.திருமதி. சாரதா ராமனாதன் அவர்களின் தெள்ளத்தெளிவான உச்சரிப்புடன் தனக்கே உரிய சுந்தர குரலில் பேசி நமக்காக வழங்கியிருக்கிறார். அவருக்கு நம் தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வோம். மேலும் பாடல் பல்லவிகளை பாருங்கள் நாம் பிறந்ததற்க்கு முன் வெளிவந்த பாடல்கள் தான் நானே பல பாடல்களை இப்போது தான் கேட்கிறேன். பழைய பாடல் விரும்பிகளுக்கும் மட்டுமல்லாது இசையை ரசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்த ஒலித்தொகுப்பு நிச்சயம் பொறுமை சோதிக்காது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். சில பாடல்கள் ஒலிப்பரப்பில் சில தடங்கள் இருந்ததால் கோப்புகள் தரம் சற்று குறைவாக இருக்கும் தயவு செய்து பொருத்து கொள்ளுங்கள்.எதுவாக இருந்தாலும் உங்கள் மேலான கருத்துக்க்களை பின்னூட்டமாக தெரிவியுங்கள் ஒலித்தொகுப்பை உருவாக்கிய அறிவிப்பாளர் மனம் மகிழ்வார்.

Get this widget | Track details | eSnips Social DNA

திரு திரு துரு துரு - டாக்டர் மாப்பிள்ளை ஓக்கேயா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

டாக்டர் மாப்பிள்ளை ஓக்கேயா
மெண்டல் உனக்கு ட்ரீட்மெண்ட் கொடுப்பான்
லாயர் ஹஸ்பண்ட் ஓக்கேயா
டைவர்ஸ் உனக்கு ஈசியா கொடுப்பான்
க்ரிக்கெட் ஸ்டார் உனக்கு ஓக்கேயா
கரண்டி எறிஞ்சா கேட்சு பிடிப்பான்
மூவி ஸ்டார் உனக்கு ஓக்கேயா
ஆக்‌ஷன் சொன்னால் கட்டிப்பிடிப்பான்

ஓக்கே ஓக்கே ஓக்கேயா
யார் யார் ஓக்கே யார்தான் ஓக்கே?

டோம் அண்ட் ஜெர்ரி டிஷ்யூம் போல
இம்சை எல்லாம் தாங்கும் சுண்டெலி யாரு
எளிஜிபல் மாப்பிள்ளை எவனும் இல்லை
கல்யாண ப்ரோக்கர் ஓடுறான் பாரு
ஹஸ்பண்ட் ஜாப்புக்கு ஆள் தேடி
யாருடா அந்த ஏமாளி
இவ கேட்கும் கோமாளி
கண்டிப்பாக இருந்தா கல்யாணமே நடக்காது
உன் கண்டிஷனுக்கு ஏத்த ரோபோ கிடையாது

செல்லுல உன் நம்பர் கண்டதும்
உடனே எடுத்து பேசணுமா
நம்பரு பிஸின்னு வாய்ஸ் வந்தா
அதுக்கொரு ஃபைக்ட் நடக்குமா
உன்னிடம் சிக்குற ஆளவே
சுனாமியில் மாட்டும் போட்டவே
நீ ஒரு வைரஸ் கம்ப்யூட்டர்
உன்னக்கெவன் தருவான் லவ் லெட்டர்
ராமரு வில்லு வளைச்சா
ஐ கியு ட்ஸ்டில் ஜெயிச்சா
மூன்ல காலை மிதிச்சா
அவந்தான் உன் ரேஞ்சா?
(ஓக்கே..)

சிக்னலில் பெண்களும் நிற்கையில்
டக்குனு கண்ணை மூடணுமா?
ட்ராஃபிக் நிறைஞ்ச ரோடில்தான்
கண்ணாமூச்சி ஆடணுமா
ஒவ்வ்ரு ஞாயிறும் வந்ததும்
அவந்தான் குக்கிங் செய்யணுமா
உன்னுடன் ஒன்னா வாழணும்ன்னா
கேட்டரிங் கோர்ஸ் சேறணுமா
பெண்ணே நீ ஒரு முதலை
திண்ண கேட்குற தவளை
மட்டன் ஸ்டாலுக்கு விரும்பி
அதுதான் வருமாடி
(டாக்டர்..)

படம்: திரு திரு துரு துரு
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்” ரஞ்சித், நவீன்

Monday, December 21, 2009

திரு திரு துரு துரு - அதிரி புதிரி ஆரம்பம்அதிரி புதிரி ஆரம்பம்
தினமும் நடக்கும் யுத்தம் யுத்தம்
குடுமி பிடியும் ஆரம்பம்
அமலி துமலி சத்தம் சத்தம்
கேரக்டர்தான் மாறுமோ நோ வே
கேரர் குணம் ஆகுமோ
நீ உடைகள் அணிந்த கூவம்தான்
பேச்சில் இல்லை சுத்தம் பத்தம் டூ மச்
(அதிரி..)

நம்ம பார்வைக்கே தெரியாத பக்டேரியா
அதை தேடி கண்டுபிடிச்சு க்ளீன் பண்றா
எல்லா திங்ஸையும் தினம் தொடைச்சு சைஸ் வாரியா
அதுக்கு டேய்லி ஆயுத பூஜை கொண்டாடுறா
பாத்ரூம் போறதுக்கு கூட டைம்டேபல்
ஷெடுல் போட்டு அதை ஃபோல்லோ பண்ணுறா
இவ கனவுல கூட ஏதோ கல்குலேட் பண்ணுறா டூ மச்
ஷகிரா ஆல்பம் கேட்கையில் கஜலு பஜனை போடுறா
டூ மச் டூ மச் டூ மச்

குறட்டை மொழியில் பூகம்பம்
விடிய விடிய தூக்கம் சோ வாட்
செவிகள் கிழிய ஹிப்ஹோப்பும்
ட்ரம்ஸும் மலரும் சத்தம் டாட்ஸ் ரைக்ட்
ஷேவ் பண்னவே சோம்பலோ ஹேய் ஹேய்
தாடியை பார்க்கவோ
காட்டுவாசி போல தோற்றம்
ஐயோ அக்கம் பக்கம் பாவம்
(அதிரி..)

தினம் ஏர்லி மார்னிங் ஃபைவ் அ க்லாக்
சுப்ரபாதம் ஃபுல் வாலுமில் ப்லே பண்ணுறா
ஹாட்டல் காரன் இட்லியில் மனுஃபேக்சுரிங் டேட் எங்கேங்குறா
ரோட்டுல யாராச்சும் குப்பை போட்டா
இவ பார்த்துட்டா சண்டைக்கு போறா
இவ கூட வாழ்வது என்னால முடியாது
முடியவே முடியாது ஐயோ நோ நோ

படம்: திரு திரு துரு துரு
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: ராஹுல் நம்பியார், ஜனனி

Sunday, December 20, 2009

திரு திரு துரு துரு - திரு திரு விழியேஅமுலுமுலும்மா அபுஜ்ஜிபுஜ்ஜிபு ஆரிராரோ ராரோ
அமுலுமுலும்மா அபுஜ்ஜிபுஜ்ஜிபு ஆரிராரோ ராரோ

திரு திரு விழியே தினமணியே ஆரிராரோ
சரசர அலையே சரவெடியே ஆராரிரோ
மார்க்கெட்டு ஷேரு டவுன் ஆகிப்போனதே
க்ரிக்கெட்டு மேட்சு ட்ரா ஆகிப்போனதே

அமுலுமுலும்மா அபுஜ்ஜிபுஜ்ஜிபு ஆரிராரோ ராரோ
அமுலுமுலும்மா அபுஜ்ஜிபுஜ்ஜிபு ஆரிராரோ ராரோ

கேலண்டர் பாரு மண்டேயும் வந்ததே
ரோட்டுல பாரு ஐஸ் வண்டி செல்லுதே
பூப்போன்ற சிரிப்பில் உன் குறும்பில்
உன் முறைப்பில் என்னை சீண்டுவதேனோ
நீ பேசும் மழலை மொழி கேட்டு
என் காதில் தேனும் பாயுவதேனோ
தோளிலே என் தோளிலே
நீ சாய்ந்துக்கொள் இனி யோகம்தான்
நீரிலே தண்ணீரிலே
நீ ஆடினால் ஜலதோஷம் தான்

சிலு சிலு சிலையே சிறு மழையே ஆரிராரோ
குளுகுளு குளிரே கொடிமலரே ஆராரிரோ
கண்ணான கண்ணே உன் அசைவில் அசந்தேனே
வீராதி வீரன் உன் விரலில் விழுந்தேனே

அமுலுமுலும்மா அபுஜ்ஜிபுஜ்ஜிபு ஆரிராரோ ராரோ

தாலாட்டு பாட நானும் தாயும் இல்லையே
தூங்காமல் நீயும் செய்யாத தொல்லையே
வேறென்ன வேண்டும் சொல் தங்கம்
வான் நிலவை கிள்ளி தந்திடுவேன்
ஆனந்த செல்லம் அழவேண்டாம்
நீ உடைக்க பொம்மை தந்திடுவேன்
யாரடி நீ யாரடி உண்டானதே ஒரு நேசம்தான்
கூரடி நீ கூரடி ஏன் செய்கிறாய் நீ மோசம்தான்

குருகுரு மொழியே குருந்தொகையே ஆரிராரோ
பொறு பொறு கிளியே புது செடியே தாலேலேலோ

படம்: திரு திரு துரு துரு
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: கார்த்திக், ரீத்தா

Saturday, December 19, 2009

காவலர் குடியிருப்பு - கங்கை நதி எங்கேயோகங்கை நதி எங்கேயோ பிறந்து வந்ததடா
தலை காவிரி ஆறு எங்கேயோ பிறந்து வந்ததடா
இரெண்டும் ஒன்றாய் ஆனதடா
நட்பின் கடல் சேர்ந்ததடா
உள்ளம் எங்கும் பொங்குதடா
உன்னால் வாழ்க்கை வந்ததடா
வான் மண்ணும் உள்ளவரை
வாழும் சொந்தம் இது
இரு இதயங்கள் இணையும் தருணம்
(கங்கை..)

என் தோட்டத்தில் பூவென நண்பா வந்தாயே
என் காற்றில் நீங்கிடாத வாசம் வீசுதே
சந்தோஷத்தின் தூறலாய் சங்கீதத்தின் சாரலாய்
அன்பானதோர் பாடலாய் வீடு ஆனதே
நாள்தோறுமே தேவாரம் தெய்வம் வரும் தாழ்வாரம்
நாள்தோறுமே தேவாரம் தெய்வம் வரும் தாழ்வாரம்
ஏழேழு ஜென்மம் தான் எடுத்தாலும் அப்போதும்
உன் நட்பை நான் கேட்பேன் தோழா
(கங்கை..)

ஊர்கோலத்தில் தேர் என் உள்ளம் ஆனதே
உன்னாலே கனவு யாவும் கையில் வந்ததே
கண் தூங்கையில் காவலாய் கண்ணீரினில் காதலாய்
என் பாதையில் தேடலாய் உன்னைக் காண்கிறேன்
உன் தோள்களில் சாய்கிறேன் உற்சாகமாய் வாழ்கிறேன்
உன் தோள்களில் சாய்கிறேன் உற்சாகமாய் வாழ்கிறேன்
ஏழேழு ஜென்மம் தான் எடுத்தாலும் அப்போதும்
உன் நட்பை நான் கேட்பேன் தோழா
(கங்கை..)

படம்: காவலர் குடியிருப்பு
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பெல்லி ராஜ், பத்மநாபன்

Friday, December 18, 2009

காவலர் குடியிருப்பு - அப்பன் போலிசுடா

சொன்னதை கேட்டிட மாட்டோம்
கேட்டத சொல்லிடமாட்டோம்
வீட்டுலத் தங்கிடமாட்டோம்
போட்டதெல்லாம் திண்ணுட மாட்டோம்
(சொன்னதை..)

நாம இரெட்டை வாலு தானடா
நமக்கு கெட்டப்பேரு வாங்கடா
தாமரைக்கோழி தானடா
ஊரல புடிச்ச எடம் பாருடா
(நாம..)

அப்பன் போலிசுடா உள்ள பாலீசுடா
அழகா திருடுவதில் மன்னனடா
அடடா ஆண்டவனோ வெண்ணை எடுத்து வந்தான்
அதனால் எம்பேரும் கண்ணனடா

காலையில் பெட்டிக்கட தம்மு அடிப்போம்
மாலையில் புட்டியில இரம்மு அடிப்போம்
வேல வெட்டியில்ல ரௌண்டு அடிப்போம்
வாலை புல்லட்டுல ஸ்பீடா நாம் போவோம்
(காலையில்..)
(அப்பன்..)

நைட்டு ஷோவுக்கொரு டிக்கெட் எடுப்போம்
ஃபைட்டு சீனு வந்தா பிகிலும் அடிப்போம்
சைட்டு அடிக்கத்தானே சங்கம் அமைப்போம்
லைட்டா லுக்கு விட்டா ஹீரோவா ஆவோம்
(நைட்டு..)

அப்பன் போலிசுடா உள்ள பாலிசுடா
இரெக்கை இல்லாம கால் பறக்கும்
தப்பும் தப்பு இல்ல ரைட்டும் ரைட்டு இல்ல
நம்மல ஒரு நாளு ஊர் மதிக்கும்
(சொன்னதை..)

படம்: காவலர் குடியிருப்பு
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பரணி, பத்மநாதன், பிரசன்னா, ஸ்ரீநிவாசன்

Thursday, December 17, 2009

பூ பூபோல் மனசிருக்கு

இன்று பிறந்தநாள் கொண்டாடும் குசும்பனுக்காக ஒரு பாடலைப் போடலாம் என்று மைப்ரண்ட் ஷெட்யூல் செய்துவைத்த பாடல்களைத் தேடினால் பொருத்தமான பாடல் ஒன்று கிடைத்தது . பிறந்தநாள் வாழ்த்துக்கள் குசும்பன். வாழ்க வளமுடன். - முத்துலெட்சுமி


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பூ பால் தேன் வான்

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

யார் இங்கே வென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள்
பேதங்கள் வேண்டாம் வாதங்கள் வேண்டாம்
புன்னகை சிந்துங்கள்
தர்மங்கள் நியாயங்கள் காத்து நில்லுங்கள்
தங்க முலாமில் பித்தளை உண்டு
தெரிந்து கொள்ளுங்கள்
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
இருக்கும் வரைக்கும் இனிய உலகம் நடத்து

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

ஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது
அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாது
கோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாது
கோழி மிடித்து குஞ்சுகளுக்கு சேதம் வராது
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
புதிய உலகின் கதவை திறந்து கொள்ளுங்கள்

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

படம்: ராஜா சின்ன ரோஜா
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

காவலர் குடியிருப்பு - கோடிக் கோடி ஆசைகள்கோடிக் கோடி ஆசைகள் உன்னைக் காணும் வேளையில்
அழகே அழகே அறிந்தேனே நானும்
தெரியும் எதுவும் உனைப்போலவே
கண்கள் தூங்கப்போவது கனவில் உனைக் காணவா
இரவோ பகலோ எனக்கேதும் இல்லை
பிறந்தேன் உலகில் உனைச் சேரவே

வாழ்விலே கோடி மின்னல் உன்னைக் கண்டப்பின்புதான்
பூசினாய் வண்ணம் என்னில் வானவில்லைப் போல நானே
வாலில்லாத பட்டம் போலவே
நானும் இன்று மாறிப்போனக்கோலம் நீயும் பாரடா
பார்வையில் நான் மழை ஈரமாக்கும் ஆவல்
(கோடிக்கோடி..)

சூரியன் தேவையில்லை காலை நேரம் நீயும் வந்தால்
ஓய்வில்லாத பூமி போலவே
நாரும் உன்னை ஆசை சுற்ற காதல் கூடும் நெஞ்சிலே
ஆசைகள் தூண்டிலே நீயும் நீந்தவே
(கண்கள்..)

படம்: காவலர் குடியிருப்பு
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: ஷரத், பிரியா ஹெமேஷ்

Wednesday, December 16, 2009

காவலர் குடியிருப்பு - தாயே நீ என் வாழ்வில்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தாயே நீ என் வாழ்வில் முதலல்லவா
நீ தானே என் வாழ்வின் முடிவல்லவா
காப்பாற்றி வளர்த்தாயே என்னை
தெரியாமல் தொலைத்தேனே உன்னை
(தாயே..)

எனக்காக தாலாட்டு நீ பாடுவாய்
எனக்காக தீ மீதும் நீ ஓடுவாய்
என் கண்ணில் நீர் வழிந்தால் நீ வாடுவாய்
எப்போதும் எனைத்தானே நீ தேடுவாய்
உனக்காக நான் என்ன செய்தேனம்மா
உன் அன்புக்கடன் என்றும் தீராதம்மா
காப்பாற்றி வளர்த்தாயே என்னை
தெரியாமல் தொலைத்தேனே உன்னை
தாயே தாயே தீயோடு எங்கே சென்றாய்
தீயே தீயே தாயோடு எங்கே சென்றாய்

படம்: காவலர் குடியிருப்பு
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: ஸ்ரீனிவாசன்

Tuesday, December 15, 2009

உன்னைப்போல் ஒருவன் - நிலைவருமாபோர் செய்யப் புது ஆயுதமும்
பாழ்பள்ளத் தினமோர் சரியும்
வேர்வைக்கும் திருநாள் உதடும்
ஏதென்று நிஜம் உலகறியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்

நிலைவருமா நிலைவருமா
நிலைவருமா நிலைவருமா
உடன் வருமா உடன் வருமா
தலைமைகள் வர வர திருந்திடுமா
(நிலைவருமா..)

நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே செய்யும் என உணரும்
நன்றே செய்யும் நிலை வருமா
(நிலைவருமா..)
(நிலைவருமா..)

படம்: உன்னைப்போல் ஒருவன்
இசை: சுருதி ஹாசன்
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, கமல் ஹாசன்

Monday, December 14, 2009

என்னதான் ரகசியமோ இதயத்திலேஎன்னதான் ரகசியமோ இதயத்திலே

இந்த ஒலித்தொகுப்பின் பாடல் தெரிவுகள் பாருங்கள் எல்லாம் அறிதானவை, இனிமையானவை, இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திருமதி.சுதா அவர்களூக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள்.

பதிவிறக்கம் இங்கே

1.வீட்டுக்கு வந்த மச்சான் >> 2.என்னதான் ரகசியமோ இதயத்திலே >> 3.பருவகாலம் ஏட்டினிலே >> 4.நான் போட்டால் தெரியும் >> 5.பொங்கும் கடலோசை >> 6.தேவியின் தரிசனம் >> 7.ராஜாத்தி காத்திருந்தா >> 8.தந்ன்னத்தனியாக நான் வந்த போது
9.பொன்னென்றும் பூவென்றும் >> 10.அடி ஆத்தி யாருக்கு நீ பேத்தி >> 11.தன்னந்தனிமையிலே

Get this widget | Track details | eSnips Social DNA

யாதுமாகி - கூத்தடிச்சிடவா

கூத்தடிச்சிடவா குறும்பு செஞ்சிடவா
ராத்திரி முழுசும் ரகலப்பண்ணிடவா
நேத்த விட்டுட்டுவா நெஜத்தத் தொட்டுடவா
பார்த்தத உடனே படம் புடிச்சிடவா
செல்போன் சிணுங்கிடவே லப்டம் எகுருதுப்பார்
சல்வார் அழைக்கையிலே சந்தோஷம் மொளைக்குதுப்பா
காலைப் பொழுது விடியிறவரை கவலை மறந்துப்பறந்திடவா
(கூத்தடிச்சிடவா..)

சிரிச்சிப் பேசி மயக்கம் நீங்க
எதுக்குக் காதல் பூமியில
சிரிக்க மறந்தா எதுக்கு வாழ்க்கை
வருத்தமாதும் போகையில
கொழந்தைப்போல நெறுங்குவீங்க
நெருங்கி வந்தா மாறுவீங்க
தொடங்கும் போது சைவம் நீங்க
போகப்போக மோசம் நீங்க
முதலில் பேசி மடக்குவீங்க
பிறகு ஏனோ அடக்குவீங்க
கிறுக்க வேல ஒதுங்கிப்போங்க
காதல் உலகம் அமைதிக்கெட்டது
பெண்ணிடம் என்பதை புரிஞ்சுக்கோங்க
(கூத்தடிச்சிடவா..)

கனவு வேணும் தூங்கப்போனா
சும்மா கூச்சல் போடாதீங்க
காலம் பூரா கனவே கண்டா என்ன ஆகும்
வாழ்க்கை தாங்க
இரவுக்கேது பூட்டுச்சாவி கடலுக்கேது வேலி வேலி
புயலைப் போல ஆட்டம் போட்டா
வாழ்க்கையெல்லாம் ஜாலி ஜாலி
திருந்திடாத பிறவி நீங்க
அறுந்தவாலா அலையிறீங்க
வெளிய வேஷம் போடுறீங்க
பெண்ணின் அழகை தவறவிட்டவன்
கண்கள் இருந்தும் குருடந்தானே
(கூத்தடிச்சிடவா..)

படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பிரசாத், ராம்குமார், விஜய் உமா, சரயு

Sunday, December 13, 2009

யாதுமாகி - யாரது யாரோ யாரோ


Get Your Own Hindi Songs Player at Music Plugin

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்

யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உன்னைச்சொன்னது காதல்

நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோ
பாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோ
தூக்கத்தைத் திருடுவதாரோ யாரோ யாரோ
தூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோ

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்

யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உன்னைச்சொன்னது காதல்

நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோ
பாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோ
தூக்கத்தைத் திருடுவதாரோ யாரோ யாரோ
தூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோ

வார்த்தை ஒன்று வெளியேறுதே போராடுதே இது ஏனோ
பார்வை ஒன்று தீராமலே தீ மூட்டுதே இது ஏனோ
நேற்று போலே நானில்லை ஊனுருக்கம் ஏனில்லை
காரணங்கள் வேறில்லை நீதானே
பெண்ணே நீ என்ன செய்தாய்
பார்க்கும் போதே கைது செய்தாயே

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்

யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உன்னைச்சொன்னது காதல்

போதுமென்று சொன்னாலுமே கேட்காதது காதல்
போதுமென்று இப்பொழுதே சொல்லாதடா இந்த காதல்
காதல் வந்த பின்னாலே காலிரண்டும் பின் மேலே
தாவுதடி எதனாலே கனவாலே
ஊடல் கொஞ்சம் தேடல் கொஞ்சம்
ரெண்டும் சேர்ந்து காதல் செய்வாயோ

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்

யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உன்னைச்சொன்னது காதல்

படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பெல்லி ராஜ், மதுஸ்ரீ

Saturday, December 12, 2009

பையா - பூங்காற்றே பூங்காற்றேபூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
(பூங்காற்றே..)

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப் பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடம் இருக்க்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்
(பூங்காற்றே..)

அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்னப் பேரோ நானே அறிந்திடும் மலையன் ஒரு பக்கம்
ஏதேதோ ஊர்த் தாண்டி ஏறாலம் பேர்த்தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற செடுஞ்சாலை விளக்காக
அணைகின்றேன் எறிகின்றேன்
மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்றூ புரிகிறதே
வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைக்கிறதே
(என் நெஞ்சோடு..)
(பூங்காற்றே..)

படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: பென்னி தயால்

Friday, December 11, 2009

அவள் பெயர் தமிழரசி - நீ ஒத்த சொல்லு சொல்லுநீ ஒத்த சொல்லு சொல்லு
அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்
காத்தையும் நெறுப்பையும் கொண்டாந்துத்தாறேன் பரிசா
உன் ஒத்த போதும் அந்த ஆகாயமும் நீரும் நிலமும்
காத்தும் நெறுப்பும் அதைவிட என்ன பெருசா பெருசா
தாயின் முகம் கண்டதில்ல தாலேலோ கேட்டதில்ல
உன் முகம் பார்த்தப்பின்னே நான் வாழ ஆசப்பட்டேன்
தாயாக மாறுகிறேன் தாலாட்டுப்பாடுகிறேன்
தானானே தானனனா தனனா நா நா நா
(நீ ஒத்த..)

வெந்து காஞ்சப்பொட்டலுல வேரும் தீஞ்சு நிற்கையில
பிஞ்சுக்காலில் மழையக் கொண்டு வந்த சாமி நீதானே
அத்து வான காட்டுக்குள்ளென்ன பாறாங்கல்லா கெடக்கையிலே
கோபுரத்து உச்சியிலே என்னை ஏத்துனசாமி நீதானே
ஏ காத்தாழையும் செந்தாயா ஆனதென்ன உன்னாலே
ஓலக்காத்தாடிதான் நெஞ்சிக்குள்ள சுத்துதடி தன்னாலே
பாய்ப்போட்டுத் தூங்கையில வாராயே கனவுக்குள்ள
என்னான்னுக் கேட்கையில நானானே நானா நானா
(நீ ஒத்த..)

நீக்கொடுத்த தண்ணியில தீர்த்தம் வாசம் இருக்கும் புள்ள
உன் வார்த்தை விசிறியைப் போல வைக்கையில எனக்கு வீசுதடி
அம்மை ஊசித்தழும்புக்கூட மாஞ்சுப்போகும் உன் கையில்
அன்புக்கூட்டி நீதான் தந்து மொத்த ஈரம் காயாதே
நீ வெள்ளக்கட்டி வச்சிருக்க தொண்டைக்குழி ஓரத்துல
உன் ஒத்த ஜடை என்னைத்தொட கேட்குளியே சாடையிலே
காதல் ஒரு சூதாட்டந்தான் கூட நின்னா ஞாயமில்லே
ஒன்னாச் சேர்ந்தாத்தான் எம்புள்ள
(நீ ஒத்த..)

படம்: அவள் பெயர் தமிழரசி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: ரஞ்சித், நீதா

Thursday, December 10, 2009

புகைப்படம் - ஒரு குடையில் பயணம்

ஒரு குடையில் பயணம்
புது நட்பின் ஜனனம்
நடைப்பாதை முழுதும்
நம் இளமையின் நடனம்

இரு விழி ஓடும் மெல்ல உரிமைகள் போடும்
இதயங்கள் போடும் இங்கு அழகிய பாலம்
இது இப்போது ஆரம்பம் இனிமேலே ஆனந்தம்
(ஒரு குடையில்..)

காற்றில் கலையும் ஒரு மேகம் போல்
காலம் ஓடிவிடும் நிற்காது
ஆனால் கூட அட அப்போதும்
நட்பின் ஞாபகங்கள் மறக்காது
இன்னொரு தாயி இறைவனும் படைத்தான்
நண்பன் என்றே பேரினை வைப்பான்
உன்னை உனக்கேதான் தினம் காட்டும்
கண்ணாடி நட்பாகும்
(ஒரு குடையில்..)

நாளை வேரிடத்தில் நாம் போய் வசிக்கலாம்
வாழ்க்கை போகும் நிலை போல் நதியிலே
சாலை வைகடல் சந்திக்கும் போது
சட்டென்று அடையாளம் தான் தெரியாது
குறலினில் இருக்கும் உரிமையோடு பழகிய நெறுக்கம்
இனிஷியலோடு உதடும் உதடு பேரினை அழிக்கும்
புகைப்படம் போல இக்காலம் நெஞ்சோடு நிலக்கும்
(ஒரு குடையில்..)

படம்: புகைப்படம்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: வெங்கட் பிரபு, பிரசாந்தி

Wednesday, December 9, 2009

யோகி - ஹேய் யாரோடு யாரோ


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஹேய் யாரோடு யாரோ
இந்த சொந்தம் என்னப் பேரோ
நேற்றுவரை நீயும் நானும் யாரோ யாரோதான்
ஓர் ஆளில்லா வானில் கருமேகங்களின் காதல்
கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்கும்மோ

வஞ்சம் கொண்ட நெஞ்சம்
உருகுது கொஞ்சம்
சருகாவே தொலையுதே தகும்மோ
இது என்ன மாயம் சூரியனில் ஈரம்
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ
நதி வந்து கடல் மீது சேறும்போது
புயல் வந்து மலரோடு மோதும்போதும்
மழை வந்து வேலோடு கூடும்போ
யாரோடு யாரும் இங்கே ஹே ஹே ஹே

இதயங்கள் சேரும் நொடிக்காக யாரும்
கடிகாரம் பார்பப்து இல்லையே
நீரோடு வேரும் வேரோடு பூவும்
தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே
ஓர் உறவும் இல்லாமல்
உணர்வும் சொல்லாமலே புது முகவரி தேடுதோ
வாய் மொழியில் இல்லாமல்
வழியும் சொல்லாமல் பாசக்கலவரம் சேருதோ
ஒரு விண்மீன் நீயே மின்சாரத்தை தேடிவரும்போது
என்ன ஞாயம் கூறு விதிதானே
(வஞ்சம்..)

பறவைக்குக் கால்கள் பகையானால் கூட
சிறகுக்கு ச்ல்லம் இல்லையே
துளையிட்ட மூங்கில் தாங்கிய இரணங்கள்
இசைக்கின்ற போதும் இன்பமே
சிறு விதையும் இல்லாமல் கருவும் கொல்லாமலே
இங்கு ஜனனமும் ஆனதே
ஒரு முடிவும் இல்லாமல் முதலும் இல்லாமல்
காயம் புதிர்களைப் போடுதே
அட அருகம் புல்லின் நுனியில் ஏறி
நெறுப்பும் பனிபோல
எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே

படம்: யோகி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, உஸ்தாட் சுல்தான்கான்

Tuesday, December 8, 2009

நாணயம் - தென்றல் காற்று பூவுக்காகதென்றல் காற்று பூவுக்காக
சிதறும் தூறல் பூமிக்காக
இன்று யாவும் நாளைக்காக
எனது பாடல் யாருக்காக
வந்தோமே வாழ்வில்
ஆனாலும் தேடல் தொடற
நிலாவைப்போல் தேயும் தேதிகள்

கட்டும் ஆடை பேருக்காக
கலைந்துப்போகும் தேவைக்காக
உதட்டுச்சாயம் ஆசைக்காக
உலர்ந்துப்போகும் லீலைக்காக
எல்லாமே மாயம் என்றாகும் வாழ்வில் தினமும்
கனாவைப்போல் தீரும் ஆசைகள்

கூடக் கூடக் கூடாது கூடல்
தேடத்தேடத் தீராது தேடல்
பாடப்பாட ஓயாதுப் பாடல் சுகமே சுகமே
(கூடக்..)

வீசுகின்ற ஓர் வாசம்
பூவுக்கில்லையே சந்தோஷம்
பூசிக்கொள்கிறேன் ஏதேதோ
தேகம் எங்கிலும் உன் வாசம்
கண் ஒன்று காதல் கண் ஒன்றூ
கண்ணிலே போதை உண்டு
இன்பமே யாவும் இன்பம்தான்
பெண் என்றும் துன்பம்தான்

கூடக் கூடக் கூடாது கூடல்
தேடத்தேடத் தீராது தேடல்
பாடப்பாட ஓயாதுப் பாடல் சுகமே சுகமே ஓ..
(கூடக்..)

தொட்டுக்கொள் நாளும் தொட்டுக்கொள்
உன்னிடம் நானே நானே
சொந்தமே யாருமே சொந்தம்தான்
நீ சொர்க்கம் சொர்க்கம்தான்
(தென்றல்..)

கூடக் கூடக் கூடாது கூடல்
தேடத்தேடத் தீராது தேடல்
பாடப்பாட ஓயாதுப் பாடல் சுகமே சுகமே ஓ..
(கூடக்..)

படம்: நாணயம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: சுனிதா சாரதி

Monday, December 7, 2009

மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்1.உள்ளம் இரண்டும் ஒன்றை ஒன்று >> 2.ஹார்ட் டூ ஹார்ட் >> 3.ஒரு கொடியில் இரு மலர்கள் >> 4.உன் கண் உன்னை ஏமாற்றினா >> 5.மனிதன் பொறக்கும் போது பொறந்த குணம் >> 6.நாளை நாளை என்றிருந்தேன் >> 7.வடிவேலன் மனசு வெச்சான் >> 8.மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் >> 9.பொம்பளைக்கு பொம்பளை நான்.

இனிமையான பாடல் ஒலித்தொகுப்பு தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திருமதி.கீதா ரவிச்சந்திரன் அவருக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


Clik here for Download

நாணயம் - சக்சஸ் என் வியர்வையில்சக்சஸ் என் வியர்வையில்
பூத்த புது யுகம் கண்டேன்
இன்வெஸ்ட் என் மூளையே
வெற்றியின் மூலதனம் என்பேன்
அதிபன் தொழிலதிபன்
எனக்கு மூளைதானே
அரசன் என் ஒருவந்தான்
ராஜ்ஜியம் அமைப்பேனே

ந ந ந ந நாணயம் ஆதலிடம் மானிடம்
ந ந ந ந நாணயம் ஆதலிடம் மானிடம்
நாணயம்..

படம்: நாணயம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: ரஞ்சித்

Sunday, December 6, 2009

நாணயம் - படைத்தாய் உன் படைப்பினைபடைத்தாய் உன் படைப்பினை
அழிக்க துணிந்தது என்ன
நகைத்தாய் உன் வளர்ப்பினை
கலங்கி இனி என்ன பண்ண
பிறக்கும் உன் கனவுகள்
தகர்ந்து போனதென்ன
விரட்டும் குற்ற உணர்வுகள்
உறக்க சிரிப்பதென்ன

ந ந ந ந நாணயம் ஆதலிடம் மானிடம்
ந ந ந ந நாணயம் ஆதலிடம் மானிடம்

புழுக்கம் உன் மனதில்
புரண்டு படுக்குது உண்மை
நடுக்கம் உயிர் வரையில்
புரட்டி எடுக்குது உன்னை
தயக்கம் உன் ஆடையில்
சிந்தையில் படித்தது இன்று
அரக்கன் உன் ஆசையில்
புகுந்து தொலைத்தானே

ந ந ந ந நாணயம் ஆதலிடம் மானிடம்
ந ந ந ந நாணயம் ஆதலிடம் மானிடம்
நாணயம்..
நாணயம்..
நாணயம்..
நாணயம்..
ஏ... நாணயம்..

படம்: நாணயம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: ரஞ்சித்

Saturday, December 5, 2009

நாணயம் - தங்கக் கதவ தெறடாதங்கக் கதவ தெறடா வங்க கடலா சிரிடா
ஹேய் தங்கக் கதவ தெறடா வங்கக் கடலா சிரிடா
டீ சர்ட்டும் ஜீன்ஸ் பேண்டும் நோட்டால தைப்பேன்டா
வைரத்தில் பட்டன்கள் வைப்பேன்டா
சுவிஸ் பேங்கில் அக்கவுண்டு ஜாலிக்கு நோ என்று
தங்க முட்டை போடும் வாத்து வாத்து
(தங்கக்..)
ரோபின் ஹூட் என் ஹீரோ
சக்ஸஸ்தான் என் பேரோ
கத்தி வச்சா பாத்து ஜீரோ ஜீரோ

கா கா காக்கக்கக்க கா கா கா
கா கா காக்கக்கக்க கா கா கா
கா கா காக்கக்கக்க கா கா கா
கா கா காக்கக்கக்க கா கா கா

ஏய் ஓயாம ஒழைச்சேன் தினம் தினம்
எம் பாக்கெட்டில் விழல பணம் பணம்
ஏய் நேராக நடந்தேன் இதுவரை
அட காசுக்கு வளைஞ்சேன் முதல் முறை
எம்பாடு மஜா நீ போடாதே தடா
எம்மேல கரண்சி மச்சம்டா
நோட்டால அடி அதில் தோன்றாது வலி
ரூபாயின் சூறாவளி

கா கா காக்கக்கக்க கா கா கா
கா கா காக்கக்கக்க கா கா கா
கா கா காக்கக்கக்க கா கா கா
கா கா காக்கக்கக்க கா கா கா

பேங்குக்கு நான் தான் பினாமியா
அட நாளைக்கு பணத்தின் சுனாமியா
என் வாழ்க்கை வரம்டா அரேபியா
இனி தித்திக்கும் தினங்கள் ஜிலேபியா
ஏய் கார் வேண்டாம் விடு
ஒரு ஏரோப்ளேன் எடு
உச்சத்தில் இருக்கு என் மூடு
டாஸ்மார்க்க விடு புது ஸ்காட்சாக எடு
மேல் நாட்டு போதைக்கொடு
(தங்கக்..)

கா கா காக்கக்கக்க கா கா கா
கா கா காக்கக்கக்க கா கா கா
கா கா காக்கக்கக்க கா கா கா
கா கா காக்கக்கக்க கா கா கா

படம்: நாணயம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: சிலம்பரசன், தேவிஸ்ரீ பிரசாத்

Friday, December 4, 2009

மருதாணி வெச்ச பொண்ணு இவதான்

படம்:அன்னைவயல்
பாடியவர்கள்:மலேசியா வாசுதேவன், மனோ

Get this widget | Track details | eSnips Social DNA


மருதாணி வெச்ச பொண்ணு இவதான்

அது அம்மாவோட மருமகதான்

மருதாணி வெச்ச பொண்ணு இவதான்
என் பேத்தி பேரு பஞ்சவர்ணகிளிதான்

உன் ஆத்தாவ போல நல்ல குணம்தான்
உன் அண்ணன் காரன் இவ வசம்தான்
இவ போல யாரய்யா

மகராணி எஙக் அம்மா மட்டும்தான்
அந்த மகராசி காலடி சொர்க்கம்தான்
என் உலகம் எல்லாமே அவதான்
அவ நேச மகனும் நான் தான்
வேற சாமி ஏனய்யா

மருதாணி வெச்ச பொண்ணு இவதான்

மகராணி எஙக் அம்மா மட்டும்தான்

என்னை நம்பித்தானே பொன்னு கொடுப்பாங்களே

நானும் சேர்ந்து வந்ததாளே உன்ன நம்புவாங்களே

காலை வாலை தூக்கினாலே கன்னுக்குட்டி போடுமா

காலை மாடு இல்லாம கன்னு குட்டி பொறந்திடுமா

கைராசி பார்த்தா நானடா

முகராசிக்காரன் நானய்யா

கதை கேட்டு பார்ப்பாமா

மருதாணி வெச்ச பொண்ணு இவதான்

மகராணி எஙக் அம்மா மட்டும்தான்

குணமான மாமியாரு எங்க அம்மா தானே

இசவான மருமகளூம் என் பேத்தி தானே

பட்டு சேலை எடுத்தது யாரு

நான் தானே தாத்தா.. தாத்தா

பூக்கோலம் தோடது யாரு?? நான் தானே பேரன்

பொன்னு பார்த்தாரு நானய்யா

பொன்னு கேட்டது யாரு நானடா

இப்ப ஓட்டு கேட்போமா

மருதாணி வெச்ச பொண்ணு இவதான்
அவ அம்மாவோட மருமகதான்

மருதாணி வெச்ச பொண்ணு இவதான்
என் பேத்தி பேரு பஞ்சவர்ணகிளிதான்

உன் ஆத்தாவ போல நல்ல குணம்தான்
உன் அண்ணன் காரன் இவ வசம்தான்
இவ போல யாரய்யா

மகராணி எஙக் அம்மா மட்டும்தான்
அந்த மகராசி காலடி சொர்க்கம்தான்

நாணயம் - நான் போகிறேன் மேலேநான் போகிறேன் மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாலியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் போலே

தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
(நான் போகிறேன்..)

கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அட என்னுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
எண்ணத்தைத் தேடும் பார்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
ஹ்ம்ம்ம்ம் நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
உள்ளத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்

அன்றாடம் போகும் பாதையாவும்
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேன்
(நான் போகிறேன்..)

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

படம்: நாணயம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

Thursday, December 3, 2009

பையா - என் காதல் சொல்ல நேரம் இல்லைஎன் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
(என் காதல் ..)

காற்றோடு கை வீசி நீ பேசினால்
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
(என் காதல் ..)

படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தான்வி

Wednesday, December 2, 2009

பையா - அடடா மழைடாதந்தானே தந்தானே

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
(அடடா மழைடா..)

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வச்ச மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே உனக்குள்ள தேடிப் பாரு
மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னைப் போல வேராரும் இல்ல
என்னை விட்டா வேறாரு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்டை கொடுத்தென்னை அனுப்பிவைச்சான்
இந்த கண்ணு போதலையே எதுக்கிவள படைச்சுவைச்சான்
பட்டாம்புச்சி பொண்ணு நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒன்னு என்னை கொன்னு புட்டா கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே ..
(அடடா மழைடா..)
பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால மழை கூட சூடாச்சு
இடியை நீட்டி யாரும் இந்த மழையை தடுக்க வேண்டாம்
மழையை பூட்டி யாரும் என் மனச அடைக்க வேண்டாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு

படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ராஹுல் நம்பியார், சைந்தவி

Tuesday, December 1, 2009

பையா - சுத்துதே சுத்துதே பூமிசுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

ஹே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாயத் தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம்
(சுத்துதே..)

சிரித்து சிரித்து தான் பேசும் போதிலே
வளைகளை நீ விரித்தாய்
சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு
நீ கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அடக்கொட்டக் கொட்ட
விழித்தே துடிக்கிறேன்
(சுத்துதே..)

இதயம் உறுகித்தான் கரைந்துப்போவதைப் பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா கேட்கிறேன்
உன்னை கேட்கிறேன்
இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி எனும் குறைந்துப்போகுமா
இப்படி ஓர் இரவு
அட இங்கு வந்த நினைவும் மறக்குமா
(சுத்துதே..)

படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக், சுனிதா சாரதி

Last 25 songs posted in Thenkinnam