Friday, July 11, 2008

553காலதேவனும் கலைரசிகனும்கவிஞர் கண்ணதாசன்திரு. எஸ்.எஸ்.ராஜேந்திரன்பத்மபூஷன் பி.சுசிலாஸ்ரீமதி. வசுந்தரா தேவிஸ்ரீமதி.வைஜயந்தி மாலாஸ்ரீமதி. எம்.எஸ்.சுந்தரிபாய்ஸ்ரீமதி. எம்.ஜி.ராஜகாந்தம்

காலதேவனும் கலைரசிகனும் >> வானொலியில்

Get this widget | Track details | eSnips Social DNA


தமிழ்மண இணையதள பதிவாளர்கள் மற்றும் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் ஒரு அதிசயாமான, அபூர்வமான பாடல் ஒலித் தொகுப்பு கேட்க ஓர் வாய்ப்பு. ஆமாம் வாசகர்களே இது ஒரு அபூர்வமான பதிவு இந்த ஒலிக்கோப்பை கேட்க நேரமில்லை என்ற ஒரு காரணத்தை சொல்லி சென்றால் பல தகவல்கள் நீங்கள் தெரிந்துகொள்வதை இழந்துவிடுவீர்கள். இதை கேட்ட பிறகு நீங்களும் மனப்பூர்வமாக நான் சொல்வதைஏற்றுக்கொள்ளுவீர்கள்.

தேன்கிண்ணத்தில் பாடும் நிலா பாலு பதிவாளர்களுக்கு இங்கே என்ன வேலை என்று
நினைக்கிறீர்கள்? என்னையும் ஒரு பதிவாளனாக ஏற்றுக்கொண்ட இந்த தேன்கிண்ணம்
பதிவாளர் குழுவிற்க்கு நன்றி. இந்த பதிவாளர்களூக்கும் இதன் நேயர்களுக்கும் நான் ரசித்த
பாலுஜி அல்லாத பாடகர்கள் பாடிய அபூர்வமான, இனிமையான பாடல்களை நான் ரசித்ததை
வழங்குகிறேன். பழைய பாடல்கள் அபூர்வமான பொக்கிஷங்களை அனுபவிக்காமல்
யாரும் புதியதாக வரமுடியாது இது என் என்னம். என் கருத்தையே தெரிவித்த ஏன் இந்த
பதிவில் இறுதியில் படைப்பாளி காசக்காரனூர் திரு. ராஜ்குமார் அவர் காலதேவனிடம்
உரையாடி தன் என்னத்தை தெரிவிக்கும் வார்த்தைகள் இவை ”தமிழ் சினிமாவில அவசியம், அவசியம் இல்லாதது என எதையுமே ஒதுக்கி தள்ளமுடியாது, நிகழ் காலத்தில புகழ் உச்சியில இருக்கிறவங்கல கொண்டாடடறதும், கலைத்துறையில சாதிச்சவங்களையும், கலைக்காகவே தன்னை அற்பனம் செஞ்சுக்கிட்டவங்களையும் கண்டுகாம இருக்கிறவங்களை நினைச்சாதான் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.” அதற்கு காலதேவன் சொன்ன வரிகள் “ராஜ்க்குமார் யாரெல்லாம் புகழின் உச்சியில் நின்றிருக்கிறார்களோ அவர்களெல்லாம் சில காலங்களில் என்னுடைய காலச்சக்கரத்தில் காணாமல் போவார்கள்” இது போன்ற லட்சகனக்கான மனிதர்களை என் கோடிக்கனகான அனுபவங்களில் நான் சந்தித்து இருக்கிறேன் இனியும் சந்திப்பேன்” என்று சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மேற்கண்ட பதிவு “இனிய இரவு இரவின் மடியில்” சூரியன் பண்பலையின் வானொலியின் ஒரு நிகழ்ச்சியாக இரவு நேரத்தில் ஒலிப் பரப்பப்ட்டது. அதில் கேட்பவர்களின் எல்லோர் மனதையும் மிகவும் கவர்ந்தவர் ”டிஜ்ஜிடல் குரலோன்” பண்பலையின் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷிமி நாராயணா அவர்கள். அப்படியே உலக அளவிலும் இசைபிரியர்களின் மனதை கொள்ளைகொண்டுபோனவர். இந்த பதிவில் மிகவும் சிறப்பானது காலதேவன் சிரிக்கும் சிரிப்புதான் அவை “டிஜ்ஜிடல் குரலோன்” என்று அன்புடன் அழைக்கும் கோவை ரசிகர்கள் சரியாக பொருத்தமாக தான் வைத்துள்ளார்கள் கேட்டுதான் பாருங்களேன்.

இதோ, ”டிஜ்ஜிடல் குரலோன்” குரலில் மற்றுமொரு ஒலித்தொகுப்பு தான் “கால தேவனும் கலை ரசிகனும்” கேளுங்கள் நிச்சயம் உங்கள் புருவங்கள் வில்லாக வளையப்போவது நிச்சயம். இந்த ஒலித்தொகுப்பின் எழுத்து, எண்ணம், ஆக்கம் கலைஉலக ரசிகன் இசைப் பிரியன் சேலம் மாவட்டம், காசக்கரனூர் திரு. ராஜ்குமார் அவர்களின் படைப்பு தான் இவை. இவர் ஏற்கெனவே இது போன்ற பல ஒலித்தொக்குப்புகள் வழங்கியிருக்கிறார். இவரின் ஏழு மாதங்களாக கடினமாக தேடி அழைந்து சேகரித்த அபூர்வமான சினிமா பாடல்களின் தகவல்களை நமக்காக வழங்கியிருக்கிறார். இந்த ஒலித்தொக்குப்பில் அவரின் அபரிமிதமான கடின உழைப்பு நாடகத்தில் ஸ்பாட் லைட் போடுவது போல் நன்றாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அவன் இந்த கடினமான உழைப்பை பாராட்ட சாதாரணமான வார்த்தைகளை வாழ்த்துக்களை தவிர்த்து பதிய வார்த்தைகளை எவ்வளவோ முயற்சி செய்து தேடினேன் கிடைக்கவில்லை. ஹி.. ஹி.. ஹி.. புதியதாக வாழ்த்த வார்த்தைகளையே இவர்தான் தேடித்தர வேண்டுமோ என்னவோ? ராஜ்குமார் சார் உங்கள் பதிவு அபாரம்.. அபாரம்.. அபாரம். உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.

ஆமாம், நான் மட்டுமல்ல தற்போத இணைய நண்பர்கள் எவருமே கேட்டிராத பாடல்கள் தகவல்கள் இவை. எல்லாமே நான் இந்த மண்ணில் அடிஎடுத்து வைக்கும் முன்னால் உருவாகிய படைப்புக்கள். நான் அதிகம் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க போவதில்லை. திரு.ராஜ்குமாரின் படைப்பை “டிஜ்ஜிடல் குரலோன்” ஆர்.ஜி. லக்‌ஷ்மி நாராயணா அவர்களின் குரலில் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காதவை. “காலதேவனாக” அவரின் குரல் என்னவொரு பொருத்தம் அப்படியே பிரமிக்க வைக்கிறது. அந்த பாத்திரத்திற்க்கு இந்த குரலை விட்டால் எந்த குரலும் பொருந்தாது. தற்போது சினிமாக்களில் தான் பாடல்காட்சிகளில் அதிகம் சிலவு செய்து பிராமாண்டமாக எதையும் ஆச்சரியப்படுத்தவைப்பார்கள். பாடல் காட்சியில் மட்டுமல்ல பாடல் அறிவிப்பிலும் ஒரு பிரமாண்டத்தை உணரசெய்யமுடியும் என்பதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு திரு. ஆர்.ஜி.எல்.என் சார் அவர்கள் மட்டும் தான். இந்த பதிவில் ராஜ்குமார் கேள்விகளுக்கு பதில் தரும் அறிவிப்பாளர் திரு.ராஜா அவரும் ஒரு வித்தியாசமான குரல் இனிமையை கொண்டவர் அவரின் பேச்சு திறமையும் இதில் மிகவும் அழகாக இருக்கிறது.

உங்களை நான் அதிகம் சோதிக்க விரும்பவில்லை ”காலதேவனும் கலை ரசிகனும்” ஒலித்தொகுப்பை கேட்கும் முன் இதோ இந்த சிறிய ஒலித்தொகுப்பை கேட்டுவிடுங்கள். சேலம் மாவட்டம், காசக்காரனூர், 20/212 இலக்கத்தில் கிராமத்தில் வசிக்கும் திரு. ராஜ்குமார் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு.ராஜ்குமார் விருப்பபாடலான இளையராஜா பாடிய இதயம் ஒரு கோவில் அவரின் அபாரமான உழைப்புக்கு என் சமர்ப்பணம்.
Get this widget | Track details | eSnips Social DNA

5 Comments:

G.Ragavan said...

வாங்க வாங்க. தேன் கிண்ணத்திற்கு உங்கள வாங்க வாங்கன்னு வரவேற்கிறேன். :)

இந்தத் தொகுப்பு ரொம்பப் பிரமாதம். குறிப்பாக காலதேவன் ராஜகுமார் உரையாடல். நல்ல அமைஞ்சிருக்கு.

ஆனா அத்தோட சேத்து அபூர்வப் பாடல்களைக் குடுத்திருக்கீங்களே..அது...அது இன்னும் சிறப்பு.

கவியரசர் கண்ணதாசனையும் இசையரசி பி.சுசீலாவையும் தெரியாத இசையன்பர்கள் இருக்க முடியாது. ஆனா அவங்க மொதப் பாட்டு? அதையும் கேட்கும் வாய்ப்பைக் கொடுத்தமைக்கு நன்றி.

வைஜயந்திமாலாவின் அம்மாவாகிய வசுந்தராதேவி அவர்களின் பாட்டும் சுந்தரிபாயின் பாட்டும் கூட இப்பொழுதுதான் கேட்கிறேன். கேள்வியும் படுகிறேன்.

இது போன்ற இன்னிசையமுதங்கள் தேன் கிண்ணத்தில் தொடர வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

Covai Ravee said...

ஜி.ஆர் சார், வணக்கம்.

//வாங்க வாங்க. தேன் கிண்ணத்திற்கு உங்கள வாங்க வாங்கன்னு வரவேற்கிறேன்//

ஆமாங்க ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன். நன்றி.

//இது போன்ற இன்னிசையமுதங்கள் தேன் கிண்ணத்தில் தொடர வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.//

நீங்க சொன்னமாதிரி இது போன்ற இன்னிசையமுதங்கள் கிடைப்பதே மிக அபூர்வம் எனது நண்பர் திரு. ராஜ்குமார் அவர்கள் சிரமப்பட்டு தேடி பிடித்து இந்த நிகழ்ச்சி தொகுத்து ரேடியோ நிலயத்திற்க்கு வழங்கினார். அவரின் அபார உழைப்பை நாம் வாழ்த்தியே தீரவேண்டும். வருகைக்கு நன்றி.

கானா பிரபா said...

அருமையான அரிய பாடல்கள் கொண்ட இசைத் தொகுப்பு ரவி சார்.

பொதுவா எப் எம் ரேடியோக்களில் ரீமிக்ஸ் அட்டகாசம் தான் இருக்கும் என்ற கூற்றை மாற்றி விட்டது உங்க இசைத் தொகுப்பு. சில பாடல்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இன்று தான் கேட்கக் கூடியதாக இருக்கிறது, அதற்கும் நன்றி.

காலதேவன் பாணி வானொலி அமைப்பு வித்தியாசமான, புதுமையான பாணி.

Covai Ravee said...

பிரபா சார் வணக்கம்

//பொதுவா எப் எம் ரேடியோக்களில் ரீமிக்ஸ் அட்டகாசம் தான் இருக்கும் என்ற கூற்றை மாற்றி விட்டது உங்க இசைத் தொகுப்பு. சில பாடல்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இன்று தான் கேட்கக் கூடியதாக இருக்கிறது, அதற்கும் நன்றி.//


உங்கள் முழுமையான வாழ்த்துக்கள் சேலம் திரு.ராஜ்குமார். திரு. ஆர்.ஜி.எல்.என் சாருக்கு போய் சேரவேண்டும். மேலும் நட்சத்திர வாரம் போய்கொண்டு இருக்கும் தேன்கிண்ணத்தில் இந்த பதிவை எப்படி நடுவில் நுழைப்பது என்ற பல யோசனைகளூக்கு நடுவே பயந்துகொண்டேதான் பதிந்தேன். யாரவது மறுப்பு தெரிவித்தால் ட்ராப்டில் கொண்டு போய்விடலாம் என்று கூட நினைத்தேன். நல்ல விஷயங்கள் தள்ளிப்போடக்கூடது நினத்த உடனே செய்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் உடனே பதிந்து விட்டேன். ஜி.ஆர். மற்றும் உங்களை போல இசைப்பிரியர்கள் இந்த பதிவை கேட்டு வாழ்த்தினால் படைத்தவருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் இன்னும் பல பேர் வருவார்கள் என்று நினைக்கிறேன். உங்கள் மறுமொழிக்கு நன்றி.

Anonymous said...

Dear Covai Ravee sir,

This is incredible !You have kept each and every songs as per text book standards and i have no hesitation to appreciate your dedication,hardwork and above all deep knowledge in Tamil songs. Guruji had sung 37000 plus songs. Like our beloved guruji , his sincere parama rasigar is also aiming a big target !I wish and pray that you will get an internationl award for your perfection in these works.

Thanks and Regards,
Tha.Vu.Udhayabhanu

Last 25 songs posted in Thenkinnam