Monday, July 21, 2008

569. அழகூரில் பூத்தவளே...




அழகூரில் பூத்தவளே...
என்னை அடியோடு சாய்த்தவளே...
மலையூரில் சாரலிலே.. என்னை மார்ப்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்

ம்ஹ்ம்ஹ்ம்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ம்.
ம்ஹ்ம்ஹ்ம்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ம்.

அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சா..ய்..த்..த..வளே

நீயுடுத்தி போட்ட உடை.. என் மனதை மேயுதடா

நீ சுருட்டி போட்ட முடி.. மோதிரமாய் ஆகுமடி

இமையாளே நீ கிழிக்க இதழாலே நான் அளிக்க
கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே

சடையாலே நீ இழுக்க.. இடைமேலே நான் வழுக்க
காச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே

என்னை திரியாக்கி.. உன்னில் விளக்கேற்றி..
என்னாலும் பார்த்திருப்போம்

ஹோய்.. ஹோய்..
அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே

நீ முறிக்கும் சோம்பலிலே.. நான் ஒடிஞ்சு சாய்ஞ்சிடுவேன்

நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே.. நான் இறங்கி தூங்கிடுவேன்

குறிலாக நான் இருக்க.. நெடிலாக நீ வளர்க்க
சென்னைத்தமிழ், சங்கத்தமிழ் ஆனதடி

அறியாம நான் இருக்க.. அழகாக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை தூருமடா

என்னை மறந்தாலும், உன்னை மறவாத
நெஞ்சோடு நான் இருப்பேன்

ஹொய் ஹொய் ஹொய்.. அன்பூரில் பூத்தவனே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் மலையூரின் சாரலிலே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை மார்ப்போடு சேர்த்தவளே

உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்த்தேன்

உயிர் நூலில் கோர்த்து.. உதிராமல் காப்பேன்..

படம்: திருமலை
இசை: வித்யாசகர்
பாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம்
வரிகள்: பா. விஜய்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam