Thursday, December 31, 2009

2009 திரைப்பாடல்கள் ரவுண்ட் அப்

2009-இல் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை ரவுண்ட் அப்பாக இங்கே பார்க்கலாம்..

முதல் படத்துலேயே கலக்கல்ஸ் என்ற பெயர் பெற்ற இசையமைப்பாளர்கள்: போபோ சசி, ஹரிஹரன்-லெஸ்லி, ரஃபி, சுருதி ஹாசன், தமன்


இது வரை ஹிப் ஹாப் பாடல்கள் கேட்கணும்ன்னா ஆல்பங்களைத்தான் தேடிப்போகணும். படங்களில் இப்படிப்பட்ட பாடல்கள் வருவது ரொம்பவே குறைவு. முதல் படத்திலேயே அதை உடைத்து காட்டிவிட்டார். மனசெல்லாம் டச்... ஹிப்ஹிப் ஹூரே பாடல் உங்களுக்காக..


பல வருடங்களுக்கு பிறகு இசையமைப்பாளராக வாய்ப்பு கிடைத்ததும் கப்புன்னு பிடிச்சு ஏறி வந்துட்டாருன்னே சொல்லலாம்.. ஏழு வண்ணத்தில் பாடலிலும், ரீமிக்ஸ் பாடல் அன்புள்ள மான்விழியே பாடலிலும் அந்த உழைப்பு தெரிகிறது.


ஹரிஹரன் - லெஸ்லி ஆல்பங்களில் கலக்கிய அளவுக்கு இல்லைன்னாலும் கேட்கும் படி இருக்கு.. மோதி விளையாடு


பாராட்டக்கூடிய இன்னொரு இசையமைப்பாளர் தமன். மோஸ்கோவின் காவேரி என்ற படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் ஈரம் படம் அவருக்கு பெரிய பேரை சம்பாதித்துக்கொடுத்திருக்கிறது. அவருடைய மழையே மழையே பாடல் ஆகட்டும், பின்னனி இசையாகட்டும்.. எல்லாமே அருமை அருமை..


புலிக்கு பிறந்தது பூனையல்ல என்று நிறூபித்திருந்தாலும் சுருதியிடமிருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம். பாம்பே ஜெயஸ்ரீ, கமல்ஹாசன் குரலில் நிலை வருமா இன்றைய நிலையை அப்பட்டமாக காட்டுக்கிறது


ஷங்கர் - எஹ்சான் - லோய் தமிழில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் தோல்வி கண்டன.. ஆனால் யாவரும் நலம் விதிவிலக்கு.. யாவரும் நலமாய் இருத்தல் நல்லது


பிரேம்ஜி - இந்த படம் தோல்வி என்றால் இனி நீர் இசையமைக்கவே வேண்டாம்யா என்று பலரும் சொன்னார்கள். கண்டிப்பா ஒன்னு ரென்டு பாடல்களையாவது ஹிட் ஆக்கி விடவேண்டும் என முழுமூச்சாய் இறங்கியதன் பலன் முதன் முறை உன்னை பார்த்த போது மற்றும் அது ஒரு காலம்.. முதன் முறை இசை இன்று பலரின் காலர் ரிங்டானாய் மாறியது இவரின் வெற்றி.


வித்யாசாகருக்கு இந்த வரூடம் ஒரே படம்: கண்டேன் காதலை. இசைப்பிரியர்கள் ஹிந்தி பாடல் அளவுக்கு இல்லை என்று வருத்தப்படுகிறார்கள். பரத்துக்கு கண்ணனுக்கும் வாக்குவாதம் கூட வந்தது. பரத்துக்கு ஹிந்தியில் இருந்து ஹிமேஷை கொண்டு வந்து அதே இசையை போட வேண்டும்.. அதற்க்கு ஆட வேண்டும் என ஆசை. அது நிறைவேற வில்லை.. வெண்பஞ்சு பாடலில் உதித் குரலும் அதில் கண்டேன் கண்டேன் காதலை கண்டேன் என கார்த்திக் பாடும் கட்டம் சக்கரைக்கட்டியாக இனிக்கிறது..


இளையராஜாவுக்கு இந்த வருடம் 3: நந்தலாலா, நான் கடவுள், அழகர் மலை. நான் கடவுள் - நந்தலால இரண்டும் இரண்டு எக்ஸ்ட்ரீம். பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன், ஓம் சிவ ஓம் டக்கர்.. மெல்ல ஊர்ந்து ஊர்ந்து தாலாட்டு.. உலகம் இப்போ எங்கோ போகுது ஆஸ்கார் ரஹ்மானுக்கு சமர்ப்பணமா?




தேவிஸ்ரீபிரசாத்துக்கு இந்த வருடம் பெரிய ஹிட் எதுவும் இல்லை. வருட ஆரம்பத்தில் கந்தசாமியும் வருடக்கடைசியில் குட்டியும்தான். Feel my love மெலோடி..


ஜிவி பிரகாஷ்க்கு இந்த வருடம் எக்ஸ்பேரிமெண்டல் வருடமாய் இருந்திருக்கும். கண்டிப்பாக இந்த பாடம் அவர் இசைத்துறையின் ஒரு நல்ல பாடமாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு திசையாக இருக்கு. நவக்கிரகத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு திசையை பார்த்துட்டு இருந்தாலும் நாம் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுப்போம் இல்லையா? அதேப்போல் இந்த படத்தின் பாடல்களும் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் எதையும் தவிர்க்க முடியாததாகவும் இருக்கின்றன. ரொம்ப காலத்துக்கு அப்புறம் படத்தின் ஹீரோயின் படத்திலும் நடித்து பாடியும் இருக்கிறார். ஹேட்ஸ் ஆஃப் ஆன்ரியா. மாலை நேரம் மேலோடியஸ்.. தாய் தின்ற மண்ணே கண்டிப்பாக படம் வந்ததும் ஹிட் ஆகும் பாடல். அங்காடித்தெரு அவள் அப்படி ஒன்றும் அழகில்லை தமிழ் படிக்காதவங்களும் ரசித்து கேட்கும் பாடல்.


ஹாரீஸ்க்கு இந்த வருடம் அமைந்த இரண்டு படங்களும் சூரியாவின் படங்கள்தான்: அயன், ஆதவன். ரெண்டிலும் பெரிய வித்தியாசங்கள் ஒன்றும் இல்லை. விழி மூடி யோசித்தால் கார்த்திக்கு ஒரு மைல் கல். வாராயோ வாராயோ திரும்ப உன்னிகிருஷ்ணன் இசைத்துறையில் இருக்கிறார் என்று ஞாபகப்படுத்தியிருக்கு..


தரனுக்கு ரெண்டு: லாடம், சித்து +2. லாடம் பெரிதாக ஓடவிட்டாலும் சுமார் ஹிட். பாடல்கள் தனித்து நிற்கின்றன. மலேசியாவில் ஒரு வானொலியில் சிறு தொடுதலிலே பாடல் தினமும் கடைசிப்பாடலாக ஒளியேறிக்கொண்டே இருக்கிறது. அதன் இசைக்காகவே! இப்போது வெளிவந்த சித்து +2வில் பூவே பூவே பாடலில் யுவன் பாடிய பாடல் காதல் மழை..


விஜய் அந்தோணிக்கு இவ்வருடம் செம்ம ஜாலியான வருடம். நினைத்தாலே இனிக்கும் சூப்பர், வேட்டைக்காரன் கேட்கும் ரகம்.. அப்படியே ரசிக்க முடியாத பாடல்களாக இருந்தாலும் சன் டீவி திரும்ப திரும்ப போட்டு மக்களுக்கு பிடித்ததாக மாற்றியிருக்கும். ஏனென்றால் ரெண்டுமே சண் டீவி வெளியீடு.. எப்போதுமே சன் டீவி டாப் டென்னில் நம்பர் ஒன் இடத்திலேயே இருக்கின்றன.. நண்பனைப் பார்த்த தேதி திரும்ப திரும்ப கெட்கும் ரகம்; பனாரஸ் பட்டு கட்டி ஆட்டம் போட வைக்கும் ரகம்.


இந்த வருடத்தில் அதிகம் இசையமைத்தவர் ஜூனியர் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா. சர்வம், முத்திரை, சிவா மனசுல சக்தி, வாமனன், பையா; அதே வழக்கமான இசை. ஒரு கல் ஒரு கண்ணாடி கொஞ்சம் வித்தியாசம். அடுத்த வருடம் எதாவது பெட்டரா ட்ரை பண்ணுங்க யுவன்..


இந்த வருடம் என்னுடைய ஓட்டு ஜேம்ஸ் வசந்தனுக்கே! பசங்க, யாதுமாகி, நாணயம் மற்றும் காவலர் குடியிருப்பு.. ஒவ்வொன்றிலும் ஒரு மெலோடி சூப்பர் ஹிட்; ஒரு வெட்கம் வருதே, ஆனதென்ன ஆவதென்ன, நான் போகிறேன் மேலே, உயிரே என் உயிரில் வந்தாய் அனைத்தும் ஒன்ஸ் மோர் ஹிட்.

மொத்தத்தில் இந்த வருட அவுட்புட் அவ்வளவு மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை. 2010-இல் எதிர்ப்பார்ப்புகள் கொஞ்சம் அதிகமே! யுவனின் கோவா, ரஹ்மானின் எந்திரன், விண்ணைத்தாண்டி வருவாயா. இவற்றைத்தவிர்த்து புதுப்புது இசையமைப்பாளர்களின் புது இசையை கேட்க இசைப்பிரியர்களாகிய நாங்கள் ஆவலாய் இருக்கிறோம்.


தேன்கிண்ண ரசிகர்கர்களுக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்...

2 Comments:

ஆயில்யன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


ரவுண்ட் அப் சூப்பரூ!

Anonymous said...

இன்னும் நிறைய இசையமைப்பாளர்கள் வரவேண்டும் இசையுலகம் செழிப்புடன் இருக்க வேண்டும் 2010 அதற்க்கு வழிவகுக்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Last 25 songs posted in Thenkinnam