Friday, June 28, 2013

நிமிர்ந்து நில் - சரோஜா
நிமிர்ந்து நில்
துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்ததை நடத்திடு
நினைப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது
கண்களை விழித்திடு
போன வழி மாறி போனாலே வாராது
போ உந்தன் புதுப்பாதையில் போராடிடு
காலம் ஒருநாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்றி கரையேறி முன்னேறு

நேற்றும் இல்லை நாளை இல்லை
இன்று மட்டும் என்றும் உண்டு
மாற்றமெல்லாம் மாற்றமில்லை
மாறவேண்டும் நீயும் இன்று
முட்டி மோதி கால்கள் ஓய்ந்து
தேடித்தேடி கண்கள் சாய்ந்து போவதேனோ
வீரனென்று பிறப்பதில்லை வீரனாக ஆவதுண்டு
கோழையென்று எவனுமில்லை
கோபம் கொண்டால் கோழையில்லை
இங்கு உன் வாழ்வு உன் கையில்
உன் வேகம் உன் நெஞ்சில்
இங்கே உன் ஆண்மைக்கு இப்போதுதான் சோதனை

விழுவதென்றால் அருவி போல
எழுவதென்றால் இமயம் போல
அழுவதென்றால் அன்பு காட்ட
அனைத்துமிங்கே நட்புக்காக
ஓய்ந்துபோனால் சாய்ந்துபோனால்
உந்தன் வாழ்வில் ஏதுமில்லை
ஓய்ந்திடாது மோதிப் பாரு
முயன்று ஏறு
முடிவில் உந்தன் படைகள் வெல்லும்
வாழ்ந்து போவார் கோடி பேர்கள்
வாழ்ந்தவர் யாரு உலகம் சொல்லும்
நீயும் முன்னாலே ஜீரோ
இப்போதுதான் ஹீரோ
நில்லாதே எப்போதும் உன் முன்னே தடைகள் இல்லை


படம்: சரோஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: சங்கர் மகாதேவன்

Wednesday, June 26, 2013

பூபாளம் இசைக்கும்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே
மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட
தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது


பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம்
பாடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்


படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடல்: முத்துலிங்கம்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ், உமா ரமணன்

Tuesday, June 25, 2013

சோனாப்பரியா - மரியான்
ஓ! ஏ! ஓயல! எந்த நாளும் ஓயல
என்னைப் படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ! ஏ! ஓயல! எங்க வலை காயல
நீ சொக்கும்படி சிரிச்சடி சோனாப்பரியா

சோனாப்பரியா சோனாப்பரியா
சோனாப்பரியா நீ தானா வர்றியா

பத்துக்காலு நண்டு பார்த்தது சோனாப்பரியா
அது சுருண்டு சுண்ணாம்பா போயி
ஒத்தக் காலில் நிக்குதடி
முத்துக்குளிக்கும் பீட்டரு சோனாப்பரியா
அவன் காய்ஞ்சி கருவாடா போயி
குவார்ட்டர்ல முங்கிட்டானே
அந்தரியே சுந்தரியே சோனாப்பரியா
மந்திரியே முந்திரியே சோனாப்பரியா
அங்கமெல்லாம் சிந்துறயே சோனாப்பரியா

சோனாப்பரியா சோனாப்பரியா
சோனாப்பரியா நீ தானா வர்றியா

ஓயலே கண்ணுல கப்பலா
ஓயலே நெஞ்சுல விக்கலா
ஓயலே கையில நிக்கலா
ஓயலே நடையில நக்கலா

சிப்பிக்குள்ள முத்து
கப்பலுல மிச்சம்
மிச்சம் வச்ச முத்தம்
மொத்தம் மொத்தம் எனக்கு

சிக்கி சிக்கி
மதி சிக்கிக்கிச்சா
நெஞ்சு விக்கிக்கிச்சா
மச்சான் வச்சா மிச்சம்

ஒத்த மரமா எத்தனை காலம் சோனாப்பரியா
கடலுல போன கட்டு மரமெல்லாம்
கரைதான் ஏறிடுச்சே ஆமா
அத்தை மவனோ மாமன் மவனோ சோனாப்பரியா
இவனைப் போல கடலின் ஆழம் எவனும் கண்டதில்ல தானே
நெஞ்சுக்குள்ள நிக்கறியே சோனாப்பரியா
மீனு முள்ளா சிக்குறியே சோனாப்பரியா
கெஞ்சும்படி வைக்குறியே சோனாப்பரியா


படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வாலி
பாடியவர்கள்: ஹரிசரன், ஜாவத் அலி, நகாஷ் அசிஸ்

நேற்று அவள் இருந்தாள் - மரியான்நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
காற்றெல்லாம் அவள் தேன்குரலாய் இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது

நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே
நேற்று எந்தன் ஏட்டில்
சோகம் என்னும் சொல்லும் இல்லையே இல்லையே
நேற்று எந்தன் கை வளையல்
இசைத்ததெல்லாம் உன் இசையே
வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா

நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நானும் இருந்தேன்
இருந்தாய்! இருந்தோம்!

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது
கரை வந்து அலை அங்கே ஏங்கி நின்றது


படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வாலி
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், சின்மயி

Monday, June 24, 2013

கடல்ராசா - மரியான்
ஆடாத கால்களும் ஆடுமய்யா
எங்கள் காதோரம் கடல்புறா பாடுமய்யா
வங்காள கரையோரம் வாருமய்யா
எங்கள் பாய்மர விளையாட்டைப் பாருமய்யா

கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல்ராசா நான் கடல்ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல்ராசா நான் மரியான் நான்

நெத்திலிக்குழம்பு வாடை
எங்க நீரோடு காத்துல வீசுமைய்யா அட
ஒத்தை மரக்கள்ளும் உப்புக்கருவாடும்
சித்தம் குளிர்ந்திடும் போதை ஐயா
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட
கோபம் கொண்டு வித்தையைக்
காட்டும் கோமாளி நான்

நான் ஒத்தையில பாடுறனே தன்னால
இந்த பாலைவனப் பாறைகளின் முன்னால
வெறும் புத்தி கெட்ட பாவிகளின் நடுவே
புலம்பும் என் உயிரே உயிரே
நான் ஊருவிட்டு ஊரு வந்து தனியாக
இப்ப ஊனமாக சுத்துறனே அடியே
என் கட்டுமரம் உன்னை சேரும் நினைப்புல
தவிச்சேன் பனிமலரே பனிமலரேபடம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: தனுஷ்
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான்

நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே - சித்திரையில் நிலாச்சோறு

நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே
துன்பமான இன்பம் தொடர வேண்டுமே 
திருடனையே பிடிச்சிருக்கு 
புது தினுசா இது இருக்கு 
கூட்டல் கணக்கு புரிஞ்சிருச்சு 
போட்டி போடத் தெரிஞ்சிருச்சு 
ஒன்னும் ஒன்னும் ரெண்டாச்சு 
ரெண்டும் சேர்ந்து ஒன்னாச்சு 

எனது விழியிலே ஒரு புதிய தரிசனம் 
எனது மனதிலே ஒரு மழலை குயில் வனம் 
மனது பறவை சிறகில் ஒளிந்த ரகசியம் 
திறந்த வெளியில் விரிந்து பறக்குதே 
இதய வயலில் விதைத்த குறுவை முளைவிட 
அமுத மழைக்கு கிடந்தது தவிக்குதே 
தூங்கிடாத கண்ணோரம் தேன் தெளிக்கும் சொப்பனங்கள் 
பூநிலாவும் ராத்திரியும் நமக்களிக்கும் அர்ப்பனங்கள் 
அசையும் நிலையும் துடிக்கும் இசையும் 
இதயம் உனக்குள் பரவி துடிக்குதே 


கவிதை மொழியிலே மனம் கதைகள் படித்திடும் 
இடையின் வளைவிலே விரல் எழுதிப் பழகிடும்
அளவு கடந்து அணைகள் உடைந்து வழிவிடும் 
அலைகள் எனக்குள் எனக்குள் மிதக்குதே 
இணைந்து இணைந்து பறந்து திரியும் பறவைகள் 
சிறகைத் திறந்து எனக்குள் விரிக்குதே 
வாங்கிடாத உள்மூச்சு உன்னை வாங்கச் சொல்கிறதே 
மூங்கிலோடு பூங்காற்று நம்மை தீண்டிச் செல்கிறதே 
உலகை மறந்து உனது மடியில் 
புதிய இதயம் பிறந்து சிரிக்குதே 


படம்: சித்திரையில் நிலாச்சோறு
இசை: இளையராஜா
பாடல்: பழனிபாரதி
பாடியவர்கள்: கார்த்திக், ப்ரியதர்ஷினி

காலையிலே மாலை வந்தது - சித்திரையில் நிலாச்சோறு
காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது
இனி காலமெல்லாம் உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான் இனி சரணமென
இந்த வானமும் பூமியும் வாழ்த்து சொல்ல

கண்களை நான் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தேன்
கண் திறந்தேன் என்ன அழகு
எண்ணத்தை நான் எப்படியோ ஓடவிட்டேன்
இன்று அதில் நல்ல தெளிவு
மூங்கில் காடு முழுசா பாடும்
புல்லாங்குழலாய் மாறும் போது
சித்திரம் எழுதும் கண்மணி அழகு
நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு
உனது இருவிழிகளில் கதை எழுது

இன்று முதல் வாழும் வரை நான் உனக்கு
இந்த வரம் வேண்டும் எனக்கு
சிந்தனையில் வந்து வந்து போகும் உனக்கு
சிற்றிடையில் வேலை இருக்கு
எனது உனது மனது நமதாக
விருந்து கலந்து விருப்பம் உனதாக
இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு
என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு


படம்: சித்திரையில் நிலாச்சோறு
இசை: இளையராஜா
பாடல்: புலமைப்பித்தன்
பாடியவர்: சப்தபர்ணா சக்ரவர்த்தி

Tuesday, June 18, 2013

இன்னும் கொஞ்ச நேரம் - மரியான்
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பெண்ணே

இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலயே
இப்போ என்ன விட்டுப் போகாதே என்ன விட்டுப் போகாதே
இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ மழை போல நீ வந்தா கடல் போல நான் இருப்பேன்

இதுவரைக்கும் தனியாக என் மனசை
அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வலையைவிட்டு வலையைவிட்டு வளையவிட்டாயே
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளைப் போல
வந்தா உன் கையில மாட்டிக்குவேன் வளையலைப் போல
உன் கண்ணுக்கேத்த அழகா வரேன் காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்ச காலம் பொறுத்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்புக்காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்னை இழுக்க என்னை இழுக்க
என் மனசு நிறையுமே
இந்த மீன் உடம்பு வாசனை
என்னை நீ தொட்டாதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசு 
தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பெண்ணே

நீ என் கண்ணு போல இருக்கணும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: கபிலன்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஸ்வேதா மேனன்

ஆயிரம் சூரியன் சுட்டாலும் - மரியான்ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வண்ணம் கரைந்தாலும்
வான் வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை

இருவர் வானம் வேறென்றாலும்
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையில் விதி தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை

அஞ்சாதே துஞ்சாதே
இனியென்றும் இல்லை வேதனை
புதிதாய் பிறப்பாய்
வழியெங்கும் உன் முன் பூமழை
எந்நாளும் உன் காதல்
இது வாழும் சத்தியமே
தொலையாதே
எந்த இருளிலும் மறையாதே

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை


படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: குட்டி ரேவதி
பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்

உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி - சித்திரையில் நிலாச்சோறு

உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான்
பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான்
பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு
அந்த புள்ள கொடு செல்லக்கிளியே

ஏ முத்து போல புள்ள ஒன்னு
ஏ பெத்து போடு பெத்து போடு
ஏ ஆசையோட கேட்கறத
அட அள்ளிக் கொடு அள்ளிக் கொடு

முன்னவங்க செஞ்ச தவம் செய்கையில் விளங்கும்
நல்லதெது கெட்டதெது போகப் போகத் தெரியும்
பாட்டன் பூட்டன் பண்ணி வெச்ச வேலையெல்லாம்
கொட்டம் போட்டு அட்டகாசம் தான் நடத்தும்
அப்பன் போல புள்ள வந்தா
அப்பனுக்கும் கூட பல புத்திமதி சொல்லிக்கொடுக்கும்

சொல்லித் தந்த விதியெல்லாம் அவனுக்குப் பிறகும்
அப்படியே புள்ளவழி அற்புதமா தொடரும்
நல்ல விதை கெட்டுப்போய் முளைக்காது
நம்பு கண்ணு வானம் வத்திப் போகாது
செல்வம்  என்றால் பிள்ளைச் செல்வம்
சேர்ந்த செல்வம் எப்போதுமே உன்னைவிட்டு விலகாது


படம்: சித்திரையில் நிலாச்சோறு
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: இளையராஜா

Monday, June 17, 2013

கல்லாலே செஞ்சு வச்ச - சித்திரையில் நிலாச்சோறுகல்லாலே செஞ்சு வச்ச சாமியில்ல நீ
கற்பூரதீபம் காட்டும் தெய்வம் இல்ல நீ
எனக்காக மண்ணில் வந்த
எனக்காக இந்த மண்ணில் வந்த
என் தங்கமே வைரமே செல்லமே

கண்ணுக்குட்டி நீ துள்ளி ஓடுனா
கண்ணுபட்டுடும் சொன்ன சொல்லைக் கேளம்மா
தேரு வந்து நின்னாக்கூட நீ அழகு
மின்னல் வந்து போனாக்கூட நீதான் அழகு
அம்மான்னு உன்னை நானும் கூப்பிடுவேன் - எங்க
அம்மாவை அப்போ அப்போ நினைச்சுக்குவேன்
நீ செய்கூலி சேதாரம் இல்லாத
என் தங்கமே வைரமே செல்லமே

மண்ணில் விழுந்த மழைத்துளி நீ - என்
கண்ணில் இருக்கும் கருவிழி நீ
பொட்டு வச்ச சித்திரமே நீ எனக்குப் போதும்
வட்டநிலா நீதான் என்று உன்னழகைப் பாடும்
யானை மேல நீ அமர்ந்து வலம் வரணும் - நான்
எப்ப எப்ப கேட்டாலும் நீ வரம் தரணும்
நீ செய்கூலி சேதாரம் இல்லாத
என் தங்கமே வைரமே செல்லமே


படம்: சித்திரையில் நிலாச்சோறு
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: ஹரிசரண்

Last 25 songs posted in Thenkinnam