Wednesday, July 23, 2008

596. மலரே ஒரு வார்த்தை பேசு



மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று என்பது காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா

விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே

வார்த்தையாடி பார்த்த போது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் சேர்ந்தபோது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை

மலர்களை எறிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை

கண்ணில் ஆசை துடிக்குதே
அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை
வெட்கம் பாடாத பூக்களை
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும்
சாயம் போகாதடி
(மலரே..)

பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள்
தீண்ட மட்டும்
அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதைகள் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது
இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அழியாது
இதயம் எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது

ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
நீ எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்
கைகள் தொடாமல் கன்னி
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்
(மலரே..)

படம்: பூமகள் ஊர்வலம்
இசை: சிவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam