Monday, July 28, 2008

625. பறவையே எங்கு இருக்கிறாய்




என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லெட்டர்
Still i remember my first letter

பிரபா,

நீ என்னை தேடியிருப்பேன்னு எனக்கு தெரியும்
நானும் அம்மாவும் இங்க மகாராஷ்ட்ராவில தூரத்து மாமா வீட்டுல இருக்கறோம்
நீ வர்றதுக்கோ லெட்டர் எழுதறதுக்கோ ஏத்த சமயம் வர்றப்ப நான் சொல்றேன்
நேரத்துக்கு சாப்பிடு
வாரத்துக்கு மூணு நாளாவது குளி
அந்த சாக்ஸை துவைச்சு போடு
நகம் கடிக்காத
கடவுள வேண்டிக்கோ
-ஆனந்தி


பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே

அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீதானே
பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக


(பறவையே எங்கு இருக்கிறாய்)


உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடுவானம் போலவே
கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்

இந்த புல் பூண்டும் பறவை யாவும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?

முதல்முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே

ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி உடையாமல்
உருண்டோடும் நதியாகிடுவோம்
இதோ இதோ இந்த பயணத்திலே
இதுபோதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்

இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா?
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா?


முதல்முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே



படம்: கற்றது தமிழ்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: இளையராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam