Thursday, July 31, 2008

632 சக்ஸஸ் சக்ஸஸ் லைஃபில் சக்ஸஸ்

தேன்கிண்ணம் குழுவின் தேனீ கப்பியின் பிறந்தநாளுக்கு சிறப்புப்பாடல்.

சக்ஸஸ் சக்ஸஸ்
லைஃபில் சக்ஸஸ் என்றும் நானும் பெறுவேனே
தொடவே தொடவே வானைத்தொடவே
என்றும் நானே பறப்பேனே - (சக்ஸஸ் சக்ஸஸ்)

கனவாய்த்தானே அன்றுவாழ்ந்தேனே
நிஜமாய்த்தானே இன்று பிறந்தேனே
உலகை நானே வென்றிடுவேனே (சக்ஸஸ் சக்ஸஸ்)

உளிகள் தாங்கும் பாறையே
சிலைகள் ஆகும் நண்பனே
வளையும் நதியே
கடலில் சேர்ந்திடுமே ஓஒ

தத்தித்தாவும் கடலலை
கரையைத்தொட்டால் கரைந்திடும்
மீண்டும் ஓரலை மறுபடி மோதிடுமே
வேருக்குத்தெரியாமல்-எந்த
பூவும் கிளையில் பூக்காது

பூமிக்குள் மறையாமல் ஒரு வைரம் இங்கே கிடையாது
பொறுமையினால் பூமி வென்றிடலாம்
போர்க்களத்தில் பூக்கள் பறித்திடலாம்
வியர்வைத்துளிகள் வெற்றிகள் தருமே (சக்ஸஸ் சக்ஸஸ்)


அன்னை தந்தையை வணங்கிடு
குருவும் தெய்வம் என்றிடு
வரலாறெங்கும் உன் பேர் நிலைத்திடுமே
அறிவின் திரியை கொளுத்திடு
அன்பின் தீபம் ஏற்றிடு
ஆகயத்திலும் உன்புகழ் சென்றிடுமே
தலைகீழாய் பிடித்தாலும்-நாம்
நேராய் எறியும் தீயாவோம்
துயரங்கள் வதைத்தாலும்-நாம்
தோல்விக்கு தோல்வி தந்திடுவோம்

பனிக்கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்
உள்ளங்கையில் தண்ணீர் கொண்டு செல்லலாம்
மின்னலைப்பிடித்து
விண்ணில் செல்வோமே (சக்ஸஸ் சக்ஸஸ்)

திரைப்படம்: அந்த நாள் நியாபகம்
பாடலைப்பாடியவர்: கார்த்திக்
இசையமைத்தவர்: பரத்வாஜ்
பாடலைஇயற்றியவர்: நா.முத்துக்குமார்.

Wednesday, July 30, 2008

631. வளையப்பட்டி தவிலே

நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா


வளையப்பட்டி தவிலே தவிலே
ஜுகல்பந்தி வைக்கும் மவளே மவளே
அடி ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்னை மயக்குறியே மயக்குறியே

நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா

(வளையப்பட்டி தவிலே)

உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிரிப்போ சிந்துபைரவி
நீ பார்க்கும்போது பாக்யஸ்ரீ
நீ கொஞ்சும்போது நீலாம்பரி

நான் திருவையாறு கச்சேரி
நீ தாளம் போடு பித்தேறி
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி

(வளையப்பட்டி தவிலே)


நீ பார்க்கும்போதே பத்திக்குதே
சொந்த ஊரு சிவகாசியா
பேசும் போதே ஜில்லுங்குதே
உங்க ஊரு சிரபுஞ்சியா

நீ நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முருக்கேறுதே
ஏண்டி நீயும் மணப்பாறையா

நீ கைகால் முளைச்ச மத்தளமா
உன்னை வாசிக்கப் பின்னால் சுத்தனுமா
நீ ஆர்மோனிய கட்டையமா
என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா

நான் வாலிபம் திருடும் வீணையடா
இங்கே வந்தா ஒளியும் பூணையடா
நான் வயதுக்கு வந்த வயலினடா
என்னை மைனரைப் போல வாசியடா


(வளையப்பட்டி தவிலே)


படம்: அழகிய தமிழ் மகன்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: நரேஷ், மதுமிதா, உஜ்ஜயினி

Tuesday, July 29, 2008

630. இது என்ன மாயம்

இது என்ன மாயம்
இது எதுவரை போகும்
உன்னைப் பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே

இது என்ன மாயம்
இது எதுவரை போகும்
இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே

கனவுகள் வருவதால்
கலவரம் விழியிலே
தினசரி புதுப்புது
அனுபவம் எதிரிலே

உலகமே உன்னால் இன்று புதியதாய்
உணர்கிறேன் உற்சாகத்தை முழுவதாய்

என் வானத்தில் சில மாற்றங்கள்
வெண்மேகத்தில் உன் உருவங்கள்
என் காற்றிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன்

(இது என்ன மாயம்)

நான் நேற்று வரையில்
பூட்டிக்கிடந்த ஜன்னலாய்த் தோன்றினேன்
உன் பார்வை பட்டதும்
ஸ்பரிசம் தொட்டதும்
காட்சிகள் காண்கிறேன்

விழிகளை நீ மூடிவைத்தால்
வெளிச்சங்கள் தெரியாதே
வழிகளை நீ மூடிவைத்தால்
பயணங்கள் கிடையாதே

விரலோடுதான் விரல் சேரவே
தடை ஒன்றுமே இனியில்லையே
உன் வார்த்தைகள் தரும் வேகத்தால்
நான் மீண்டும் மீண்டும் காற்றில் போகிறேன்

(இது என்ன மாயம்)படம்: ஓரம் போ
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்: சங்கர் மகாதேவன், அல்கா யாக்னிக்

629. காதல் யானை வருகிற ரெமோ
காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

ரிங்மாஸ்டரின் சிங்கம் போல்
சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார்
வேர்க்காதே எனக்கு விசிறிகள் கோடி இருக்கு
சங்கு சக்ர வேகம் போல்
பட்டம் விட்டு வரும் ஆட்டம் பார்
பேபி டோல்லி எனக்கு தெய்டிப்பெர் நான் உனக்கு

Eஹீ தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

ஹிரோஷிமா நீதானோ
நாகசாகியும் நீதானோ
உன் மீது தானோ என் காதல் போமோ
ஹுரப்பாவும் நீதானோ மொகஞ்ஞதரோ நீதானோ
ஆய்வாளன் நானோ ஆராயலாமோ காதல்

யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ
தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்

படம்: அந்நியன்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: நாகுல், GV பிரகாஷ், மெல்வின்
வரிகள்: நா. முத்துக்குமார்

628. பல்லேலக்கா

சூரியனோ சந்திரனோ யாரிவனோ
சட்டுன்னு சொல்லு
சேரப் பாண்டிய சூரன் இவனோ
சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு

(சூரியனோ )

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கெட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ


பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா
மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லேலக்கா பல்லேலக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா

காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா?
தாவணிப் பெண்களும் தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா?
நம்ம களத்துமேடு கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு

சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி
படுப்படு படுவென போர்த்திய புல்வெளி
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி
சுடச்சுடச் சுடச்சுட கிடைக்கிற இட்லி
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி
கடகட கடவென கடக்கிற காவிரி
விறுவிறு விறுவென மடிக்கிற வெற்றிலை
முறுமுறு முறுமுறுவென முறுக்கிய மீசைகள்
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்

(சூரியனோ சந்திரனோ)

ஏலேலே கிராமத்துக் குடிசையில கொஞ்ச காலம் தங்கிப் பாருலே
கூரையின் ஒட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிப் பாருலே
கூவும் செல்போனின் நச்சரிப்பை அணைத்து
கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பைக் கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்!

ஆலமரத்துக்கு ஜடைகள் பின்னித்தான் பூக்கள் வைக்கலாமே
ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கிதான் பென்சில் சீவலாமே


( ஏ பல்லேலக்கா )


ஏலேலே அஞ்சறைப் பெட்டியிலே ஆத்தாவோட ருசியிருக்கும்
அம்மியில் அரைச்சு ஆக்கி வெச்ச நாட்டுக்கோழி பட்டைக் கெளப்பும்

ஏலே ஆடு மாடு மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்
மண்ணு எங்கும் வீசும்


பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்
பங்காளி..பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்


( ஏ பல்லேலக்கா )


படம்: சிவாஜி
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரைஹானா, பென்னி

627.இது போர்க்களமா இல்லை தீக்குளமா


இது போர்க்களமா இல்லை தீக்குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே (இது போர்க்களமா)

தீயின் மனமும் நீரின் குணமும்
எடுத்துச் செய்தவள் நீ நீயா

தெரிந்தப் பக்கம் தேவதையாக

தெரியாப் பக்கம் பேய் பேயா

நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்

என்னைத் தின்றாய் பிழையில்லையா

வேலைவெட்டி இல்லாப் பெண்ணே

வீட்டில் உனக்கு உணவில்லையா

இருவிழி உரசிட ரகசியம் பேசிட

இடிமழை மின்னல் ஆரம்பம்

பாதம் கேசம் நாபிக்கமலம்

பற்றிக்கொண்டதும் பேரின்பம்

தகதகவென எரிவது தீயா

சுடச்சுடவெனத் தொடுவது நீயா

தொடுதொடுவெனச் சொல்லடி மாயா

கொடுகொடுவெனக் கொல்லுகின்றாயா


நண்பர் கூட்டம் எதிரே வந்தால்
தனியாய் விலகி நடக்கின்றேன்
நாளை உன்னைக் காண்பேனென்றே

நீண்ட இரவைப் பொறுக்கின்றேன்
இப்படி இப்படி வாழ்க்கை ஓடிட

இன்னும் என்ன செய்வாயோ

செப்படிவித்தை செய்யும் பெண்ணே

சீக்கிரம் என்னைக் கொல்வாயோ

எந்தக் கயிறு உந்தன் நினைவை

இறுக்கிப் பிடித்து கட்டுமடி

என்னை எரித்தால் எலும்புக்கூடும்

உன்பேர் சொல்லி அடங்குமடி

படபடவென படர்வதும் நீயா
விடுவிடுவென உதிர்வதும்
நீயா
தடதடவென அதிரவைப்பாயா
தனிமையிலே சிதறவைப்பாயா


திரைப்படம் : 7/G ரெயின்போ காலனி
இசையமைத்தவர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : ஹரீஷ் ராகவேந்திரா

626. உருகுதே மருகுதே

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா

(உருகுதே மருகுதே )


அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு
ஏழுகடல் தாண்டித்தான் ஏழுமலை தாண்டித்தான்
எங்கருத்த மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டிப் போகிறேன்
சாமி பார்த்து கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்க


(உருகுதே மருகுதே)


ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கச் சொல்லி கேட்கிறேன்
கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னை சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

(உருகுதே மருகுதே)


படம்: வெயில்
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: சங்கர் மகாதேவன், ஷ்ரேயா கோஷல்

***

விரும்பிக் கேட்டவர்: ரிஷான் ஷெரீப்

Monday, July 28, 2008

625. பறவையே எங்கு இருக்கிறாய்
என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லெட்டர்
Still i remember my first letter

பிரபா,

நீ என்னை தேடியிருப்பேன்னு எனக்கு தெரியும்
நானும் அம்மாவும் இங்க மகாராஷ்ட்ராவில தூரத்து மாமா வீட்டுல இருக்கறோம்
நீ வர்றதுக்கோ லெட்டர் எழுதறதுக்கோ ஏத்த சமயம் வர்றப்ப நான் சொல்றேன்
நேரத்துக்கு சாப்பிடு
வாரத்துக்கு மூணு நாளாவது குளி
அந்த சாக்ஸை துவைச்சு போடு
நகம் கடிக்காத
கடவுள வேண்டிக்கோ
-ஆனந்தி


பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே

அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீதானே
பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக


(பறவையே எங்கு இருக்கிறாய்)


உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடுவானம் போலவே
கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்

இந்த புல் பூண்டும் பறவை யாவும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?

முதல்முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே

ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி உடையாமல்
உருண்டோடும் நதியாகிடுவோம்
இதோ இதோ இந்த பயணத்திலே
இதுபோதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்

இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா?
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா?


முதல்முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பேபடம்: கற்றது தமிழ்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: இளையராஜா

624. நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்
நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்
கத்தி கண்ணின் இருபுறம் தெரியும்
நடக்கும் நடையில் வருபவன் புரியும்
ஊரே பார்த்து ஓரமாய் ஒதுங்கும்

இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
வேரோடு சாயும் இந்த காடே தரையாகும்!

எதிராளி பார்க்கிறான்
தெருவோரம் நிற்கிறான்
மார்கெட்டில் முறைக்கிறான்
என்னைப் போட்டுத்தள்ள துடிக்கிறான்

எங்கேயும் வருகிறான்
எமனாகத் தொடர்கிறான்
முகம் மாற்றி அலைகிறான்
என் கண்கள் பார்த்தால் மறைகிறான்

அவன் முந்துவானா? நான் முந்துவேனா?
நாளை ராத்திரி வந்தால் சொல்கிறேன்


உடையும் மேகம் மழையாய்ப் பொழியும்
உதைக்கும் பந்து வேகமாய்ப் போகும்
இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
மண்ணில் உள்ள பெண்கள்
கை கோர்த்து உடல் தின்னும்!


ஒரு கண்ணில் தூங்கிடு
மறு கண்ணைத் திறந்திரு
ஓய்வாகப் படுப்பது
அது கல்லறையில் கிடைப்பது

போகின்ற பாதைகள்
பலபேரும் போனது
புதிதாகப் பிறந்திட
நான் புத்தனில்லை வழிவிடு

இது அழித்தல் வேலை
இந்த உலகின் தேவை
அதை நாங்கள் செய்தால்
ஊர்தான் வணங்குமா?

காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும்
காத்திருக்காதே கல்லடி கிடைக்கும்!

இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
ஒவ்வொரு நாளும் விடியல்
கண் பார்த்தால் அது புதையல்!


படம்: புதுப்பேட்டை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: கமல்ஹாசன்

623. அன்பே என் அன்பே - தாம்தூம்


Anbe En Anbe - DhaamDhoom


அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்
அன்றில் அடைமழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


நீ நீ ஒரு நதியலையானாய்
நான் நான் அதில் விழும் நிலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொடப் பிழைத்திடுவேனோ
மழையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
மனதிலே இருப்பதெல்லாம்
மெளனத்திலே கலக்கும்


(அன்பே என் அன்பே)


நீ நீ ஒரு புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
எது கொடுத்தோம் எது எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைந்தோம்
எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

(அன்பே என் அன்பே)படம்: தாம்தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா

Sunday, July 27, 2008

622. வைகைக் கரை காற்றே நில்லு

Vaigai Karai Kaatre

வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

(வைகைக் கரை)

திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு


மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு


(வைகைக் கரை காற்றே நில்லு)


படம்: உயிருள்ளவரை உஷா
இசை:டி.ராஜேந்தர்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

Saturday, July 26, 2008

621. மருதாணி விழியில் ஏன் - சக்கரக்கட்டி
மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
கங்கை என்று கானலைக் காட்டும்
காதல் கானல் என்று கங்கையைக் காட்டும்
வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்


மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அலையோசை எந்நாளும் ஓயாது
மருதாணி விழியில் ஏன்


அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான்
சுடும் நீரும் சுடும் சோறும்
காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி
உணரவில்லை இன்னொரு பாதி


(மருதாணி விழியில் ஏன்)


அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய்ப்பால் போலே
எந்நாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
ஆகமொத்தம் அவசரக் கோலம்
அவளுக்கிது காட்டிடும் காலம்

(மருதாணி விழியில் ஏன்)படம்: சக்கரக்கட்டி
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வாலி
பாடியவர்: மதுஸ்ரீ

620. காற்றில் எந்தன் கீதம்

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே


எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என் உள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சம் காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்
நெஞ்சின் தாபம் ஏயும் ஏற்றும்

(காற்றில் எந்தன் கீதம்)

நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்

மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம்
யாவும் இங்கே நெஞ்சம் தேடும்


(காற்றில் எந்தன் கீதம்)


படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

**

விரும்பிக் கேட்டவர்: கபீர்

619. காதல் வைபோகமே
காதல் வைபோகமே
காணும் நன்னாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண் பாடுமே

(காதல் வைபோகமே)

கோடை காலத்தில் தென்றல்
குளிரும் பெளர்ணமி திங்கள்
வாடைக் காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்

வானம் தாலாட்டுப் பாட
மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட

பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு


(காதல் வைபோகமே)


எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது தாளம் தாபம்

மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சமபோகம் யோகம்

வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்த்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்

(காதல் வைபோகமே)


படம்: சுவரில்லாத சித்திரங்கள்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி

Friday, July 25, 2008

618. துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்Get Your Own Hindi Songs Player at Music Plugin

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகந்தானா
மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா
என் உயிரைக் கொள்ளை கொண்டாள்
வானிலே பறவை ஆனேனே
ஏனடா பொய்க் கோபம் கொண்டாய்
என் மனம் உடைகின்றது ரெண்டாய்
காவிரி ஆறே நீ கரை தாண்டினாய்
காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்
ஓ ஹோ..
(துள்ளி துள்ளி..)

ஓ ஹோ..
மூக்குத்தியை பார்த்தாலே
மூச்சு பறிப்போகும்
முத்தம் ஒன்று தந்தாலே
எல்லாம் சரி ஆகும்
ஒரு கண்ணில் பார்த்தேனே
கன்னி மனம் தாங்காதே
மேனி தொடும் நொடியெல்லாம்
மின்சாரமாய் தாக்காதே
நீதான் எந்தன் சுவாசம் ஓ..
(துள்ளி துள்ளி..)

கோடை வெயில் கூட
மோசமில்லை பெண்ணே
கொஞ்சும் உந்தன் பார்வை
வாட்டியது என்னை
வெட்கப்பட்டு முகமெல்லாம்
வேர்வைத்துளி வழிந்ததோ
பக்கம் வந்து நின்றேனே
உந்தன் கையால் பூச்சூட
காதல் காற்றே வாழ்க
(துள்ளி துள்ளி..)

படம்: உனக்காக எல்லாம் உனக்காக
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SPB சரண், சுஜாதா

617. உய்யாலோ உய்யாலோ உய்யாலோGet Your Own Hindi Songs Player at Music Plugin

ஆசை ஐத்தானே மீசை வைத்தானே
கொஞ்சும் நேரத்தில் கூச வைத்தானே

உய்யாலோ உய்யாலோ உய்யாலோ
உள் நெஞ்சில் பூவாசம் உன்னாலோ
உய்யாலோ உய்யாலோ உய்யாலோ
உள்ளத்தில் உள்மத்தம் செய்தாளோ

உய்யாலாலோ உய்யாலாலோ நீதான் தேன் ஆறோ
நீ அங்கும் எங்கும் பூத்து நிற்கும் தங்க பூந்தேரோ
உய்யாலாலோ உய்யாலாலோ நீ தான் காட்டாறோ
என் குட்டி குட்டி கண்ணத்தில் முத்தம் தருவாயோ
சுறா மீனு கண்ணு கண்ணு
நிலா தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுலே என்னை கொன்னு தீய மூட்டுறா
(உய்யாலாலோ..)

கொத்துக் கொத்துக்கா உன்னை ஊத்தி தான்
மிச்சம் வைக்காம முழுசா குடிக்கட்டா
திட்டு திட்டாக வெட்கம் பட்டுத்தான்
கூச்சம் பார்க்காமல் கண்ணும் கட்டுட்டா
அடி வாயாடி அடி வாயாடி அடி வாயாடும் தவிலே நீதானா
தொட தொணாத இடமே தேன் தானா
கொடி கொண்டாடும் மரமே நீ தானா
(உய்யாலாலோ..)

நீயும் நானும் தான் ஒன்னா பேசித்தான்
முத்தத் தீர்மானம் போட்டு கொண்டோமா
நானும் நீயும்தான் கன்னம் ஒட்டித்தான்
பூட்டே இல்லாம பூட்டிக் கொண்டோமா
நெஞ்சில் ஒரு வீச ஆசை மறைச்சேனே
கண்ணில் ஒரு கோடி தூக்கம் தொலைச்சேனே
என்னில் ஒரு பாதி தேடி புடித்தேனே
நாச்சீரே..

படம்: தாம் தூம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சுஜாதா, கைலாஷ் கேர்

616. வானம் வாழ்த்த வசந்தங்கள் வாழ்த்த
வானம் வாழ்த்த வசந்தங்கள் வாழ்த்த
மேகம் கூடி மழைச்சால்வை போர்த்த
இசைச்சோலை பூக்கும் நேரமே.....ஹோ....ஓ
தமிழ் வந்து தாயமாடுமே..
ராகத்தின் ஊஞ்சல் நானாடிப் பார்க்கிறேன்
ஒரு கோடி நாட்களை ஒரு நாளில் வாழ்கிறேன்
குயில் தோப்பின் பாடலாகிறேன்..
(வானம் வாழ்த்த...)

நீர்வீழ்ச்சித் தாளிலே வண்ணங்கள் தீட்டுவேன்
தார்சாலைக் கூந்தலில் பூக்கள் சூட்டுவேன்
நீயாக போர்வையாய் பனிமூட்டம் பார்க்கிறேன்
நிலவாக சூரியன் மாறக் கேட்கிறேன்
நான் போடும் மெட்டுக்கு கிளிகள் கவிதை சொல்லும்
சட்டென்று மீனெல்லாம் செதிலைத் தட்டித் துள்ளும்
பூவாசம் சிந்தாமல் காற்றின் கைகள் அள்ளும்
வண்டெல்லாம் கோபத்தில் காவல்நிலையம் செல்லும்
மழைத் தீயில் நானும் வேகிறேன்....ஹோ....ஓ
இசைமூச்சின் ஈரமாகிறேன்..
(வானம் வாழ்த்த...)

கண்ணாடித் தோட்டமாய் பொன்னேரி தோன்றுதே
மின்சார மீன்களாய் ஓடம் நீந்துதே
தாய்நாடு போலவே தேன்கூடு பார்க்கிறேன்
தமிழ்க் காதல் நேரவே பாடித் தீர்க்கிறேன்
நாடெந்தன் தாய்வீடு பாசத்தோடு சொல்வேன்
மரமெல்லாம் என் சொந்தம் என்றே கட்டிக் கொள்வேன்
பேரிக்காய் தோப்புக்குள் முயலை கூட்டிச் செல்வேன்
உன் அத்தான் நானென்றே உறவைச் சொல்லித் தருவேன்
உயிருக்குள் பேதமில்லையே.......ஓ......ஓ
உறவுக்கு ஏது எல்லையே..
(வானம் வாழ்த்த...)

படம்: குபேரன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: சுஜாதா

615. நிறம் பிரித்து பார்த்தேன்Get Your Own Hindi Songs Player at Music Plugin

நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன
பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ
கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ.
(நிறம் பிரித்து..)

எந்த மேகம் எந்த ஊரில் இன்று சேர்ந்து பொழியும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
எந்த காலில் என்ன சிற்பம் யார் வடிக்க கூடும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
காலமே படைத்தது காலமே மறைத்தது
நாளைகள் என்பது நாளைதான் உள்ளது
காலமகள் சுட்டுவிரல் எந்த திசை காட்டும்
அங்குதான் மேகமும் மழை நீர் ஊற்றும்
(நிறம் பிரித்து..)

ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும்
எல்லாமே எல்லாமே நம் கையிலே
வாழ்க்கை என்னும் சாலை ஒன்று எங்கு யாரை சேர்க்கும்
எல்லாமே எல்லாமே யார் கையிலே
வசந்தத்தின் சோலைகள் வழியிலே தோன்றலாம்
காலமும் காதலும் தோழமை ஆகலாம்
முத்துச் சிப்பி மூடிவைக்கும் முத்துக்கள் போல் ஆசை
மூடி வைத்த நெஞ்சுக்குள்ளே அலைக்கடல் ஓசை
(நிறம் பிரித்து..)

படம்: டைம்
இசை: இளையராஜா
பாடியவர்: சுஜாதா

614. ரங்கோலா ஹோலா ஹோலா
ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ
(ரங்கோலா..)

கோமள வள்ளி வள்ளி
கண்களால் கொல்லும் வில்லி
திர்ம்பினால் நிக்க சொல்லி
வச்சு சிடவா மல்லி
காத்தவ ராயா ராயா
மல்லிப்பூ வேணாம் போயா
மாலைய வாங்கித்தாயா
என்னை நீ தோளு மேலே தூக்கிப் போயா
(ரங்கோலா..)

ஓ நிலா நிலா பறந்து வாயேன்
உலகினை மறந்து வாயேன்
அழகினால் நெருங்கி வாயேன்
அலை அலையாய்
தொடாமலே அணைக்குறாயே
தடால் என இழுக்கிறானே
விடாமலே துரத்துறானே
அடாவடியா
நான் ஒரு தல ராவணன் புள்ள
உனை மணந்திட உடைக்கவா வில்ல
குருங்கடல் போல கொதிக்குது ஆசை
குளிக்கலாம் வா மெல்ல
என் இடுப்புல குழுங்குது சாவி
அத வெடக்குன்னு எடுக்கிற பாவி
கைகளை தொட்டு கசமுசா செஞ்சா
கத்திடுவேன் கூவி
(ஓ ரங்கோலா..)

இளமையை வருடுவானே
இதயத்தை திருடுறானே
உயிரினை நெருடுறானே சுகம் சுகமா
ஓ தளிர் என இருக்குறாளே
பளீர் என சிரிக்குறாளே
சுளீர் என முறைக்குறாளே
அழகழகா..
உன் மரக்கட வண்டி மீது
நான் மெனக்கெட்டு ஏறும் போது
கடக்கட என்று தட தட என்று
இழுத்தவன் நீதானே
நான் சடுகுடு ஆடும் போது
நீ தொடுகிற எல்லை கோடு
விடு விடு என்று பட பட என்று
பறந்தவள் நீ தானே
(ஓ ரங்கோலா..)

படம்: கஜினி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சுஜாதா, சங்கர் மகாதேவன்

613. தெரியாம பார்த்துப்புட்டேன்Get Your Own Hindi Songs Player at Music Plugin

தெரியாம பார்த்துப்புட்டேன் ஒன்ன
தெரிஞ்வேதான் மாட்டிக்கிட்டேன்
ஓ..
(தெரியாம..)
என்ன நடக்க போகுதோ
எங்கு முடிய போகுதோ
தொல்லையா ஆச்சுடி
தூக்கமே போச்சுடி
(தெரியாம..)

ஹிட்லர் போல உங்க அண்ணன்
இம்சை பண்ணுரானே என்னை
ரொம்ப பாசம்தான் என் மேலத்தான்
அவன் உயிரே நான் தான் தெரியுமா?
அத சொன்னா உனக்கு புரியுமா?
சொல்லு சொல்லு என் செல்லம் செல்லம்
நீ சொல்லாக்காட்டி நான் டூ கா செல்லம்
கண்ணில் சிறு தூசு பட்டால்
காத்த கூட நிறுத்தி வெப்பான்
காலில் ஒரு முள்ளு தெச்சா காட்ட கொலுத்துவான்
ஹையோ ஹையோ
(தெரியாம..)

காதல் என்பது கோட்டை
அந்த கனவு தெறந்துட்டா வேட்ட
உள்ள போவோமா வெல்லம் கசக்குமா?
நான் இரும்புல செஞ்ச எறும்புடி
இனி விடியிற வரைக்கும் குறும்புடி
வேணாம் வேணாம் என் செல்லம் செல்லம்
அண்ணன் பார்த்தா உன்னை கொல்லும் கொல்லும்
உன் அண்ணை என்ன பிஸ்தா பருப்பா?
காதலுன்னா ஏண்டி வெறூப்பா?
என் மேல தான் ககிய வச்சா
சங்கே அறுப்பேன்டி
(தெரியாம..)

படம்: திருவிளையாடல் ஆரம்பம்
இசை: D இமான்
பாடியவர்கள்: சுஜாதா, ரஞ்சித்

612. தேசிங்கு ராஜாதான் உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரேGet Your Own Hindi Songs Player at Music Plugin

ஹே தேசிங்கு ராஜாதான்
உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே
ஹே தென்னாட்டு சூரியந்தான்
உனக்கு இப்போ மாலையிட வந்தாரே
அடி பச்சரிசி பதினாரே
உன்ன இப்ப பொங்க வைக்க போறாரே
உன் கண்ணுக்குழி ஓரத்தில
முத்தம் இட்டு கப்பல் விட போறாரே
ஓர கண்ணால் உன்ன அள்ள போறான்
ஒத்த பூவா உன்ன கிள்ள போறான்
(தேசிங்கு ராஜாதான்..)

கெஞ்சி கெஞ்சி நானும் பேச
மிஞ்சி மிஞ்சி நீயும் பேச
பேசாத பேச்சு எப்ப பேச
அஞ்சி அஞ்சி நானும் பார்க்க
கெஞ்சி கெஞ்சி நீயும் பார்க்க
பார்க்காத பார்வை ஊரும் பார்க்க
ஹேய் வளையாத தந்தம் இருக்குமா?
உறையாம தையிரும் கிடைக்குமா?
அலையாம மனசு அடங்குமா?
நீ வாம்மா..
உருக்காம தங்கம் உருகுமா?
செதுக்காம சிற்பம் சிரிக்குமா?
கேட்காம பெண்மை கூடுமா?
போ மாமா
கெண்ட மீனை கிண்டல் பண்ணி பார்க்காதே
கொக்கு மூக்கு சும்மா வந்தும் போகாதே
(தேசிங்கு ராஜாதான்..)

தொட்டு தொட்டு கைய தொட்டு
அங்க த்ட்டு இங்கே தொட்டு
பெண்ணாகி போனேன் தூக்கம் கெட்டு
சுட்டு சுட்டு தீய சுட்டு
நெத்தி பொட்டு நெஞ்சில் பட்டு
ஆணாகி போனேன் ஆசைப்பட்டு
குருஞ்சி பூ கதவ சாத்துமா?
வண்டுக்கு வேலி போடுமா?
வேணான்னு சொல்ல முடியுமா?
போ மாமா..
அடியாத்தி ஆசை பாரம்மா
இது என்ன ஆடி மாசமா?
காவேரி கரையில் நீர்க்குமா?
வா சும்மா
கஞ்சி பட்ட காசி பட்டு மிஞ்சாதே
உன் நினைப்பில் என் நினைப்பு தோணாதே
(தேசிங்கு ராஜாதான்..)

படம்: தவசி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம்

611. கும்பகோணம் சந்தையில்
கும்பகோணம் சந்தையில் பார்த்த சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க வந்த பெண்தானா
வந்தவாசி ரோட்டுல நேத்து வந்த ஆள்தானா
கொஞ்சும்போது நெஞ்சில் அசைந்த சொந்த ஆள்தானா
வேட்டியின் வேகத்தை பார்த்து உன் தாவணி வேர்த்தது நேத்து
வெக்காத எட வச்சி காட்டு
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு
(கும்பகோணம்..)

தண்ணி தூக்குற தங்கரரதமே உன்னை தூக்கிட வரலாமா?
தண்ணி தூக்குற தங்கரரதமே உன்னை தூக்கிட வரலாமா?
தண்ணி பானை வச்ச இடத்தை மாமன் பார்வைகள் தொடலாமா?
அடி குலுங்குது இடுப்பு குளிருது நெருப்பு
பக்கம் வந்து தொடலாமா?
அட வேப்பிலை இருக்கு மாப்பிள்ளை உனக்கு மந்திரிச்சு விடலாமா?
நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு
ஒன்ன ஜாடையில் கேட்குறேன் சம்மதம் சொல்லம்மா
(கும்பகோணம்..)

கடலக்காட்டுல கட்டில் இருக்கு கம்பங்கூழ் கொண்டு வருவாயா?
கடலக்காட்டுல கட்டில் இருக்கு கம்பங்கூழ் கொண்டு வருவாயா?
ஏழு தலைமுறை தட்டில் இருக்கு என்ன சீக்கிரம் விடுவாயா?
அடி மெத்த வீடு ஒன்னு நான் கட்டித்தாரேன் உனக்கு
கன்னம் கொஞ்சம் தருவாயா?
அந்த வீட்டுக்கு வாசக்கதவோ ரெண்டு உதட்டையும் சேப்பாயோ
சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிடுச்சு
கன்னி ராசியை கவுக்கணும் நேரத்த சொல்லம்மா
(கும்பகோணம்..)

படம்: சிம்ம ராசி
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: சுஜாதா, அருண்மொழி
வரிகள்: வாசன்

610. ஆலங்கட்டி மழை
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா? ஹச்..
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா? ஹச்..
(ஆலங்கட்டி..)

சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா?
சின்ன சின்ன சண்டை சமாதனமாச்சா? ஹச்
இப்ப பழச மறந்து கதைக்க வந்தாச்சா?
என்ற விசனம் மறந்து காத்தோடு போயாச்சா?

ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும்
ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா

குளம் காட்டும் வெண்ணிலவாய் அழகான நம் குடும்பம்
கல் ஒன்று விழுவதால் கலையலாமா?
கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய்
அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே
சித்தன வாசல் சிற்பங்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ
அன்பென்னும் உளி பட்டால் பாறை சிலை ஆறுமே
பித்து குழலுக்கு தேங்காய் பூவ போல
ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது
சொந்தத்தை தினம் சந்திக்க
அவர் நிழல் கூட ஏங்குது
(ஐயோடா..)

ஆற்றோர நாணல் அது காற்றோடு கை குலுக்க
நட்போடு நாமும் அதை கொஞ்சலாம் நில்
பனையில பழம் பறிச்சு விதையில் தென்ன வளர்க்க
ஆறேனும் ஆசை பட்டால் ஆகுமோ சொல்
ஒருவர் புன்னகை மற்றவர் முகம் அதில் பூக்குமே
உள்ளங்கையின்ற ரேகைகள் பலன் ஒன்றாகுமே
அனைவரும் இங்கு நடந்திடும் போது
ஒரு நிழல் மட்டும் தெரிவதென்ன
கவிதை போல் உள்ள குடும்பத்தில்
நானுமொரு வார்த்தை ஆகலாமோ
(ஆலங்கட்டி..)
(ஐயோடா..)

படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, கமல் ஹாசன்
வரிகள்: கலைகுமார்

609. நெஞ்சோடு கலந்திடு உறவாலே
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வழி போகும் என் அன்பே அன்பே
(நெஞ்சோடு..)

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முக மூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரில் அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா
(நெஞ்சோடு..)

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
(ஒரு பார்வை..)
(நெஞ்சோடு..)

படம்: காதல் கொண்டேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்

விரும்பி கேட்டவர்: ஆயில்யன்

608. சில்லென்ற தீப்பொறி ஒன்றுசில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென
சர சர சரவென பறவுது ந்ஞ்சில் பார்த்தாயா?
இதோ உன் காதலன் என்று
விரு விரு விருவென கல கல கலவென
அடி மன வெளிகளில் ஒரு நொடி நகருது கேட்டாயா?
உன் மெத்தையில் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பன்ணுதே

தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நா நா
(சில்லென்ற..)

கண்ணா உன் காலணியுள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தோய்வதும்
கண்ணா உன் காலுறை உள்ளே என் கைகள் நான் தோய்ப்பதும்
உள்ளூர தேன் பாய்வதும்
முத்து பையன் தேனீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும்
தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும் ஓ..
(தித்திக்குதே..)

அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எறிவதும் பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அறைதனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும் நோய் கொண்டு நான் அழுவதும்
அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓ..
(தித்திக்குதே..)
(சில்லென்ற..)

படம்: தித்திக்குதே
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுஜாதா

Thursday, July 24, 2008

607. சந்திரனை தொட்டது யார்Get Your Own Hindi Songs Player at Music Plugin

சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நாந்தானே அடி அடி நாந்தானே
கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே ஆ..
(சந்திரனை..)

பூக்களை செடிக்கொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
பூக்களை செடிக்கொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
பூவை உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்
தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்
கருங்கல்லைப் போன்றவன் கற்பூரம் ஆடிவிட்டேன்
(சந்திரனை..)

தாமரை மலர்கொண்டு செதுக்கிய ஓவியமே
என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை
காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை
சொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லை
முத்தங்கள் நீ வழங்கு இதழுக்கு நேரமில்லை
(சந்திரனை..)

படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், சுஜாதா
வரிகள்: வைரமுத்து


விரும்பி கேட்ட்டவர்: மஜா

606. தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்?
தஞ்சாவூரு ராணி தஞ்சாவூரு ராணி
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்?

பூவா தலையா போட்டு பார்த்தால்
பூவொன்னு விழுந்தது தலையிலே
காயா பழமா கேட்டுப் பார்த்தால்
காயொன்னு கனிஞ்சது கனவிலே
இனி ஒன்னும் ஒன்னுமொன்னா
சேர்ந்து மூனாயிடும்
(தேசிங்கு ராஜா..)

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஓ.. நெனப்புக்கு அளவில்லே
கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே
ஹோ.. கனவுக்கு விலயில்லே
என் மனதில் பாய் மரங்கள் விரியும்
இந்த கப்பல் எந்த திசை அடையும்
என் இதயம் மும்மடங்கு துடிக்கும்
உன் மனதின் பாரம் எண்ணி கரக்கும்
வினா கேட்டேன் விடை வருமே தானா

ஆடும் புலி ஆட்டத்திலே
ஓ.. ஓடும் புலி பக்கத்திலே
ஓட்டைப்பானை திட்டத்திலே
ஓ.. வழியுதே கூட்டத்திலே
என் இதயம் ரயிலும் செய்யும் கலகம்
அது இருப்பு பாதை விட்டு விலகும்
தளைகளை திரும்பியிடும் சரியா
திரிசிங்கு சொர்க்க நிலை இதுதானா
வினா கேட்டேன் விடை வருமே தானா
(தேசிங்கு ராஜா..)

ஹேய்.. சின்ன பொண்ணு
சிரிச்சா நட்சத்திரம் பரிச்சா
நிச்சயத்தை முடிச்சா மேளம் கொட்டட்டும்
சண்டைக்காயே எட்டணா சுமைகூலி பத்தணா
பொண்ண நாங்க கட்டுனா நகை தரணும்
சும்மா ஆடாதே சோழியன் குடுமி
எத்தன பவுன் வேணும் வாங்கிக்க
குல்லா போடாதே மாப்பிள்ளை முறுக்கு
ஜில்லாவுல பாதி தானிப்பிரிக்கணும்
இனி ஒன்னும் ஒன்றும் ஒன்னா சேர்ந்து
மூனா ஆயிடும்
(தேசிங்கு ராஜா..)

படம்: டும் டும் டும்
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரீஷ் ராகவேந்திரா
வரிகள்: நா. முத்துக்குமார்

605. தடக்கு தடக்கு என
தடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை
இனிக்க இனிக்க உயிர் கேட்குது பாட்டு
சொடக்கு சொடக்கு என தடுக்கி தடுக்கி விழ
வெடிக்கும் வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு

மலரோ நனையுது
மனமோ குளிருது
உலகோ கரையுது
சுகமோ பெருகுது
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பேசிட
தகிட தகிச தம்

என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே
இன்னும் கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வா மழையே
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு போ மழையே
நீ தோளில் அல்லவா தொடும் வேளையில
நீ காதல் கொண்டு வா துளி தூரையில
என்னை கொஞ்ச கொஞ்ச
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச
(என்னை கொஞ்ச..)

தோளை தொட்டு தூரல் மொட்டு சின்ன சின்ன ஆசை சொல்லுதே
தேகம் எங்கும் ஈரம் சொட்ட வேட்கம் வந்து ஊஞலிட்டதே
தத்தி தை தை தை வித்தை செய் செய் செய்
முத்தம் வை வை வை முகிலே
அள்ளும் கை கை கை கை அன்பை நெய் நெய்
என்னை மொய் மொய் மொய் தமிழே
அழகிய துளி
அதிசய துளி
தொட தொட பரவசமே
ஆ.. ஆ...
(என்னை கொஞ்ச..)

வாசல் வந்து வாரித் தந்து வள்ளல் என்று பாடிச் செல்ல வா
மூடும் கண்ணை மோதும் உன்னை என்று ஏந்திக்கொல்லவா
என்னை நீ மீட்ட உன்னை நான் தூற்ற செல்லம் ஆவாயா துளியே
வெள்ளை தீ போன்ற வெட்க பூ போல என்னை சூழ்ந்தாயோ கிளியே
அழகிய துளி
அதிய துளி
தொட தொட பரவசமே
ஆ.. ஆ..
(என்னை கொஞ்ச..)

படம்: ஆதி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: யுகபாரதி

604. கத்தீரிக்கா கத்தீரிக்கா
கத்தீரிக்கா கத்தீரிக்கா குண்டு கத்தீரிக்கா
கத்தீரிக்கா கத்தீரிக்கா குண்டு கத்தீரிக்கா
கன்னம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா
கத்தீரிக்கா கத்தீரிக்கா க க க தேரிக்கா

கத்தீரிக்கா கத்தீரிக்கா குண்டு கத்தீரிக்கா
கன்னம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா
எந்த கடையில நீ அரிசி வாங்குற
உன் அழகுல என் உசுர வாங்குற
உம்மை எடை அளவு பாக்கணும் பாக்கணும்
உச்சந்தலைக்கு மேலே தூக்கணும் தூக்கணும்
அழகனே எனக்கு மூச்சு முட்டணும்
(கத்தீரிக்கா..)

குண்டான உடம்பு இழைக்க குதிரை சவாரி செஞ்சால்
குதிரை தான் இழைச்சு போச்சாம் சொன்னாங்க வீட்டில்
ஒத்தையில நீ நடந்தா ஊர்வலம் போகுதுன்னு
ஊருக்குள் பேச்சிருக்கு போகாதே ரோட்டில்
கொழு கொழு தேகத்தில் கொடி போலே பின்னட்டா
குழி விழும் கன்னத்தில் குடித்தனம் பண்ணட்டா
மஞ்சத்தில் மெத்தை வேண்டாம் மார்பில் சாய்ந்து தூங்கட்டா
(கத்தீரிக்கா..)

படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து

603. முதல் பூ எதுவோ


Get Your Own Hindi Songs Player at Music Plugin

முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு
முதல் தேன் எதுவோ அந்த போவோடு
அழகே இதை நான் நினைக்கும்பொழுது
I'm thinking of you

முதல் எழுத்தெதுவோ என் பேரோடு
முதல் சொல்லெதுவோ தாய் மொழியோடு
அதை நான் மறந்தேன் ஐயா ஐயா
I'm thinking of you

I'm thinking of you
I'm thinking of you
I'm thinking of you
I'm thinking of you
I'm thinking of you
(முதல் பூ..)
(முதல் எழுத்தெதுவோ..)

ஜோடியாய் வானவில் தனிமையில் வெண்புறா
பார்த்த்டும் வேளையில்
I'm thinking of you
புல்வெளி பால்நுரை விண்வெளி வைகரை
தேவையே இல்லை
I'm thinking of you
திருவாசகம் கேட்கும்போது
I'm thinking of you
கதை பேசி மணி அடித்தாலும்
I'm thinking of you
அரைநொடிக்கிருமுறை
I'm thinking of you
I'm thinking of you
I'm thinking of you
I'm thinking of you

ஓவியம் மெல்லிசை கற்சிலை கவிதைகள்
அழகாக இல்லையே
I'm thinking of you
ஈரமண் நரைநிலா பூமடல் பனிமலை
உஷ்னமாய் உள்ளது
I'm thinking of you
பதினாறு வயசு பெண்கள் எல்லோருக்கும்
பொதுவான அம்சம் பார்க்கையில்
I'm thinking of you
பைத்தியம் போலவே
I'm thinking of you

I'm thinking of you
Every second
I'm thinking of you
Every minute baby
I'm thinking of you
you're my life
(முதல் பூ..)
(முதல் எழுத்தெதுவோ..)
I'm thinking of you
I'm thinking of you
I'm thinking of you
I'm thinking of you
I'm thinking of you

படம்: வேதம்
இசை: கிஷோர்
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: பா. விஜய்

602. மாயா மாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா

சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ சந்தோஷம் கொண்டாடும் சன்யாஸி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி
(மாயா..)

பட்டும் படாமலே
தொட்டும் தொடாமலே
தாமரை இலை தண்ணீர் போல நீ
ஒட்டி ஒட்டாமலிரு
தாமரை இலை தண்ணீர் போல நீ
ஒட்டி ஒட்டாமலிரு

வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும்
பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும்
உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை
உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை
அவனவன் சொல்வான் ஆயிரம் செய்தி
அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி
அதுக்கென்ன செய்ய அது அந்த பதவியின் வியாதி
உனது கை கால்களே
உதவும் நண்பர்களே
திரைக்கடல் மேல் என்ன துளியினை போல்
நீ ஒட்டி ஒட்டாமலிரு
(மாயா..)

காற்றே போ காற்றே போ
என் காதலனை கண்டு பிடி
கண்ணீரில் கண்ணீரில்
நான் வரைந்த கடிதம் பாடி
மாயை போல் சாயை போல்
காதல் உறவு ஓர் நாளும் ஆவதில்லை
உண்ணோடும் உயிரோடும்
வாழும் அழகு பொய்யாகி போவதில்லை
(காற்றே போ..)
(பட்டும் படாமலே...)
(சந்தோஷி..)

படம்: பாபா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, கார்த்திக்
வரிகள்: வாலி

601. நீ ஒரு தேசம்
Ok Lets get out with it
Hmm yeah yeah you got it
Hmm hmm yeah yeah yeah..
Oh oh yeah

நீ ஒரு தேசம்
நான் ஒரு தேசம்
எல்லை கடந்தால் சந்தோஷம்
நீ ஒரு வாசம் நான் ஒரு வாசம்
இரண்டும் இணைந்தால் உல்லாசம்
எனது கனவுகள் உனது இமையிலே
எனது கவிதைகள் உனது மொழியிலே
எனது சிறகுகள் உனது விரலிலே
எனது களவுகள் உனது இளமையிலே
(நீ ஒரு தேசம்..)

ஓடி விளையாடுவதும் ஓர விழி தேடுவதும்
காதல் என தெரியுது தெரியுது தெரியுது இப்போது
போதும் என பேசுவதும் போனவுடன் ஏசுவதும்
காதல் என புரியுது புரியுது புரியுது இப்போது
நெஞ்சோடு நெஞ்சாக நீ என்னை துண்டாட
அப்பப்பா என் தேகம் தீ ஆனது
அஞ்சாமல் கெஞ்சாமல் நீ என்னை கொண்டாட
அம்மம்மா என் சேலை தாயானதே
எனது குறும்புகள் எடுக்க வந்தது
உனது குறும்புகள் தடுக்க வந்தது

பேசுவது தெரியாமல் கூசுவது புரியாமல்
காதல் சுகம் எதுவென எதுவென எதுவென நனைவோமா
நீ எனது கிளையாக நான் உனத் கிளியாக
சேருவது சுகமென சுகமென சுகமென இணைவோமா
கொத்தோடு கொத்தாக நீ என்னை தொட்டாட
அச்சச்சோ என் ஆசை கரும்பானதே
தட்டாமல் முட்டாமல் பூவோடு வந்தாட
ஐயையோ உன் மீசை எறும்பானதே
எனது ரசனையோ பழக வந்தது
உனது ரசனையோ விலகி சென்றது
(நீ ஒரு தேசம்..)

படம்: அலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, கே கே
வரிகள்: யுகபாரதி

600. ருக்கு ருக்கு ருக்கு


Rukku Rukku - Sujatha, Kamal Hassan

ருக்கு ருக்கு ருக்கு
அரே பாபா ருக்கு
ஓ மை டார்லிங்
மாமி??

ப்யாரி ஜானு கிவ் மீ லுக்கு
ருக்கு ருக்கு ருக்கு
அரே பாபா ருக்கு
ஓ மய் ஜானு, கிவ் மீ லுக்கு
ருக்கு ருக்கு ருக்கு
ஓஹோ பேஷ்...

டில் மெரா தட்பே தெரெ லியே
டில் மெரா தட்பே தெரெ லியே
கஸ்ஸா தேரா வல்லா வல்லா
நக்கரே தேரா உஃப் உஃப் உஃப்
ருக்கு ருக்கு ருக்கு..

தூணுக்குள்ளும் இருப்பாண்டி துரும்பிலும் இருப்பாண்டி
நம்பியவர் நெஞ்சில் நிற்பாண்டி
குங்குமத்த வெப்பாண்டி கொஞ்சி கொஞ்சி நிற்பாண்டி
கொண்டவன் போல் துணை யாரடி
கூசல்கள் வந்தால் dont be angry
பொருமையை காத்தா வாழ்க்கை ஜாங்க்ரி
நல்ல குடும்பம்தான் ஒரு கோயில்
என்றும் தெய்வீகம் வைபோகம் கொண்டாடும் இடமல்லவா

ஹஸ்பண்டுதான் போயாச்சு
சஸ்பெண்டுதான் ஆயாச்சு
ஓராயிரம் என் கேஸுதான்
பட்டதெல்லாம் பட்டாச்சு
தண்ணி ரொம்ப விட்டாச்சு
ஆயிடுத்து டைவோர்ஸுதான்
திருமண வாழ்க்கை தோட்டல் வேஸ்ட்டு
எனக்கதில் இனிமேல் இல்லை டேஸ்ட்டு
ரொம்ப பிடிச்சது அப்பன் வீடு
அன்றும் உல்லாசம் உற்சாகம் உண்டாகும் இடமல்லவா

ஒரு மாது தலைவனை ஒதுக்குதல் தவறு
நெடுங்காலம் நிழல் தர உனக்கேது சுவரு
ஆயிரம் காலம் பயிரை விளைந்தது
அருவடையாகி நேற்றே முடிந்தது
சோகத்தில் உண்டாச்சு கோபம்
அந்த கோபத்தில் யாருக்கு லாபம்?
யார் என்ன சொன்னாலும் dont care
நான் கூண்டுக்குள் சிக்காத free bird
அடி போக போக மாமி பேச்சு புரியும்...

ருக்கு ருக்கு ருக்கு
அரே பாபா ருக்கு
ஓ மை ஜானு கிவ் மீ லுக்கு
ருக்கு ருக்கு ருக்கு

விரல் தாணடி நகங்களும் வளர்வது சரியா?
அதை நாமும் நருக்கிட நினைப்பது பிழையா?
நகத்தினை மனம் போல் நீ தான் நருக்கணும்
ஆயினும் விரலை பிரிந்தா இருக்கணும்?
அம்மாடி ஏன் இந்த போட்டி?
இப்போ என்னாச்சு சொல்லுங்க மாமி?
எப்போதும் லைஃப் பார்ட்னர் வேண்டும்
ஏஜு ஆனாலும் துணை தேட தோன்றும்
அன்பு 5-0 ஆனபோதும் மலரும்
(தூணுக்குள்ளும்..)

ருக்கு ருக்கு ருக்கு
அரே பாபா ருக்கு
ஓ மை ஜானு கிவ் மீ லுக்கு
ருக்கு ருக்கு ருக்கு

படம்: அவ்வை சண்முகி
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, கமல் ஹாசன்

599. சோலைக்குயில் பாடும்


Solai Kuyil Paadum (M) - Sujatha, Hariharan

சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
சோலைக்குயில் பாடும்..
ஹ்ம்ஹூம்.. அப்படி இல்லே..
தானனன னானா னானனனனானா..

சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
ம்ம்.. அப்படித்தான்..

சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா
இதயம் துடிப்பதேன்?
இசையின் லயத்தில் அல்லவா?
அதை உள்ளே கேளு நீயும் பாடு..
(சோலைக்குயில்..)

கொட்டும் மழை முடிந்திட பிறகு
கொடிகளில் இலையில் இருந்து
சொட்டுகின்ற மழையின் துளிகள்
பல கதை சொல்லுமே அதை கண்டுபிடி மனமே
குடங்களை குளத்தில் நிறைத்து
குமரிகள் நடக்கும் பொழுது
குடத்துக்குள் தழுங்கும் அலைகள்
சப்தஸ்வரம் சொல்லுமே
நமக்கெல்லாம் சங்கீதமும் மொழிகளும் வேறன்றோ
பறவைக்கும் விலங்குக்கும் சங்கீதமே மொழியன்றோ
பெண்ணின் கையோடு வலையொலி சங்கீதம்
பெண்ணின் காலோடு கொலுசொலி சங்கீதம்
அந்த வலையும் கொலுசும் சங்கீதம் உனக்கு சொல்லித்தரவா
(சோலைக்குயில்...)

துள்ளி வரும் குழந்தை எடுத்து அள்ளிவைத்து அணைக்கும் போது
நெஞ்சுக்குள்ளே நஞ்சை உதைப்பது சின்ன சுகமல்லவா
அது நெஞ்சுக்கு அழகல்லவா
இதயங்கள் எறியும் பொழுது இதயத்தை புரிந்த ஒருத்தி
இருந்தால் சின்ன சுகமல்லவா
சுற்றமெல்லாம் போன பின்னும் தனிமைதான் சின்ன சுகம்
வெண்ணிலவு போன பின்னும் வெட்டவெளி சின்ன சுகம்
இந்த சங்கீதம் காயத்துக்கு சின்ன சுகம்
இந்த சந்தோஷம் சோகத்திலும் சின்ன சுகம்
ஒரு ஆனந்த பூங்காற்றாய் அள்ளி தருவது இசை இசை அல்லவா
(சோலைக்குயில்..)

படம்: ஆனந்த பூங்காற்றே
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

598. மல்லிகை மல்லிகை பந்தலே


Malligai Malligai Panthale - Sujatha, Vijay Jesudass

மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே

முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
எந்தன் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில

வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தானே
பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)

செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே
தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே
பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி
உன் ஆசையால் இந்த மாற்றம் ஆனேனடி
நிலையான வாழ்க்கை போல வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே
இந்த அருகம்புல்லின் மேல்
பனி துளியாய் நின்றாயே
எந்தன் பருவ தோள்களில்
பச்சை கிளியாய் வாழ்ந்தாயே
என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே

அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே
பசி நேரத்தில் பார்த்த தண்ணீற் பந்தலே
கலங்காதே ஓர் தெப்பம் போல வந்தேனே
நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே
சதை மூங்கில் போலே உந்தன் தேகம் பார்த்தேனே
அதை ஊதி மெல்ல நானும் அணைத்து சாய்த்தேனே
உந்தன் விழியில் கண்டேனே
எந்தன் கனவை கண்டேனே
உந்தன் உள்ளத்தை கண்டேனே
எந்தன் உணவை கண்டேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)
(முந்திரி..)

படம்: அரசு
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: சுஜாதா, விஜய் ஜேசுதாஸ்
வரிகள்: கபிலன்

Wednesday, July 23, 2008

597. அகப்பொருளா நீ அகப்பொருளா
அகப்பொருளா நீ அகப்பொருளா
என உரைத்திதடி என் உயிரே
புரப்பொருளா நீ புரப்பொருளா
என உரைத்திதடி என் உயிரே

அருகினிலே நீ இருந்துவிட்டால்
உன் அகப்பொருளாய் நான் இருப்பேன்
புரப்பட்டுதான் நீ போனப்பின்னே
உன் புரப்பொருளாய் நான் தவிப்பேன்
பூச்செடி நீயானால் உன் வேர் என நான் இருப்பேன்
சூரியன் நீயானால் உன் காய்ச்சலில் நான் இருப்பேன்
அதிகாலை வெண்ணிலா சிரிக்கிறதே
எனை ஆயுள் கைதியாய் அழிக்கிறதே
பசி தூக்கம் யாவையும் மறைக்கிறதே
ஒரு காதல் பைத்தியம் பிடிக்கிறதே
(அகப்பொருளா..)

பூவான உன் தேகம் அதை பூட்டி வைத்தால் பாவம்
இவள் வாசனை கண்டு உன் வயதை கிண்டும் வண்டு
நீ நானென என மாறீனால் இனி ரெண்டு வாழ்க்கை ஏதேது
தாமரை இலை மீதிலே மனம் தண்ணீர் கண்டேனே இன்று
பூஜையில் பூஜையில் பூவை தின்று எனை மென்று
(அருகினிலே நீ..)

கம்பன் வீட்டினில் உள்ள ஒரு கவிதை ஓலை நீதான்
உன் தோளில் தினம் தூங்கும் ஒரு குழந்தை போல ஆனேன்
என்னை நீ கிள்ளும் போது நான் உன் பேர் சொல்லி அழுவேன்
உன் கண்களில் உள்ள பார்வை தான் அது காதல் என்று காட்டாதோ
உன்னை நான் உன்னை நான் ஊட்டி விடவேண்டும் என்பேன்
உன்னை நான் உன்னை நான் வாயை வாயாலே தின்பேன்
(அகப்பொருளா..)

படம்: ஆஞ்சனேயா
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்

596. மலரே ஒரு வார்த்தை பேசுமலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று என்பது காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா

விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே

வார்த்தையாடி பார்த்த போது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் சேர்ந்தபோது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை

மலர்களை எறிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை

கண்ணில் ஆசை துடிக்குதே
அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை
வெட்கம் பாடாத பூக்களை
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும்
சாயம் போகாதடி
(மலரே..)

பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள்
தீண்ட மட்டும்
அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதைகள் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது
இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அழியாது
இதயம் எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது

ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
நீ எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்
கைகள் தொடாமல் கன்னி
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்
(மலரே..)

படம்: பூமகள் ஊர்வலம்
இசை: சிவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

595. ஒரு பொய்யாவது சொல் கண்ணே
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நாந்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
(ஒரு பொய்யாவது..)

பூக்களில் உன்னால் சத்தம்
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்

இரவினைத் திரட்டி.........ஆ.....
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ...
விண்மீன், விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் தீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம், தங்கம் பூசி தோல் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
(ஒரு பொய்யாவது..)
(உண்மையும்..)

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
கானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
(ஒரு பொய்யாவது..)

படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சுஜாதா /ஹரிஹரன்

594. காதல் நீதானா
காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தனம் நனைந்ததே குங்குமம்
என் வானமும் என் பூமியும் உன்னிடம்
(காதல் நீதானா..)

எந்த குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது?
நேரில் பார்க்கச் சொல்லி என்னை தூண்டுது அது என்னை தீண்டுது
கேட்காத குயில் ஓசை கேட்குதே உன் வார்த்தயில்
நாம் பேசும் சொல்லும் கவிதை ஆகுதே நம் காதலில்
கேலண்டரில் தேத்ஹிகளை என்னுகின்றேன் நாளும்
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்
(காதல் நீதானா..)

என்ன கனவு கண்டாய் நீ வந்தாய் முத்தம் தந்தாய்
பதிலுக்கென தந்தாய் போ போ போ சொல்ல மாட்டேன் போ
கனவில் நீ செய்த குறூம்பை நேரிலே நான் செய்யவா?
கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா?
பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்
சொர்க்கத்திலே சேர்கின்றதே உன் ஞாபகம்..
(காதல் நீதானா..)

படம்: டைம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்: பழனிபாரதி

593. உனக்கென உனக்கென பிறந்தேனே
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
(உனக்கென..)

திருவிழா போல காதல்தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா
ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை
தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் சொல்ல கேட்கிறேன்
அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே
(உனக்கென..)

கடலாக நீயும் மாறினால்
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்
அறிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்
பகல் தீபமாகி ஆகாய நிலவை
உறவோடு பார்க்கிறேன்
அடி பொய் என்றபோதும் உன்னோடு பேசும்
கனவுகள் வேண்டுகிறேன்
(உனக்கென..)

படம்: விண்ணுக்கும் மண்ணுக்கும்
இசை: சிற்பி
பாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம்

Last 25 songs posted in Thenkinnam