Saturday, December 19, 2009

காவலர் குடியிருப்பு - கங்கை நதி எங்கேயோ



கங்கை நதி எங்கேயோ பிறந்து வந்ததடா
தலை காவிரி ஆறு எங்கேயோ பிறந்து வந்ததடா
இரெண்டும் ஒன்றாய் ஆனதடா
நட்பின் கடல் சேர்ந்ததடா
உள்ளம் எங்கும் பொங்குதடா
உன்னால் வாழ்க்கை வந்ததடா
வான் மண்ணும் உள்ளவரை
வாழும் சொந்தம் இது
இரு இதயங்கள் இணையும் தருணம்
(கங்கை..)

என் தோட்டத்தில் பூவென நண்பா வந்தாயே
என் காற்றில் நீங்கிடாத வாசம் வீசுதே
சந்தோஷத்தின் தூறலாய் சங்கீதத்தின் சாரலாய்
அன்பானதோர் பாடலாய் வீடு ஆனதே
நாள்தோறுமே தேவாரம் தெய்வம் வரும் தாழ்வாரம்
நாள்தோறுமே தேவாரம் தெய்வம் வரும் தாழ்வாரம்
ஏழேழு ஜென்மம் தான் எடுத்தாலும் அப்போதும்
உன் நட்பை நான் கேட்பேன் தோழா
(கங்கை..)

ஊர்கோலத்தில் தேர் என் உள்ளம் ஆனதே
உன்னாலே கனவு யாவும் கையில் வந்ததே
கண் தூங்கையில் காவலாய் கண்ணீரினில் காதலாய்
என் பாதையில் தேடலாய் உன்னைக் காண்கிறேன்
உன் தோள்களில் சாய்கிறேன் உற்சாகமாய் வாழ்கிறேன்
உன் தோள்களில் சாய்கிறேன் உற்சாகமாய் வாழ்கிறேன்
ஏழேழு ஜென்மம் தான் எடுத்தாலும் அப்போதும்
உன் நட்பை நான் கேட்பேன் தோழா
(கங்கை..)

படம்: காவலர் குடியிருப்பு
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பெல்லி ராஜ், பத்மநாபன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam