Tuesday, July 8, 2008

548.அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்

ஆண் : அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
பெண் :ஆஆஆஅ
ஆண்: அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அம்புவியின் மீது நாம்
அணி பெரும் ஓர் அங்கம்


இன்பம் தரும் தேன்நிலவு
இதற்குண்டோ ஆதங்கம்
ஏகாந்த வேளை வெக்கம் ஏனோ

வா என் பக்கம் ( ஏகாந்தா வேளை)

(அன்பாலே தேடிய)

உடல்நான் ஆ உரம் நீ -ம்ஹூம்..

உடல் நான் அதில் உளம் நீ
என உறவு கொண்டோம் நேர்மையால்
ஆஆஅ (உடல்நான்)
கடல்நிலவாய் காட்சியிலே கலந்து நின்றோம்
ப்ரேமையால்
இருவரும் : ஆஆஆஆஆ
குணம் நிறை மாற்றறியா பொன்னே
சொல் ஏன் ஜாலம்
போனால் வராது இது போல
காலம் இனி
ஆஆஆஅ(போனால் வராது)
( அன்பாலே தேடிய)

Get this widget | Track details | eSnips Social DNA


பாடலைப்பாடியவர்கள் : cs ஜெயராமன், ஜானகி
திரைப்படம் : தெய்வப்பிறவி
பாடலைஇயற்றியவர்: உடுமலை நாராயன கவி
இசையமைத்தவர் : ஆர். சுதர்சன்


2 Comments:

முகவை மைந்தன் said...

அன்பாலே...
தேடிய என் அறிவுச் செல்வம்
தங்கம்

இப்படி நிறுத்தி, நிறுத்திப் பாடும் பாணி... ஆகா வெகு அற்புதம். இளமை தொலைந்து நாளானது இப்ப ரொம்ப உறுத்துது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி முகவை மைந்தன்
எல்லா பாட்டையும் கேட்டு தொடர்ந்து பின்னூட்டி ஊக்கமூட்டுகிறீர்கள்.. மகிழ்ச்சி.

Last 25 songs posted in Thenkinnam