உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதில் பாதியும் போக!
உன் இமைகளின் கண் இமைகளின்
மின் பார்வையில் மீதியும் தேய!
ம்… இன்று நேற்று என்றும் இல்லை
என் இந்த நிலை.
ம்… உன்னை கண்ட நாளிருந்தே
நான் செய்யும் பிழை.
(உன் சிரிப்பினில்..)
உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்.
இதழின் விளிம்பு துலிர்க்கும்
என் இரவினை பனியில் நனைக்கும்.
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே!
ஒரு முறை அல்ல முதல் முறை அல்ல
தினம் தினம் என்னை சூழும் தீ!
(உன் சிரிப்பினில்..)
முதல் நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு!
உறக்கம் விழிப்பில் கனவாய்,
உன்னை காண்பதே வழக்கம் எனக்கு!
அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்.
முதல் முதல் இன்று நிகழ்கிறதென்று
நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே!
(உன் சிரிப்பினில்..)
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: கௌதமி ராவ், ரோப்பி
வரிகள்: தாமரை
Friday, July 18, 2008
564. உன் சிரிப்பினில்
பதிந்தவர் MyFriend @ 10:00 PM
வகை 2000's, கௌதமி ராவ், தாமரை, ரோப்பி, ஹாரிஸ் ஜெயராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment