Friday, July 25, 2008

610. ஆலங்கட்டி மழை




ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா? ஹச்..
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா? ஹச்..
(ஆலங்கட்டி..)

சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா?
சின்ன சின்ன சண்டை சமாதனமாச்சா? ஹச்
இப்ப பழச மறந்து கதைக்க வந்தாச்சா?
என்ற விசனம் மறந்து காத்தோடு போயாச்சா?

ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும்
ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா

குளம் காட்டும் வெண்ணிலவாய் அழகான நம் குடும்பம்
கல் ஒன்று விழுவதால் கலையலாமா?
கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய்
அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே
சித்தன வாசல் சிற்பங்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ
அன்பென்னும் உளி பட்டால் பாறை சிலை ஆறுமே
பித்து குழலுக்கு தேங்காய் பூவ போல
ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது
சொந்தத்தை தினம் சந்திக்க
அவர் நிழல் கூட ஏங்குது
(ஐயோடா..)

ஆற்றோர நாணல் அது காற்றோடு கை குலுக்க
நட்போடு நாமும் அதை கொஞ்சலாம் நில்
பனையில பழம் பறிச்சு விதையில் தென்ன வளர்க்க
ஆறேனும் ஆசை பட்டால் ஆகுமோ சொல்
ஒருவர் புன்னகை மற்றவர் முகம் அதில் பூக்குமே
உள்ளங்கையின்ற ரேகைகள் பலன் ஒன்றாகுமே
அனைவரும் இங்கு நடந்திடும் போது
ஒரு நிழல் மட்டும் தெரிவதென்ன
கவிதை போல் உள்ள குடும்பத்தில்
நானுமொரு வார்த்தை ஆகலாமோ
(ஆலங்கட்டி..)
(ஐயோடா..)

படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, கமல் ஹாசன்
வரிகள்: கலைகுமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam