Thursday, December 24, 2009

கந்தக்கோட்டை - அவள் புருவத்தை சாய்த்து பார்க்கவில்லை

இரு சக்கர வாகனமாக அவளது விழிகள்
விபத்தாகி விழுந்தது ஏனோ எனதிரு விழிகள்

அவள் புருவத்தை சாய்த்து பார்க்கவில்லை
புன்னகையில் ஒரு மாற்றமில்லை
கால் விரலால் நிலம் தோண்டவில்லை
கடந்தப்பின் திரும்பி சிரிக்கவுமில்லை
எப்படி என்னுள் காதல் வந்தது
ஓஹோ எப்படி என்னுள் காதல் வந்தது

ஓஹோ எச்சில் உணவுக்கொடுக்கவில்லை
எனக்காய் இரவில் விழிக்கவில்லை
பார்த்தது ஆடை திருத்தவிலை
பாஷையில் முனைகள் சேர்க்கவுமில்லை
எப்படி என்னுள் காதல் வந்தது
ஓஹோ எப்படி என்னுள் காதல் வந்தது

என்னைப் பார்த்ததும் குழந்தையை தூக்கி முத்தம் கொடுக்கவில்லை இல்லை
என் பெயர் கேட்டதும் கன்னங்கள் இரண்டும் சிவந்து போகவில்லை இல்லை
என் தெருவில் அவள் அடிக்கடி தினுசாய் திரிந்துப் பார்ப்பதில்லை
ஓ என்னிடம் எதுவும் பிடித்ததுபோல புகழ்ந்து உரைத்ததில்லை
ஆனாலும் ஆனாலும் ஆனாலும்
எப்படி என்னுள் காதல் வந்தது
அதை என்னிடமே தான் கேட்க தோணுது

என்னிடம் உள்ள கெட்ட பழக்கத்தை தட்டி கேட்டதில்லை இல்லை
சாப்பிடும்போது அவள் நினைத்து நான் தும்மல் போட்டதிலை
அவள் கனவில் நானும் வந்துப் போனதாய் எந்தச் சுவடுமில்லை
ஒரு நாள் கூட நள்ளிரவில் குறுஞ்செய்தி வந்ததில்லை
ஆனாலும் ஆனாலும் ஆனாலும்
எப்படி என்னுள் காதல் வந்தது
அதை என்னிடமே தான் கேட்க தோணுது
(அவள்..)

படம்: கந்தக்கோட்டை
இசை: தீனா
பாடியவர்: நகுலன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam